முர்பாத் தாலுகா

முர்பாத் தாலுகா இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின், கொங்கண் கோட்டத்தில் அமைந்த தானே மாவட்டத்தின் 7 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1]இதன் நிர்வாகத் தலைமையிடம் முர்பாத் நகரம் ஆகும். 40908 வீடுகளும், 921.70 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட முர்பாத் தாலுகா முர்பாத் என்ற நகரமும், 206 கிராமங்களும் கொண்டது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 207 பேர் வீதம் வாழ்கின்றனர்.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, முர்பாத் தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 1,90,652 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 97228 மற்றும் பெண்கள் 93424 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 961 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 22,938 (12.03%) ஆகும். சராசரி எழுத்தறிவு 67.01% ஆகும். பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 5.77% மற்றும் 24.83% ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 175957 (92.29%), இசுலாமியர்கள் 4219 (2.21%), பௌத்தர்கள் 9366 (4.91%) மற்றும் பிறர் 0.31% ஆக உள்ளனர்.[2] [3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முர்பாத்_தாலுகா&oldid=3338631" இலிருந்து மீள்விக்கப்பட்டது