இந்திய விண்வெளி தொழில்நுட்ப கழகம், திருவனந்தபுரம்

இந்திய விண்வெளித் தொழில்நுட்ப கல்லூரி (Indian Institute of Space Science and Technology) இந்திய விண்வெளித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகும். இது உலகில் முதன்முறையாக விண்வெளித்துறை சார்ந்த கல்விக்கென்று உருவாக்கப்பட்டுள்ள கல்லூரியாகும். இந்த கல்லூரி தொடங்க 26 ஏப்ரல், 2007 ம் ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. முன்னாள் விண்வெளித் துறை தலைவர் மாதவன் நாயர் இதனை 14 செப்டம்பர், 2007 அன்று தொடங்கி வைத்தார். தொடங்கி ஓராண்டுக்குள் இது நிகர் நிலைக்கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இந்திய விண்வெளித்துறையில் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும். இக்கல்லூரியின் துணைவேந்தராக அப்துல் கலாம் உள்ளார்.

இந்திய விண்வெளி தொழில்நுட்ப கழகம்
Indian Institute of Space Science and Technology
குறிக்கோளுரைவித்யா சந்தி: பிரவச்சனம் சந்தனம் (சமசுகிருதம்)
வகைநிகர்நிலைப் பல்கலைக்கழகம்[1]
உருவாக்கம்2007
வேந்தர்B. N. சுரேசு[2]
பணிப்பாளர்V. K. தவால்
அமைவிடம்திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
வளாகம்100 ஏக்கர்கள் (0.4 km2)[3]
சேர்ப்புவிண்வெளித் துறை, இந்திய விண்வெளி ஆய்வு மையம்
இணையதளம்www.iist.ac.in

துறைகள்தொகு

இளங்கலைப்பட்டப் படிப்புதொகு

 • Control System,
 • Computer,
 • Digital Electronics
 • Communications
 • Manufacturing,
 • Aeronautics
 • Structural Design and Analysis
 • Thermal and Propulsion areas.
 • Earth and Space systems,
 • Astrophysics & Planetary Science,
 • Remote Sensing
 • Chemical System

முதுநிலை பட்டப்படிப்புதொகு

 • Applied and Adaptive Optics,
 • Soft Computing and Machine learning,
 • RF and Micro Systems
 • Chemical System.

ஆராய்ச்சிப் படிப்புதொகு

விண்வெளித்துறையில் முனைவர் பட்டம் பெறலாம்.

வெளி இணைப்புகள்தொகு

அதிகார்ப்பூர்வ இணையதளம்

 1. "Archived copy". மூல முகவரியிலிருந்து 14 August 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 7 August 2011.
 2. "Chancellor | IIST". பார்த்த நாள் 19 November 2017.
 3. "Archived copy". மூல முகவரியிலிருந்து 6 February 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17 February 2015.