முதலெழுத்துப் புதிர்

(முதலெழுத்து செய்யுள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முதலெழுத்துப் புதிர் (Acrostic) என்பது ஒரு உரை, வாசகம், பத்தி, சொற்றொடர் போன்ற ஏதாவது ஒரு எழுத்து வடிவத்தை, அல்லது சொற்களின் தொகுப்பை, அவற்றிலுள்ள முதலெழுத்துக்கள் அல்லது முதலில் வரும் அசைவுகள் (syllable) அல்லது முதல் சொற்கள் போன்றவற்றில் ஏதாவது ஒன்றைக் கொண்டு ஆக்கப்படும் ஒரு கவிதை, செய்யுள், வாக்கியம் போன்ற ஒரு எழுத்து வடிவமாகும். இதனைக் குறிக்கும் Acrostic என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கிரேக்க மொழியில், 'akros' என்பதற்கு 'முதல்' என்றும், 'stíchos' என்பதற்கு 'பாடல் வரி' அல்லது 'கவிதை வரி' என்றும் பொருள் வழங்கப்படுகின்றது. எனவே இந்த முதலெழுத்துப் புதிரை, முதல்வரிப் புதிர், முதலெழுத்து செய்யுள், முதல்வரி செய்யுள் என்றும் அழைக்கலாம்.[1][2][3]

இவ்வாறான கவிதை அல்லது செய்யுளை ஆக்குவது, நினைவில் வைத்துக் கொள்ள சிரமமாக இருக்கும் எழுத்து வடிவங்களை இலகுவில் நினைவில் நிறுத்திக்கொள்ள உதவும். நினைவு கொள்ளவேண்டிய சொற்களின் தொகுப்பையோ, அல்லது ஒரு உரையையோ, அவற்றின் முதல் எழுத்து, அல்லது வரிகளைக் கொண்டு, இயல்பாக இலகுவில் நினைவில் கொள்ளக்கூடிய ஒரு கவிதையாகவோ, அல்லது வாக்கியமாகவோ, அல்லது சாதாரண உரைநடை வடிவிலோ அமைத்துக் கொள்வதன் மூலம், குறிப்பிட்ட விடயத்தில் நினைவாற்றலைக் கூட்டிக் கொள்ளலாம். இதனால் இது முதலெழுத்து நினைவி எனவும் அழைக்கப்படலாம்.

எடுத்துக்காட்டுக்கள்

தொகு

ஆவர்த்த அட்டவணை மூலகங்கள்

தொகு

ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தனிமங்களை ஒழுங்கு வரிசையில் நினைவில் கொள்வதற்காக அமைக்கப்பட்ட முதலெழுத்துப் புதிர்:

  • இரண்டாம் கூட்ட தனிமங்களான Li, Be, B, C, N, O, F, Ne என்பவற்றில், Ne தவிர்ந்த ஏனையவற்றை நினைவில் கொள்வதற்கு:
Listen B B C Not On Friday - (பிபிசி யின் தமிழ் ஒலிபரப்பான பிபிசி தமிழோசை முன்னர் வெள்ளிக்கிழமைகளில் ஒலிபரப்பாவது இல்லை. இதனையும் மனதில் கொண்டு இந்த வாக்கியம் ஆக்கப்பட்டுள்ளது.)
  • மூன்றாம் கூட்ட தனிமங்களான Na, Mg, Al, Si, P, S, Cl, Ar என்பதை நினைவில் கொள்வதற்கு:
நான் மடையன் அல்ல, சிவா பொய் சொல்லிக் குழப்பப் பார்க்கிறான்.
நான் டையன் அல்ல, சிவா பொய் சொல்லிக் குழப்பப் பா(ப்+ஆர்)க்கிறான். இங்கே சொற்களின் அசைவுகளைத் தமிழில் நினைவில் வைத்திருக்க பகடியாக ஒரு வாக்கியம் அமைக்கப்பட்டுள்ளது.
நா = Na, ம = Mg, அ = Al, சி = Si, பொ = P, சொ = S, கு = Cl, பா = ப் + ஆ = Ar

வானவில்லின் வண்ணங்கள்

தொகு

வானவில்லில் உள்ள நிறங்களை, அல்லது கட்புலனாகும் நிறமாலையின் நிறங்களை நினைவில்கொள்ள அமைக்கப்பட்ட முதலெழுத்துப் புதிர்:

  • அலைநீளம் குறைவான நிறத்தில் இருந்து அலைநீளம் கூடிய நிறத்திற்கு, VIBGYOR - Violet (ஊதா), Indigo (கருநீலம்), Blue (நீலம்), Green (பச்சை), Yellow (மஞ்சள்), Orange (செம்மஞ்சள்), Red (சிவப்பு)
  • அலைநீளம் கூடிய நிறத்தில் இருந்து அலைநீளம் குறைவான நிறத்திற்கு, Richard Of York Gave Battle In Vain
  • அலைநீளம் கூடிய நிறத்தில் இருந்து அலைநீளம் குறைவான நிறத்திற்கு, Roy G. Biv - Roy G. Biv

மேற்கோள்கள்

தொகு
  1. "Acrostic Poetry". OutstandingWriting.com. Archived from the original on 2016-10-10. பார்க்கப்பட்ட நாள் 2011-04-30.
  2. "s.v. acrostic". Oxford English Dictionary (3rd). “The expected spelling of the English word, on the n., monostich n.” 
  3. "Acrostic Psalms". biblicalhebrew.com. Archived from the original on 17 September 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-09-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலெழுத்துப்_புதிர்&oldid=4101961" இலிருந்து மீள்விக்கப்பட்டது