முதல்வர் மகாத்மா

2012 ஆண்டையத் திரைப்படம்

முதல்வர் மகாத்மா (Mudhalvar Mahatma (இப்படம் Welcome Back Gandhi என்றும் அறியப்படுகிறது) என்பது ஏ. பாலகிருஷ்ணன் இயக்கிய, 2012 ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] இப்படமானது 2014 சனவரி 30 அன்று ஆண்டு வெல்கம் பேக் காந்தி என்ற பெயரில் இந்தியில் வெளியானது.[2] இப்படத்தில் மகாத்மா காந்தியாக எஸ். காமராஜ் நடித்துள்ளார்.[3] இப்படத்தில் பாடல் வரிகளை பரத் ஆச்சார்யா எழுத, இளையராஜா இசையமைத்துள்ளார். காந்தி இன்னும் உயிருடன் இருந்திருந்தால் அல்லது நவீன இந்தியாவுக்கு மீண்டும் வந்தால் எப்படி நடந்துகொள்வார் என்பதாக இத்திரைப்படத்தின் கதை உள்ளது.[4] பட வெளியீட்டுக்குப் பிறகு படத்தின் எட்டு பாடல்கள் வெளியிடப்பட்டன.

முதல்வர் மகாத்மா
Welcome Back Gandhi
இயக்கம்ஏ. பாலகிருஷ்ணன்
தயாரிப்புரமணா கம்யூனிகேசன்ஸ்
கதைஏ. பாலகிருஷ்ணன்
இசைஇளையராஜா
நடிப்புஏ. காரமாஜ்,
அனுபம் கெர்,
கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்,
வி. எஸ். ராகவன்
ஒளிப்பதிவுஜே. மோகன் , சுப்பு
படத்தொகுப்புவி பி விஜயன்
விநியோகம்ரமணா கம்யூனிகேசன்ஸ்
வெளியீடுசனவரி 30, 2014 (2014-01-30)
ஓட்டம்105 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மற்றும் இந்தி

முதல்வர் மகாத்மா படத்தின் படப்பிடிப்பானது 2012இல் சென்னையில் 40 நாட்கள் நடந்தன. படமானது மூன்று கோடி செலவில் தயாரிக்கப்பட்டது.[5][6]

கதை தொகு

60 ஆண்டு காலத்திற்கு பிறகு, காந்தி (எஸ் கனகராஜ்) தனது சத்தியாக்கிரக இயக்கத்தை மீண்டும் தொடர இந்தியாவுக்கு திரும்புவதும், அதனால் ஏற்படும் நிகழ்வுகளுமே கதை.[7]

நடிகர்கள் தொகு

வரவேற்பு தொகு

தி இந்து பத்திரிக்கையானது முதல்வர் மகாத்மா படத்துக்கு நேர்மறையான விமர்சனத்தை அளித்தது. "இப்படம் உன்னதமான, துணிச்சலான முயற்சி, இதுபோன்ற ஒரு நேர்மையான திரைப்படத்தில் முதலீடு செய்த திரைப்பட தயாரிப்பாளரை பாராட்ட வேண்டும்" என்றது.[8]

மேற்கோள்கள் தொகு

  1. "Mudhalvar Mahatma (2012)". imdb.com. பார்க்கப்பட்ட நாள் 24 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Anna Hazare watches film on Gandhi". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 24 January 2014.
  3. "Tamil film 'Welcome Back Gandhi' launched". பார்க்கப்பட்ட நாள் 24 January 2014.
  4. "Anna 'Welcome(s) Back Gandhi'". New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 24 January 2014.
  5. "Reliving the Mahatma". TNIE. Archived from the original on 21 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 24 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "This film touches upon the Ayodhya dispute and Ram Mandir issue". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 22 November 2018.
  7. "Shotcuts: Big plans". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 24 January 2014.
  8. "A Welcome Effort". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 24 January 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதல்வர்_மகாத்மா&oldid=3709101" இலிருந்து மீள்விக்கப்பட்டது