முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி44
முனைய துணைக்கோள் ஏவுகலம் -சி44 (PSLV-C44) இந்திய முனைய துணைக்கோள் ஏவுகல வரிசையில் 46ஆவது ஏவுதல் ஆகும். இந்த ஏவுகலம் சனவரி 24, 2019 அன்று இந்திய சீர் நேரம் 23.37 அளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஏவுகலம் மைக்ரோசாட்-ஆர் மற்றும் கலாம்சாட்-வி2 ஆகிய செயற்கைக் கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தியுள்ளது. இவற்றில் கலாம்சாட்-வி2 என்பது சென்னையைச் சார்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் தயாரிப்பாகும். இந்தக் குழுவில் ரிபத் சாரூக் தலைமையில் தமிழக பள்ளி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக் கோள் ஆகும். இந்த செயற்கைக்கோளின் ஆயுள் 2 மாதங்களாகும். கலாம்சாட்-வி2 செயற்கைக் கோளின் எடை 1 கிலோ 260 கிராம் ஆகும்.[2] வழக்கமாக பிஎஸ்எல்சி ஏவுகலத்தின் நான்காவது பிரிவு விண்வெளியிலேயே கைவிடப்படும். ஆனால் இந்த பிஎஸ்எல்வி சி44 ஏவுகலத்தின் நான்காம் பிரிவு சோதனை முயற்சிகளுக்காக விண்வெளியில் பயன்படுத்தப்பட உள்ளது. மற்றொரு செயற்கைக்கோளான மைக்ரோசாட்-ஆர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் ஆராய்ச்சிக்காக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிக்கோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையம் முதல் ஏவுதளத்தில் உள்ள பிஎஸ்எல்வி சி-44 | |||||
திட்ட வகை | 2 செயற்கைக்கோள்களை விண்வெளிப்பாதையில் நிலைநிறுத்துதல் | ||||
---|---|---|---|---|---|
இயக்குபவர் | இந்திய விண்வெளி ஆய்வு மையம் | ||||
இணையதளம் | இந்திய விண்வெளி ஆய்வு மைய இணையத்தளம் | ||||
விண்கலத்தின் பண்புகள் | |||||
விண்கலம் | முனைய துணைக்கோள் ஏவுகலம் | ||||
விண்கல வகை | மீளப்பாவிக்கவியலா ஏவு அமைப்பு | ||||
தயாரிப்பு | இந்திய விண்வெளி ஆய்வு மையம் | ||||
ஏவல் திணிவு | 2,60,000 கிகி[1] | ||||
ஏற்புச்சுமை-நிறை | கிகி | ||||
பரிமாணங்கள் | மீ (overall height) | ||||
திட்ட ஆரம்பம் | |||||
ஏவப்பட்ட நாள் | 23:37:00, 24 சனவரி 2019இந்திய சீர் நேரம்) | (||||
ஏவுகலன் | முனைய துணைக்கோள் ஏவுகலம் | ||||
ஏவலிடம் | சதீஸ் தவான் விண்வெளி மைய முதல் ஏவுதளம் | ||||
ஒப்பந்தக்காரர் | இந்திய விண்வெளி ஆய்வு மையம் | ||||
Payload | |||||
திணிவு | கிகி | ||||
----
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "கலாம்சாட் V2: உலகின் எடை குறைந்த செயற்கைக் கோளை விண்ணில் ஏவிய இந்தியா". BBC News Tamil. 25 சனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 25 சனவரி 2019.
- ↑ "வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி44 ராக்கெட்!". நியூஸ் 18. 25 சனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 25 சனவரி 2019.