முதுமொழி வெண்பா
முதுமொழி வெண்பாக்கள் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தவை. இவ்வகையில் பதினாறு நூல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. பெரும்பாலும் இவை நேரிசை வெண்பாக்களால் ஆனவை. வெண்பாவின் பின் இரு வரிகள் திருக்குறளாக அமைய, முதல் இரு வரிகளில் எடுத்துக்கொண்ட திருக்குறளை விளக்கும் கருத்துகள் அல்லது கதைகள் இடம் பெறும். திருக்குறளைத் தவிர திருவருட்பயன், ஆத்திசூடி நூல்களையும் விளக்கும் முதுமொழி வெண்பாக்கள் கிடைத்துள்ளன. இவ்வகையின் முதல் நூலாகத் தினகர வெண்பாவை அடையாளம் காட்டுகிறார் மு. அருணாசலம்[1]. சைவ மடங்கள் இவ்விலக்கிய வகையின் வளர்ச்சிக்குப் பெருந்தொண்டு ஆற்றியுள்ளன.
போன்றவை குறிப்பிடத்தக்க நூல்களாகும். அண்மையில் சமண சமயத்தைச் சேர்ந்த இவ்வகை நூல்கள் கிடைத்துள்ளன.[சான்று தேவை]
மேற்கோள்கள்
தொகு- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 54.
{{cite book}}
: Check date values in:|year=
(help)