திருத்தந்தையின் ஆட்சி பெயர்
திருத்தந்தையின் ஆட்சி பெயர் என்பது திருத்தந்தையாக தேர்வு செய்யப்படும் நபர் தனக்கென தெரிவு செய்யும் ஒரு புதிய பெயரினைக்குறிக்கும். ஆறாம் நூற்றாண்டு முதல், சிலர் திருத்தந்தையாக பதவி ஏற்பதற்கு முன் தங்களின் பெயரை மாற்றிக்கொண்டனர். 10 ஆம் நூற்றாண்டில் இது ஒரு வழக்கமாகவே மாறியது, மேலும் 16ஆம் நூற்றாண்டு முதல் ஆட்சி செய்த எல்லா திருத்தந்தையரும் தங்களின் பெயர்களை மாற்றிக்கொண்டுள்ளனர்.
முதல் நூற்றாண்டுகளில், உரோமை ஆயர்கள் தங்கள் தேர்வுக்குப்பின் தங்களின் திருமுழுக்கு பெயரினையே பயன்படுத்தி வந்தனர். ஒரு புதிய பெயரை தேர்ந்தெடுக்கும் வழக்கமானது கி.பி. 533இல் திருத்தந்தையான இரண்டாம் யோவானிலிருந்து தொடங்கியது. இவர்தம் இயற்பெயர் "மெர்க்கூரியஸ்" என்னும் உரோமை புராணக்கடவுளான பெர்குரியின் பெயரான மெர்க்கூரியஸ் ஆகும். இதனால் இவர் அதைப் பயன்படுத்தாமல் யோவான் என்னும் பெயரை ஏற்றார்.
கடைசியாக தனது திருமுழுக்கு பெயரை மாற்றாதவர் 1555இல் திருத்தந்தையான இரண்டாம் மர்செல்லுஸ் ஆவார். அக்காலத்திலும் கூட இது மிகவும் அசாதாரணமான ஒன்றாக கருதப்பட்டது.
திருத்தந்தையின் ஆட்சி பெயர் பட்டியல்
தொகு# | பெயர் | # | திருத்தந்தையர்கள் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1. | யோவான் | 21 | I · II · III · IV · V · VI · VII · VIII · IX · X · XI · XII · XIII · XIV · XV · XVI · XVII · XVIII · XIX · XX · XXI · XXII · XXIII | இருபத்திமூன்றாம் யோவான் இப்பெயரை கடைசியாக சூட்டிக்கொண்டவர் ஆவார். 13ஆம் நூற்றாண்டில் "யோவான்" என்ற பெயர்கொண்ட திருத்தந்தையரை எண்ணியதில் குழப்பம் ஏற்பட்டது. இருபதாம் யோவான் என்னும் பெயர்கொண்ட திருத்தந்தை ஒருவர் இருக்கவில்லை என்று பின்னர் தெரியவந்தது. பதினாறாம் யோவான் எதிர்-திருத்தந்தையாகக் கருதப்படுகின்றார். |
2. | கிரகோரி | 16 | I · II · III · IV · V · VI · VII · VIII · IX · X · XI · XII · XIII · XIV · XV · XVI | |
3. | பெனடிக்ட் | 15 | I · II · III · IV · V · VI · VII · VIII · IX · X · XI · XII · XIII · XIV · XV · XVI | இப்பெயரை கடைசியாக சூட்டிக்கொண்டவர் பதினாறாம் பெனடிக்ட் ஆவார். பத்தாம் பெனடிக்ட் எதிர்-திருத்தந்தையாகக் கருதப்படுகின்றார். |
4. | கிளமெண்ட் | 14 | I · II · III · IV · V · VI · VII · VIII · IX · X · XI · XII · XIII · XIV | |
5. | இன்னசெண்ட் | 13 | I · II · III · IV · V · VI · VII · VIII · IX · X · XI · XII · XIII | |
6. | லியோ | 13 | I · II · III · IV · V · VI · VII · VIII · IX · X · XI · XII · XIII | |
7. | பயஸ் | 12 | I · II · III · IV · V · VI · VII · VIII · IX · X · XI · XII | |
8. | ஸ்தேவான் | 9 | I · II · III · IV · V · VI · VII · VIII · IX | ஸ்தேவான் (தேர்வான திருத்தந்தை) திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டு ஆயர்நிலை திருப்பொழிவு பெறுவதற்கு முன் இறந்ததால் கத்தோலிக்க திருச்சபையின் பட்டியலில் திருத்தந்தையாக எண்ணப்படுவதில்லை. இவருக்குப்பின் இரண்டாம் ஸ்தேவான் திருத்தந்தையானார். |
9. | போனிஃபாஸ் | 8 | I · II · III · IV · V · VI · VII · VIII · IX | இப்பெயரை கடைசியாக சூட்டிக்கொண்டவர் ஒன்பதாம் போனிஃபாஸ் ஆவார். ஏழாம் போனிஃபாஸ் எதிர்-திருத்தந்தையாகக் கருதப்படுகின்றார். |
10. | அர்பன் | 8 | I · II · III · IV · V · VI · VII · VIII | |
11. | அலெக்சாண்டர் | 7 | I · II · III · IV · V · VI · VII · VIII | இப்பெயரை கடைசியாக சூட்டிக்கொண்டவர் எட்டாம் அலெக்சாண்டர் ஆவார். ஐந்தாம் அலெக்சாண்டர் எதிர்-திருத்தந்தையாகக் கருதப்படுகின்றார். |
12. | ஹேட்ரியன் | 6 | I · II · III · IV · V · VI | |
13. | பவுல் | 6 | I · II · III · IV · V · VI | |
14. | செலஸ்தீன் | 5 | I · II · III · IV · V | |
15. | நிக்கோலாஸ் | 5 | I · II · III · IV · V | |
16. | சிக்ஸ்துஸ் | 5 | I · II · III · IV · V | |
17. | அனஸ்தாசியுஸ் | 4 | I · II · III · IV | |
18. | யூஜின் | 4 | I · II · III · IV | |
19. | ஹோனோரியுஸ் | 4 | I · II · III · IV | |
20. | செர்ஜியுஸ் | 4 | I · II · III · IV | |
21. | கலிஸ்டஸ் | 3 | I · II · III | |
22. | ஃபெலிக்ஸ் | 3 | I · II · III · IV · V | இப்பெயரை கடைசியாக சூட்டிக்கொண்டவர் நான்காம் ஃபெலிக்ஸ் ஆவார். இரண்டாம் ஃபெலிக்ஸ் மற்றும் ஐந்தாம் ஃபெலிக்ஸ் எதிர்-திருத்தந்தைகளாகக் கருதப்படுகின்றார். |
23. | ஜூலியுஸ் | 3 | I · II · III | |
24. | லூசியஸ் | 3 | I · II · III | |
25. | மார்ட்டின் | 3 | I · II · III · IV · V | இப்பெயரை கடைசியாக சூட்டிக்கொண்டவர் ஐந்தாம் மார்ட்டின் ஆவார். மரீனுஸ் மற்றும் மார்ட்டின் என்னும் பெயர்களுக்கிடையே இருந்த குழப்பத்தால் "இரண்டாம்" மற்றும் "மூன்றாம்" வரிசை எண்களை விடுத்து நான்காம் மார்ட்டின் என்று ஒரு திருத்தந்தை பெயர் ஏற்றுக்கொண்டார்.[1] |
26. | சில்வெஸ்தர் | 3 | I · II · III | |
27. | விக்டர் | 3 | I · II · III | |
28. | ஆதேயோதாத்துஸ் | 2 | I · II | |
29. | அகாப்பெட்டஸ் | 2 | I · II | |
30. | தாமசுஸ் | 2 | I · II | |
31. | ஜெலாசியுஸ் | 2 | I · II | |
32. | அருள் சின்னப்பர் | 2 | I · II | |
33. | மர்செல்லுஸ் | 2 | I · II | |
34. | மரீனுஸ் | 2 | I · II | |
35. | பாஸ்கால் | 2 | I · II | |
36. | பெலாஜியுஸ் | 2 | I · II | |
37. | தியடோர் | 2 | I · II | |
38. | ஆகத்தோ | 1 | ||
39. | அனகிலேத்துஸ் | 1 | ||
40. | அனிசேட்டஸ் | 1 | ||
41. | அந்தேருஸ் | 1 | ||
42. | காயுஸ் | 1 | ||
43. | கோனோன் | 1 | ||
44. | கான்ஸ்டண்டைன் | 1 | ||
45. | கொர்னேலியுஸ் | 1 | ||
46. | தியோனீசியுஸ் | 1 | ||
47. | டோனுஸ் | 1 | ||
48. | எலூத்தேரியுஸ் | 1 | ||
49. | யூசேபியஸ் | 1 | ||
50. | யுட்டீக்கியன் | 1 | ||
51. | எவரிஸ்துஸ் | 1 | ||
52. | ஃபேபியன் | 1 | ||
53. | ஃபொர்மோசுஸ் | 1 | ||
54. | ஹிலாரியுஸ் | 1 | ||
55. | ஹோர்மிஸ்டாஸ் | 1 | ||
56. | ஹைஜீனஸ் | 1 | ||
57. | லாண்டோ | 1 | ||
58. | லிபேரியஸ் | 1 | ||
59. | லைனஸ் | 1 | ||
60. | மர்செல்லீனுஸ் | 1 | ||
61. | மாற்கு | 1 | ||
62. | மில்த்தியாதேஸ் | 1 | ||
63. | புனித பேதுரு | 1 | ||
64. | போன்தியன் | 1 | ||
65. | ரொமானுஸ் | 1 | ||
66. | சபீனியன் | 1 | ||
67. | செவெரீனுஸ் | 1 | ||
68. | சில்வேரியுஸ் | 1 | ||
69. | சிம்ப்ளீசியுஸ் | 1 | ||
70. | சிரீசியஸ் | 1 | ||
71. | சிசினியுஸ் | 1 | ||
72. | சொத்தேர் | 1 | ||
73. | சிம்மாக்குஸ் | 1 | ||
74. | டெலஸ்ஃபோருஸ் | 1 | ||
75. | வாலண்டைன் | 1 | ||
76. | விஜீலியுஸ் | 1 | ||
77. | வித்தாலியன் | 1 | ||
78. | சக்கரியா | 1 | ||
79. | செஃபிரீனுஸ் | 1 | ||
80. | சோசிமஸ் | 1 | ||
81. | பிரான்சிசு | 1 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Paschal Robinson (1913). "திருத்தந்தை நான்காம் மார்ட்டின்". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.