முன்னேறட்டும் சிங்கப்பூர்
முன்னேறட்டும் சிங்கப்பூர் (மாஜுலா சிங்கப்பூரா) என்று தொடங்கும் பாடல் சிங்கப்பூர் நாட்டின் நாட்டுப்பண் ஆகும். சிங்கப்பூர் நகர அவையின் நிகழ்ச்சிகளில் பாடுவதற்காக 1958 ஆம் ஆண்டில் சுபிர் சயித் என்பார் இப் பாடலை இயற்றி இசையமைத்தார். 1959 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தன்னாட்சி பெற்றபோது, இப்பாடலையே தீவின் பண்ணாகத் தெரிவு செய்தனர். 1965 ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு முழுமையான விடுதலை கிடைத்த பின்னர் முன்னேறட்டும் சிங்கப்பூர் பாடல் முறைப்படி நாட்டுப்பண்ணாகத் தெரிவு செய்யப்பட்டது.[1] சட்டப்படி சிங்கப்பூரின் நாட்டுப்பண் அதன் மூலமான மலாய் மொழியிலேயே பாடப்பட வேண்டும் எனினும், ஏனைய அலுவலக மொழிகளான ஆங்கிலம், சீனம், தமிழ் ஆகியவற்றிலும் அதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட மொழிபெயர்ப்புகள் உண்டு.[2]
சிங்கப்பூர் தேசிய கீதம் | |
இயற்றியவர் | ஜுபீர் செய்த், 1958 |
இசை | ஜுபீர் செய்த, 1958 |
சேர்க்கப்பட்டது | 1965 |
இசை மாதிரி | |
ஐக்கிய அமெரிக்கா கடற்படை இசைக்குழு வாசித்தது |
நாட்டுப்பண் மூன்று மொழிகளில்
தொகுமலாய் (ஏற்கப்பட்ட வரிகள்)[3] | ஒலிபெயர்ப்பு | சீனம்[3] | தமிழ்[4] |
---|---|---|---|
Mari kita rakyat Singapura Marilah kita bersatu |
மாரி கீத்தா ராக்யாட் சிங்கப்பூரா! மாரிலா கீத்தா பெர்சாத்து |
来吧,新加坡人民, 来吧,让我们以新的精神, |
சிங்கப்பூர் மக்கள் நாம் ஒன்றிணைவோம் அனைவரும் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Majulah Singapura - Composing a National Anthem". corporate.nas.gov.sg (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-29.
- ↑ "Constitution of the Republic of Singapore - Singapore Statutes Online". sso.agc.gov.sg (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-29.
- ↑ 3.0 3.1 "National Anthem". www.nhb.gov.sg (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-29.
- ↑ "நாட்டுக்கொரு பாட்டு 6 - அரங்கிலே மலர்ந்த சல்யூட் பாடல்!". தி இந்து (தமிழ்). 18 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2016.