முரளிதர் பெண்கள் கல்லூரி

 

முரளிதர் பெண்கள் கல்லூரி
வகைஇளங்கலை கல்லூரி
உருவாக்கம்1940; 84 ஆண்டுகளுக்கு முன்னர் (1940)
சார்புகொல்கத்தா பல்கலைக்கழகம்
அமைவிடம்
பி-411/14 கரியாஹட் சாலை
,
பாலிகங்கே, கொல்கத்தா
, ,
700029
,
22°31′04″N 88°21′56″E / 22.5178°N 88.36541920°E / 22.5178; 88.36541920
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்கல்லூரி இணையதளம்
படிமம்:Muralidhar Girls' College logo.jpg
முரளிதர் பெண்கள் கல்லூரி is located in கொல்கத்தா
முரளிதர் பெண்கள் கல்லூரி
Location in கொல்கத்தா
முரளிதர் பெண்கள் கல்லூரி is located in இந்தியா
முரளிதர் பெண்கள் கல்லூரி
முரளிதர் பெண்கள் கல்லூரி (இந்தியா)

முரளிதர் பெண்கள் கல்லூரி, என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவில் 1940 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட[1], ஒரு இளங்கலை மகளிர் கல்லூரி ஆகும். கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இக்கல்லூரி இணைக்கப்பட்டுள்ளது. [2]

வரலாறு தொகு

சுதந்திரத்திற்கு முன்பாகவே 1940 ஆம் ஆண்டில் ஆச்சார்யா முரளிதர் பந்தோபாத்யா என்பவரால் பெண்களின் கல்வி, சமூக சீர்திருத்தங்கள் மற்றும் மேம்பாடு என்பதை நோக்கமாகக் கொன்டு முதல் தலைமுறை கற்பவர்கள் உட்பட அனைத்து தகுதியான மாணவர்களுக்கும் கல்வி வசதிகளை விரிவுபடுத்துவதை தன் தலையாயப் பணியாகக் கொண்டு இக்கல்லூரி இயங்கி வருகிறது.

கல்வி வழியாக பெண்களுக்கு அதிகாரம் என்பதே இக்கல்லூரியின் இறுதி இலக்காகும்[3]. சாலை, தொடருந்து, மெட்ரோ போன்ற எல்லா போக்குவரத்து மூலம் நகரின் அனைத்துப் பகுதிகளுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ள இந்தக் கல்லூரி, சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய அனைத்துத் துறைகளைச் சேர்ந்த பெண்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.

துறைகள் தொகு

அறிவியல் பிரிவு தொகு

  • வேதியியல்
  • கணிதம்
  • தாவரவியல்
  • புள்ளிவிவரங்கள்
  • நிலவியல்
  • உளவியல்
  • பொருளாதாரம்
  • ஃபேஷன் வடிவமைப்பு

கலைப்பிரிவு தொகு

  • பெங்காலி
  • ஆங்கிலம்
  • சமஸ்கிருதம்
  • வரலாறு
  • அரசியல் அறிவியல்
  • தத்துவம்
  • பொருளாதாரம்
  • கல்வி
  • பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு
  • சமூகவியல்
  • சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை
  • திரைப்பட ஆய்வுகள்

அங்கீகாரம் தொகு

இந்த பெண்கள் கல்லூரியானது பல்கலைக்கழக மானியக் குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (என்ஏஏசி) அங்கீகாரம் பெற்றுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 3வது சுழற்சியில் ஏ தகுதி உடன் அங்கீகாரம் பெற்றுள்ளது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Colleges in West Bengal, University Grants Commission
  2. "Affiliated College of University of Calcutta". Archived from the original on 2012-02-18.
  3. "Official Website of Muralidhar Girls' College". பார்க்கப்பட்ட நாள் 2016-08-15.
  4. "Institutions Accredited/ Re- accredited by NAAC whose accreditation validity period is over" இம் மூலத்தில் இருந்து 2012-05-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120512054834/http://www.naac.gov.in/sites/naac.gov.in/files/Validity_expired_institutions.pdf.