முன்னங்கால் இடைமறிப்பு
முன்னங்கால் இடைமறிபப்பு (leg before wicket) என்பது துடுப்பாட்டத்தில் மட்டையாளரை வீழ்த்தும் முறைகளில் ஒன்றாகும். இலக்கை வீழ்த்தியிருக்க வேண்டிய பந்து, மட்டையாளர் மட்டை பிடித்திருக்கும் கையைத் தவிர முன்னங்கால் அல்லது பிற உடல் பகுதியின் மீது பட்டால் அது இலக்கு வீச்சை இடைமறித்தது போல் கருதப்படும். எனவே களத்தடுப்பு அணியின் முறையீட்டைத் தொடர்ந்து நடுவர் தனது முடிவை அறிவிப்பார். பந்து எந்த இடத்தில் எகிறியது, பந்து இலக்கை நேர்க்கோட்டில் இருந்து தாக்கியதா, மட்டையாளர் பந்தை அடிக்க முயன்றாரா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே நடுவர் முடிவெடுப்பார்.
வரையறை
தொகுதுடுப்பாட்ட விதி 36இல் முன்னங்கால் இடைமறிப்பு முறை வரையறுக்கப்படட்டுள்ளது.[1] இந்த முறையில் ஒரு மட்டையாளரை வீழ்த்த வேண்டுமென்றால் களத்தடுப்பு அணியினர் நடுவரிடம் கட்டாயம் முறையிட வேண்டும்.[2] வீசப்பட்ட பந்து பிழை வீச்சாக இருந்தால் இந்த முறையில் மட்டையாளரை வீழ்த்த இயலாது.
வீசப்பட்ட பந்து ஒருவேளை எகிறியிருந்தால் அது இரு இலக்குகளும் நடுவே கற்பனையாக வரையப்படும் நேர்க்கோட்டில் பட்டிருக்க வேண்டும். பிறகு மட்டையாளரின் மட்டையில் படுவதற்கு முன்பே அவரது உடற்பகுதியில் பட்டிருக்க வேண்டும். ஒருவேளை இடைமறிக்கப்படாமல் சென்றிருந்தால் இலக்கை வீழ்த்தியிருக்க வேண்டும்.
பந்து இலக்கைத் தாக்கியிருந்தாலும் அது இலக்கின் நேர்ப்பக்கத்தில் பந்து எகிறியிருந்தால் மட்டையாளர் ஆட்டமிழக்க மாட்டார்.[3] அதுபோல் பந்தை அடிக்கத் தயாராக இருந்த மட்டையாளரின் உடற்பகுதியை பந்து நேர்ப்பக்கத்தில் தாக்கியிருந்தால் அவர் ஆட்டமிழக்க மாட்டார்.
பெரும்பாலும் இலக்கைத் தாக்கியிருக்க வேண்டிய பந்து முன்னங்காலில் பட்டாலும் சிலநேரங்களில் தலை, இடுப்பு போன்ற உடலின் பிற பகுதிகளில் பட்டிருக்கும். இவ்வாறு நிகழ்வது மிகவும் அரிது என்பதால் இந்த முறை பொதுவாக முன்னங்கால் இடைமறிப்பு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "{% DocumentName %} Law | MCC". www.lords.org. Retrieved 2019-12-08.
- ↑ "{% DocumentName %} Law | MCC". www.lords.org. Retrieved 2019-12-08.
- ↑ "Ways of getting out: Leg before wicket". 26 ஆகத்து 2005. Retrieved 8 திசம்பர் 2019.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)