மூத்த பிளினி

1 ஆம் நூற்றாண்டின் உரோமானிய இராணுவத் தளபதி, எழுத்தாளர்
(முதிய பிலினி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கையசு பிலினியசு செக்குண்டசு (Gaius Plinius Secundus, கிபி 23 – ஆகத்து 25, 79 கிபி), பொதுவாக மூத்த பிளினி (Pliny the Elder) என அழைக்கப்பட்டவர், உரோம எழுத்தாளரும், வரலாற்றாளரும், இயற்கை மெய்யியலாளரும் ஆவார். அத்துடன் உரோமைப் பேரரசின் கடற்படை, மற்றும் இராணுவத் தளபதியாகவும் பேரரசர் வெஸ்பாசியானின் நண்பராகவும் இருந்தவர். இவர் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை இயற்கை வரலாறு, மற்றும் புவியியல் நிகழ்வுகளை ஆராய்வதில் கழித்தார். இவர் கிபி 77 இல் வெளியிட்ட இயற்கை வரலாறு (Naturalis Historia) என்னும் இலத்தீன் மொழியிலான நூலே இன்று கிடைப்பவற்றுள் மிகவும் பழமையான கலைக்களஞ்சியம் ஆகும். இயற்கை வரலாறு, கலையும் கட்டிடக்கலையும், மருத்துவம், புவியியல், நிலவியல், போன்றவை தொடர்பான 37 பிரிவுகளைக் கொண்டதாக இது உள்ளது. 100 ஆக்குனர்களால் எழுதப்பட்ட 2000 வெவ்வேறு ஆக்கங்களில் இருந்து 20,000 குறிப்புகளைத் தொகுத்துள்ளதாகவும், தனது சொந்த அநுபவங்களில் இருந்தும் பலவற்றை உள்ளடக்கி உள்ளதாகவும் அவர் தனது முன்னுரையில் தெரிவித்துள்ளார்.

முதிய பிளினி
Pliny the Elder
Gaius Plinius Secundus
முதிய பிளினி: 19ம் நூற்றாண்டில் வரையப்பட்ட கற்பனை ஓவியம்.
பிறப்புகிபி 23
கோமோ, பொம்பெயி, இத்தாலி
இறப்புஆகத்து 25, 79 (அகவை 55–56)
ஸ்டாபி, இத்தாலி
இறப்பிற்கான
காரணம்
எரிமலை வெடிப்பில் பொம்பெயி நகரம் அழிக்கப்பட்ட போது இறந்தார்.
உடல் கண்டறியப்பட்ட
இடம்
நுரைக்கற்களின் அடியில் நண்பர்களினால் மீட்கப்பட்டது
இருப்பிடம்ரோம், மாகாண இடங்கள், மிசெனும்
குடியுரிமைஉரோமர்
கல்விசொல்லாட்சி, இலக்கண ஆசிரியர்
பணிசட்டவாதி, எழுத்தாளர், இயற்கையியலாளர், இராணுவப் படைத்தளபதி, மாகாண ஆளுனர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்இயற்கை வரலாறு
எடைபிற்காலத்தில் பெருத்த உருவம்
பெற்றோர்செலெர், மார்செலா
வாழ்க்கைத்
துணை
எவருமில்லை
பிள்ளைகள்எவருமில்லை
உறவினர்கள்உடன்பிறப்பு (பிளினியா), மருமகன் இளைய பிளினி

பொம்பெயி நகரை அழித்த வெசுவியசு எரிமலை வெடிப்பில் சிக்குண்ட தனது நண்பரையும் அவரது குடும்பத்தினரையும் கப்பல் ஒன்றின் மூலம் காப்பாற்ற முயன்ற போது கிபி 79, ஆகத்து 25 இல் இறந்தார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Bigelow, Jacob, MD (April, May, June 1859). Littell, E.. ed. "Death of Pliny the Elder". Littell's Living Age. Third (Boston: Littell, Son, and Company) V: 123. 

வெளி இணைப்புகள்

தொகு
  • Online Galleries, History of Science Collections, University of Oklahoma Libraries பரணிடப்பட்டது 2020-11-12 at the வந்தவழி இயந்திரம் High resolution images of works by Pliny the Elder in .jpg and .tiff format.
  • Pliny the Elder. "Pliny the Elder: the Natural History" (in Latin and English). University of Chicago. பார்க்கப்பட்ட நாள் 24 May 2009. {{cite web}}: Unknown parameter |coauthors= ignored (help)CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூத்த_பிளினி&oldid=3429887" இலிருந்து மீள்விக்கப்பட்டது