முப்புளோரோவசிட்டோன்

வேதிச் சேர்மம்

முப்புளோரோவசிட்டோன் (Trifluoroacetone) CF3C(O)CH3.[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம புளோரின் சேர்மமாகும். இதை 1,1,1-முப்புளோரோவசிட்டோன் என்றும் அழைக்கலாம். நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் முப்புளோரோவசிட்டேன் குளோரோஃபார்மையொத்த நெடி கொண்டதாக உள்ளது.[2]

1,1,1-முப்புளோரோவசிட்டோன்
1,1,1-Trifluoroacetone
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,1,1-Trifluoropropan-2-one
வேறு பெயர்கள்
முப்புளோரோவசிட்டோன்,
இனங்காட்டிகள்
421-50-1
ChemSpider 21111803
EC number 207-005-9
InChI
  • InChI=1S/C3H3F3O/c1-2(7)3(4,5)6/h1H3
    Key: FHUDAMLDXFJHJE-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9871
SMILES
  • CC(=O)C(F)(F)F
பண்புகள்
C3H3F3O
வாய்ப்பாட்டு எடை 112.05 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.252 கி/மி.லி
உருகுநிலை −78 °C (−108 °F; 195 K)
கொதிநிலை 21–24 °C (70–75 °F; 294–297 K)
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H224, H315, H319, H335
P210, P261, P303, P351, P338
தீப்பற்றும் வெப்பநிலை −30 °C (−22 °F; 243 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

முப்புளோரோவசிட்டோவசிட்டிக் அமிலத்தை கார்பாக்சில் நீக்க வினைக்கு உட்படுத்தி முப்புளோரோவசிட்டோன் தயாரிக்கப்படுகிறது.

CF3C(O)CH2CO2H → CF3C(O)CH3 + CO2

அசிடேட்டு மற்றும் முப்புளோரோவசிட்டேட்டு எசுத்தர்களை ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலம் அசிட்டோவசிட்டிக் அமிலம் பெறப்படுகிறது.[2]

வினைகள் தொகு

ஓப்பெனவர் ஆக்சிசனேற்ற வினையில் முப்புளோரோவசிட்டோன் ஓர் ஆக்சிசனேற்ற முகவராக சோதிக்கப்பட்டது. இவ்வினையில் இரண்டாம் நிலை ஆல்க்கால்களின் ஐதராக்சில் குழுக்கள் முதல்நிலை ஆல்ககால்களின் ஐதராக்சில் குழுக்களின் முன்னிலையில் ஆக்சிசனேற்றம் செய்யப்படுகின்றன.[3]

பயன்கள் தொகு

2,6-ஈராலோபிரிடின்களைத் தொடக்க வினைபடுபொருளாக உபயோகித்து 2-முப்புளோரோமெத்தில்-7-அசா இண்டோல்கள் தயாரிக்கவும் முப்புளோரோவசிட்டோன் பயன்படுத்தப்படுகிறது.

வழிப்பெறுதியாகப் பெறப்பட்ட கவியாப் பண்பு இமைன் சேர்மத்தை பயன்படுத்தி தூய்மையான α-முப்புளோரோமெத்தில் அலானின்களையும் தயாரிக்க இயலும். இவ்வாறே சிட்ரெக்கர் வினையைத் தொடர்ந்து நைட்ரைல் நீராற்பகுத்தல் அல்லது ஒடுக்க வினை மூலம் ஈரமீன்களையும் பெறலாம்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "1,1,1-Trifluoracetone 95%". dk.vwr.com. பார்க்கப்பட்ட நாள் 6 June 2017.
  2. 2.0 2.1 Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2002). Wiley-VCH. DOI:10.1002/14356007.a11_349. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3527306732. 
  3. Mello, Rossella; Martínez-Ferrer, Jaime; Asensio, Gregorio; González-Núñez, María Elena (2007). "Oppenauer Oxidation of Secondary Alcohols with 1,1,1-Trifluoroacetone as Hydride Acceptor". J. Org. Chem. 24 (72): 9376–9378. doi:10.1021/jo7016422. பப்மெட்:17975928. 
  4. "Concise synthesis of enantiopure alpha-trifluoromethyl alanines, diamines, and amino alcohols by the Strecker-type reaction". sigmaaldrich.com. பார்க்கப்பட்ட நாள் 6 June 2017.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்புளோரோவசிட்டோன்&oldid=3157578" இலிருந்து மீள்விக்கப்பட்டது