மும்மெத்தில்சிலில் அயோடைடு

மும்மெத்தில்சிலில் அயோடைடு (Trimethylsilyl iodide) என்பது (CH3)3SiI என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம சிலிக்கன் சேர்மம் ஆகும். நிறமற்ற இச்சேர்மம் அறைவெப்பநிலையில் ஆவியாகும் திரவமாக இருக்கிறது.இது அயோடோ மும்மெத்தில்சிலேன் என்றும் அழைக்கப்படுகிறது.

மும்மெத்தில்சிலில் அயோடைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அயோடோ(மும்மெத்தில்)சிலேன்
இனங்காட்டிகள்
16029-98-4
ChemSpider 76879
InChI
  • InChI=1S/C3H9ISi/c1-5(2,3)4/h1-3H3
    Key: CSRZQMIRAZTJOY-UHFFFAOYSA-N
  • InChI=1/C3H9ISi/c1-5(2,3)4/h1-3H3
    Key: CSRZQMIRAZTJOY-UHFFFAOYAB
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 85247
SMILES
  • I[Si](C)(C)C
பண்புகள்
C3H9ISi
வாய்ப்பாட்டு எடை 200.09 g·mol−1
அடர்த்தி 1.406 கி/மோல் 25 °செ இல்
கொதிநிலை 106 °C (223 °F; 379 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

அறுமெத்தில் இருசிலேனை அயோடின் பயன்படுத்தி ஆக்சிசனேற்றப் பிளவு வினையின் மூலமாக மும்மெத்தில்சிலில் அயோடைடைத் தயாரிக்கலாம்[1] அல்லது அறுமெத்தில் இருசிலாக்சேனை அலுமினியம் மூவயோடைடு கொண்டும் பிளந்து தயாரிக்கலாம்.[1][2]

TMS-TMS + I2 → 2 TMSI (TMS = (CH3)3Si)
TMS-O-TMS + AlI3 → 2 TMSI + "AlIO"

பயன்கள் தொகு

ஆல்ககால்களில் மும்மெத்தில்சிலில் தொகுதியை அறிமுகப்படுத்த மும்மெத்தில்சிலில் அயோடைடு பயன்படுத்தப்படுகிறது.

ROH + TMSI → RO(TMS) + HI

இவ்வகை வினைகள் வாயு நிரலியல் பகுப்பாய்வுகளுக்கு பயன்படுத்த உபயோகமாக இருக்கும். இவ்வினையில் உருவாகும் சிலைல் ஈதர் வருவிக்கப்படாத அசல் ஈதரை விட எளிதில் ஆவியாகும் பண்பைப் பெற்றுள்ளது[3]. அதிகமான அளவில் மும்மெத்தில்சிலில் பொருட்களைப் பெற வேண்டுமெனில் மலிவு விலையில் கிடைக்கும் மும்மெத்தில்சிலில் குளோரைடு பயன்படுத்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Olah, G.; Narang, S.C. (1982). "Iodotrimethylsilane—a versatile synthetic reagent". Tetrahedron 38 (15): 2225. doi:10.1016/0040-4020(82)87002-6. 
  2. Michael E. Jung; Mark A. Lyster (1988). "Cleavage of Methyl Ethers with Iodotrimethylsilane: Cyclohexanol from Cyclohexyl Methyl Ether". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv6p0353. ; Collective Volume, vol. 6, p. 353
  3. http://www.chem.agilent.com/Library/applications/gcms59_opiates_urine.pdf[தொடர்பிழந்த இணைப்பு]