முனியாண்டி
முனியாண்டி (Muniandi), முனீசுவரன் என்றும் குறிப்பிடப்படுகிறார். தமிழகத்தில் தோட்டங்கள் மற்றும் பயிரிடப்படும் கிராமப் புறப்பகுதி உள்ளிட்ட இடங்களில் தமிழ் கிராமப்புற காவல் தெய்வம் ஆகும். முனீசுவரன், தென்தமிழ்நாட்டின் தமிழ்ச் சமூகத்தால் முதன்மையாக வணங்கப்படுகிறார்.[1] நோய்கள் மற்றும் விலங்குகள்/இயற்கைச் சேதங்களிலிருந்து பயிர்களைப் பாதுகாக்கும் சக்திவாய்ந்த கடவுளாக இவர் கருதப்படுகிறார்.[2] தென்னிந்தியக் கிராமப்புற தெய்வமான மாரியம்மனின் தெய்வீக உதவி கடவுளாகவும் முனீசுவரன் அங்கீகரிக்கப்படுகிறார்.[3]
சொற்பிறப்பியல்
தொகுமுனியாண்டி என்ற சொல் முனி, ஆண்டி என்ற இரு சொற்களின் கலவையாகும். ஆண்டி என்ற சொல்லை இரண்டு விதமாக வரையறுக்கலாம். ஒன்று கடவுளின் அடிமையைக் குறிப்பது (ஆட்சியாளரைப் போல). இரண்டாவது விளக்கம் ஆண்டவர் என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. அதாவது ஆட்சி செய்பவர். இந்த விளக்கத்திற்குக் காரணம் ஆண்டி என்ற சொல் தமிழ்ச் சமயங்களில் மற்ற தெய்வங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இலக்கியம்
தொகுமுனீசுவரன் சிவனுடன் தொடர்புடைய ஒரு சிவகணங்கள் ஆகும். சிவனின் முகத்திலிருந்து தோன்றிய 7 வடிவங்களில் வந்ததாக நம்பப்படுகிறது. பின்னர் மாரியம்மன் மற்றும் பிற திராவிட தெய்வங்களைப் பாதுகாத்து புனித ஆவிகளைப் பாதுகாப்பதாகவும் சிவனிடம் உறுதியளித்துள்ளார்கள்.
வழிபாடு
தொகுமர வழிபாடு
தொகுஆலமரம், அரச மரம் மற்றும் பனைமரம் போன்ற மரங்கள் முனிகள் வெவ்வேறு பரிமாணங்களுக்கு இடையே பயணிக்கப் பயன்படுத்திய நுழைவாயில்கள் என்று நம்பப்படுகிறது. முனிகளும் இத்தகைய மரங்களில் வசிப்பதாக நம்பப்படுகிறது. முனி வழிபாட்டின் மிகப் பழமையான வழிபாடு மர வழிபாடு ஆகும்.
நடுகல் வழிபாடு
தொகுசுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சங்க காலத்திலேயே நடுகல் வழிபாடு குறிப்பிடப்பட்டுள்ளது. நடுகல் அல்லது வீரக்ல் (வீரர்களுக்கு) முக்கியமான ஒருவரின் மரணத்தை நினைவுகூரும் வகையில் நடப்பட்டது. முனி வழிபாட்டில், சைவ புனித சாம்பல் (விபூதி) முத்திரைகள், சந்தனம் மற்றும் குங்குமப்பூ (குங்குமம்) ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கல் அல்லது மூன்று கற்கள் (அல்லது செங்கற்கள்) எனப் பிரிக்கலாம். சிவன் மற்றும் சக்தியின் அடையாளமாக ஒரு திரிசூலம் (சூலம்) இங்கு நடப்படுகிறது.[4]
உருவ வழிபாடு
தொகுஉருவ வழிபாடு என்பது சமகால வழிபாட்டு முறையாகும். முனியினை பக்தர் உருவகப்படுத்திக் காட்சியளிக்கும் வகையில் சிலைகள் அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன. முனியின் வகையைப் பொறுத்து அரிவாள் (அருவாள்), வாள் மற்றும் சூலாயுதம் போன்ற பிற அடையாளங்கள் பயன்படுத்தப்படும்.
இந்தியாவிற்கு வெளியே வழிபாடு
தொகுதமிழ்நாட்டிற்கு வெளியே புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே இத்தெய்வம் பிரபலமானது. மலேசியாவில் முனியாண்டி வழிபாடு முனிகளைக் குலதெய்வமாகக் கொண்ட புலம்பெயர்ந்த தமிழர்களால் தொடங்கப்பட்டது. தோட்டங்களிலும் கிராமங்களிலும் கட்டப்பட்ட குடும்பக் கோயில்கள் பின்னர் பொதுக் கோயில்களாக மாறியது. இறுதியில், அதிகமான மக்கள் இந்த முனிகளை வணங்கத் தொடங்கியதால் இவ்வழிபாடு பிரபலமடைந்தது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Moffatt, Michael (2015-03-08). An Untouchable Community in South India: Structure and Consensus (in ஆங்கிலம்). Princeton University Press. p. 224. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4008-7036-3.
- ↑ Boban, K. Jose (1998). Tribal Ethnomedicine: Continuity and Change (in ஆங்கிலம்). APH Publishing. p. 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7648-027-7.
- ↑ Mearns, David J. (1995-12-18). Shiva's Other Children: Religion and Social Identity Amongst Overseas Indians (in ஆங்கிலம்). SAGE Publications. p. 176. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8039-9249-8.
- ↑ "ஆய்வு: ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாரத்தில் நெடுங்கல் வழிபாடும் வழிபாட்டு மாற்றமும்". www.geotamil.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
- Vineeta Sinha (2005). A new God in the diaspora?: Muneeswaran worship in contemporary Singapore. NUS Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789971693213.