முரண் ஆக்சிசன்
முரண் ஆக்சிசன் (Anomalous oxygen) என்பது புவியின் வெளிப்புறத்திற்கு 500 கிலோமீட்டர் மேலே குறிப்பாக துருவங்களுக்கு அருகே அத்துருவங்களின் கோடைகாலத்தில் இருப்பதாக நம்பப்படும் ஆக்சிசன் அணுவாகும். வெப்ப அணு என்றும் ஒற்றை அயனியாக்க ஆக்சிசன் என்றும் இவ்வணு கருதப்படுகிறது. முக்கியமாக இப்பகுதிகளிலுள்ள ஐதரசன் மற்றும் ஈலியம் புறவெளிமண்டலத்தில் அதிகரிக்கும் இந்த கூடுதல் அணுக்கூறை கோடைகாலத்தில் துருவங்களுக்கு அருகில் செல்லும் செயற்கைக்கோள்களை எதிர்பாராத விதமாக அதிகமாக இழுக்கும் சக்தியைக் கொண்டு விளக்க முடியும். [1]புவியின் வளிமண்டலத்தைப் பற்றிய அனுபவவிதிகளால் உருவாக்கப்பட்ட உலகாய வளிமண்டல மாதிரிகளில் முரண் ஆக்சிசனின் அடர்த்தியும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Keating, G. M., J. C. Leary, B. D. Green, O. M. Uy, R. C. Benson, R. E. Erlandson, T. E. Phillips, J. C. Lesho, and M. T. Boies, Neutral and ion drag effects near the exobase: MSX satellite measurements of He and O+, in Astrodynamics 1997: Advances in the Astronautical Sciences, vol. 97(1), edited by F. Hoots, B. Kaufman, P. Cefola, and D. Spencer, pp. 549–556, Am. Astronaut. Soc., San Diego, Calif., 1998.
- ↑ Picone, J. M.; Hedin, A. E.; Drob, D. P.; Aikin, A. C. (2002-12-01). "NRLMSISE-00 empirical model of the atmosphere: Statistical comparisons and scientific issues". Journal of Geophysical Research: Space Physics. 107 (A12): 1468. எஆசு:10.1029/2002JA009430. ISSN 2156-2202.