முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி52

 

முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி52 (PSLV-C52) [1] என்பது இந்திய முனைய துணைக்கோள் ஏவுகலம் (PSLV) திட்டத்தின் 54வது பணியாகும். முனைய துணைக்கோள் ஏவுகலம் (PSLV)-C52 ஆனது 14 பிப்ரவரி 2022 அன்று 05:59 (IST) மணிக்கு ரிசாட்-1A(ஈஓஎஸ்-04), இன்ஸ்பைர்சாட், ஐஎன்எஸ்-2டிடி ஆகியவற்றை அதன் முக்கிய தாங்குசுமையாகக் கொண்டு ஏவப்பட்டது. [2]

விவரங்கள் தொகு

முனைய துணைக்கோள் ஏவுகலம்-C52 இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. இந்த ஏவுகலமானது முதன்மை தாங்குசுமையாக, ரிசாட்-1எ ஐயும் மற்ற 2 செயற்கைக்கோள்களையும் சுமந்து சென்றது. இவை இந்திய விண்வெளி தொழில்நுட்ப கழகத்திலிருந்து இன்ஸ்பைர்சாட் ஆகவும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்திடமிருந்து ஐஎன்எஸ்-2டிடி தொழில்நுட்ப விளக்கதாரராகவும் இருக்கும். [3]

ஏவுதல் கால அட்டவணை தொகு

பிஎஸ்எல்வி-சி52 14 பிப்ரவரி 2022 அன்று இந்திய சீர் நேரம் 5:59 மணிக்கு ஏவப்பட்டது.

பணி கண்ணோட்டம தொகு

பிஎஸ்எல்வி-சி52 ஏவுகலன் நான்கு நிலைகளைக் கொண்டது; ஒவ்வொன்றும் தன்னிச்சையாக, அதன் சொந்த உந்துவிசை அமைப்புடன், அதன் மூலம் சுதந்திரமாக செயல்படும் திறன் கொண்டது. முதல் மற்றும் மூன்றாவது நிலைகள் கூட்டு திட உந்துசக்திகளைப் பயன்படுத்துகின்றன, இரண்டாவது மற்றும் நான்காவது நிலை பூமியில் சேமிக்கக்கூடிய திரவ உந்துசக்தியைப் பயன்படுத்துகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. "PSLV". Space.skyrocket.de. பார்க்கப்பட்ட நாள் 21 January 2021.
  2. U. Tejonmayam (Feb 13, 2022). "isro: Countdown starts for Isro's PSLV-C52/EOS-04 launch | India News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
  3. Livemint (2022-02-13). "ISRO to launch PSLV-C52 carrying three satellites tomorrow. Check timings". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.