இறுதி முற்றுகை மாதிரி

(முற்றுகை மாதிரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சதுரங்க விளையாட்டில் முற்றுகை மாதிரி (ஆங்கிலம்: Checkmate pattern) என்று பயன்படுத்தப்படும் சொல்லின் பொருள், எதிரி அரசனுக்கு இறுதி முற்றுகை வைத்து ஆட்டத்தை நிறைவு செய்யும் வாய்ப்புள்ள காய்களின் இருப்பிடங்களை மாதிரியாக நிற்கவைத்து விளக்கும் வழிமுறையைக் குறிக்கிறது. இந்த பல்வேறு வழிமுறைகளும் அடிக்கடியும் போதுமான அளவுக்கும் சதுரங்க அறிஞர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப விளையாடப்பட்டும் ஆராயப்பட்டுமுள்ளன. சிலவகையான முற்றுகை மாதிரிகள் அவற்றைக் கண்டறிந்த அறிஞர்களின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. இங்குத் தரப்பட்டுள்ள படங்களில் உள்ள மாதிரிகள் ஒவ்வொன்றிலும் வெள்ளை ஆட்டக்காரர் முதல் நகர்வைச் செய்து அவரே வெற்றி பெறுவது போல நகர்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன.

இறுதி முற்றுகை


அனாசுதாசியா

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
அனாசுதாசியாவின் முற்றுகை

அனாசுதாசியாவின் முற்றுகையில் (Anastasia's mate) ஒரு குதிரை மற்றும் யானை ஒன்றாகச் சேர்ந்து எதிரியின் அரசருக்கு இறுதிமுற்றுகை வைத்து பிடிக்கின்றன. பலகையின் ஓரத்திற்கு தள்ளிச்செலப்பட்ட கருப்பு அரசர் அவருக்கு துணையாக நிற்கும் சக சிப்பாயின் இடையூறால் மேலும் நகர முடியாமல் சரணடைகிறார். சோகன் சேக்கப் வில்லெம் எயின்சு எழுதிய நாவலின் பெயரால் இம்முற்றுகை அழைக்கப்படுகிறது[1][2]

ஆண்டர்சன்

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
ஆண்டர்சன் முற்றுகை

அடால்பு ஆண்டர்சன் ( Anderssen's mate ) பெயரால் அழைக்கப்படும் இம்முற்றுகையில் ஒரு யானை அல்லது அரசி மூலைவிட்டப் பாதையில் தாக்குதல் நிகழ்த்தும் சிப்பாய் அல்லது அமைச்சர் அளிக்கும் ஆதரவினால் எட்டாம் நிலையில் நிற்கும் எதிரியின் அரசருக்கு இறுதிமுற்றுகை வைத்துப் பிடிக்கின்றன.

சில வேலைகளில் ஆண்டர்சனின் முற்றுகைக்கும் மேயட்சின் முற்றுகைக்கும் உள்ள வேறுபாடு இம்முற்றுகையின் தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்த முற்றுகையில் யானைக்கு சிப்பாய் ஆதரவும் அந்தச் சிப்பாய்க்கு வேரொரு காயின் ஆதரவும் உள்ளது. மேயட்சின் முற்றுகையில் யானைக்கு தொலைவில் நிற்கும் அமைச்சரின் ஆதரவு கிடைக்கிறது[3].

அராபியன்

தொகு
abcdefgh
8
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
அராபியன் முற்றுகை

அராபியன் முற்றுகை ( Arabian mate ) ஒரு குதிரை மற்றும் யானை ஒன்றாகச் சேர்ந்து எதிரியின் அரசரை பலகையின் மூலையில் நிற்கவைத்து இறுதிமுற்றுகை வைத்துப் பிடிக்கின்றன. வெள்ளை யானை கருப்பு அரசருக்கு அடுத்த சதுரத்தில் நின்று அரசரை ஏழாவது நிலைக்கு நகரவிடாத பணியையும் இறுதி முற்றுகை வைத்து தப்பிக்கவிடாத பணியையும் செய்கிறது. வெள்ளை குதிரை சற்று தூரமாக நின்று கருப்பு அரசரை எட்டாவது நிலையின் அடுத்த கட்டத்துக்கு வரவிடாத பணியையும் வெள்ளை யானைக்கு ஆதரவளிக்கும் பணியையும் செய்கிறது[4].

கடைசி கிடைவரிசை முற்றுகை

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
கடைசிவரிசை முற்றுகை

கடைசி கிடைவரிசை முற்றுகை ( back-rank mate ) எப்போது தோன்றுமெனில் ஒரு யானை அல்லது இராணி எதிரி அரசனுக்கு கடைசி கிடை வரிசையில் முற்றுகை வைக்கும்போது அரசர் தப்பித்துச் செல்லத் தடையாக சக சிப்பாய்களே முன்னால் நின்று அம்முற்றுகையை இறுதி முற்றுகையாக மாற்றிவிடும்.

அமைச்சர் மற்றும் குதிரை

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
அமைச்சர் மற்றும் குதிரை

அமைச்சர் மற்றும் குதிரை முற்றுகை ( Bishop and knight mate ) என்பது அமைச்சர், குதிரை மற்றும் அரசர் ஆகிய மூவரும் கூட்டணி அமைத்து எதிரியின் அரசரை சதுரங்கப் பலகையின் மூலைக்கு தள்ளிச் சென்று முற்றுகை வைத்து இறுதி முற்றுகையாக்குவதாகும். அமைச்சர் மற்றும் குதிரையுடன் ஆடும் இறுதியாட்டத்தில் வல்லவராவது மிகவும் கடினம். இறுதி முற்றுகை நிகழ அதிகபட்சமாக 34 நகர்வுகள் வரைகூட மிகச்சரியாக சிந்தித்து எச்சரிக்கையுடன் ஆடவேண்டியிருக்கும்.

பிளாக்பர்னே

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh

சோசப் என்றி பிளாக்பர்னேவின் முற்றுகை (Blackburne's mate ) என்பது அரிதாக விளையாடப்படும் ஒரு முற்றுகை வகையாகும். இம்முற்றுகை அதைக் கண்டறிந்தவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. இம்முற்றுகையில் வெள்ளை ஆட்டக்காரர் கருப்பின் ஒரு காயையும் ( யானை அல்லது இராணி அல்லது அமைச்சர் ) இறுதி முற்றுகைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார். கருப்பு இராசாவை f8 சதுரத்திற்கு தப்பிச்செல்ல விடாமல் அவருடைய காயே இடையூறாக நின்று ஆட்டம் முடிந்துவிடுகிறது. வெள்ளையின் ஒரு அமைச்சர் தொலைவில் நின்றும் மற்றொரு அமைச்சரும் குதிரையும் அருகில் நின்றும் கருப்பு இராசாவை கட்டுப்படுத்துகின்றன[5]. ஆட்டத்தில் கருப்பு ஆட்டக்காரரின் இருப்புநிலை அமைப்பை குலைக்க சிலசமயங்களில் பிளாக்பர்னேவின் முற்றுகை உதவுகிறது.

போடென்

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
போடெனின் முற்றுகை

போடெனின் முற்றுகை (Boden's mate ) என்பது இரண்டு அமைச்சர்கள் மூலைவிட்டப் பாதைகளில் தாக்குதல் நிகழ்த்தி இராசாவுக்கு நெருக்கடியை உண்டாக்கி இறுதி முற்றுகையை நிகழ்த்துவது சாமுவேல் போடெனின் முற்றுகை வகையாகும். கருப்பு இராசாவுக்கு அவருடைய ஒரு யானையும் சிப்பாயுமே தப்பிச்செல்ல விடாமல் இடையூறு செய்கின்றன[6][7]

பெட்டி அல்லது யானை

தொகு
abcdefgh
8
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
பெட்டி முற்றுகை

பெட்டி முற்றுகை அல்லது யானை முற்றுகை (Box mate (Rook mate) ) என்று அழைக்கப்படும் இம் முற்றுகையானது, இறுதி முற்றுகை நிகழ்த்தி ஆட்டத்தை முடிக்க உதவும் நான்கு அடிப்படை முற்றுகைகளில் ஒன்றாகும். இராணி முற்றுகை, இராசாவும் இரண்டு அமைச்சர்களும் சேர்ந்து வைக்கும் முற்றுகை, இராசாவுடன் அமைச்சர் மற்றும் குதிரை சேர்ந்து வைக்கும் முற்றுகை முதலியன மற்ற அடிப்படை முற்றுகைகளாகும். இம்முற்றுகை நிகழ வேண்டுமெனில் வெறுமையுடன் இராசா பலகையின் மூலைக்கு அல்லது கடைசி வரிசைக்கு தள்ளப்பட்டிருக்க வேண்டும். இங்கு வெள்ளை யானை இராசாவுக்கு முற்றுகை வைக்கிறது. வெள்ளை இராசா கருப்பு இராசாவுக்கு நேராக நின்று அவரை பக்கவாட்டில் தப்பிச்செல்ல விடாமல் தடுக்கிறது.

மூலையில் முற்றுகை

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
மூலை முற்றுகை

மூலை முற்றுகை ( Corner mate ) என்பது பொதுவாக கையாளப்படும் ஒரு வகை முற்றுகையாகும். இம்முற்றுகையில் யானை அல்லது இராணியை உபயோகித்து எதிரி இராசாவை சதுரங்கப் பலகையின் மூலையில் சிறை வைத்து குதிரையினால் இறுதி முற்றுகை வைத்து ஆட்டத்தை முடிக்கும் வகையாகும்.

கோசியோ

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
கோசியோவின் முற்றுகை. 1.Qh6+ என்ற நகர்வுக்குப் பின்,கருப்புக்கு 1...Kg3 நகர்வைத் தவிர வேறு வழியில்லை
abcdefgh
8
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
இறுதி முற்றுகை 2.Qh2

|}

கோசியோவின் முற்றுகை (Cozio's mate) என்பது பொதுவாக கையாளப்படும் ஒரு வகை முற்றுகையாகும். இம்முற்றுகை புறாவால் முற்றுகையின் தலைகீழ் முறையாகும். 1766 ஆம் ஆண்டு கார்லோ கோசியோ செய்த ஆய்வைத் தொடர்ந்து இம்முற்றுகை அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.

டாமியானோ அமைச்சர்

தொகு
abcdefgh
8
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
டாமியானோவின் அமைச்சர் முற்றுகை

டாமியானோவின் அமைச்சர் முற்றுகை ( Damiano's bishop ) என்பது தரமான ஒரு முற்றுகையாகும். இம்முற்றுகையில் ஒரு இராணியையும் அமைச்சரையும் பயன் படுத்துகிறார்கள். இங்கு அமைச்சர் இராணிக்கு ஆதரவு அளிக்க இராணி இறுதி முற்றுகையை நிகழ்த்துகிறார். இம்முற்றுகை பெட்ரோ டாமியானோவின் பெயரால் அழைக்கப்படுகிறது.

டாமியானோ முற்றுகை

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
டாமியானோ முற்றுகை

டாமியானோ முற்றுகை ( Damiano's mate ) என்பது தரமானதும் பழைமையானதுமான ஒரு முற்றுகையாகும். ஒரு யானையை h- வரிசையில் தியாகம் செய்வதன் மூலமாக டாமியானோ முற்றுகைக்கான அடிப்படை ஆரம்பமாகிறது. இதன்பிறகு இம்முற்றுகையில் இராணி சிப்பாயின் ஆதரவுடன் இறுதி முற்றுகை வைத்து ஆட்டம் முடிகிறது. 1512[8] ஆம் ஆண்டில் டாமியானோ இம்முற்றுகையை கண்டறிந்து வெளியிட்டார். வெளியீட்டின் போது டாமியானோ வெள்ளை இராசாவை சதுரங்க பலகையில் வைக்க மற்ந்து போனார். இதனால் அதனைத் தொடரும் மற்ற வெளியீடுகளிலும் வெள்ளை இராசா இல்லாமலேயே பதிப்பிடப்பட்டு வருகிறது.

டேவிட் மற்றும் கோலியாத்து

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
டேவிட் மற்றும் கோலியாத்து முற்றுகை

டேவிட் மற்றும் கோலியாத்து முற்றுகை ( David and Goliath mate ) என்பது பொதுவான ஒரு முற்றுகை முறையாகும். அருகில் எதிரியின் சிப்பாய்கள் இருக்கும்போதே இம்முற்றுகையில் இறுதித் தாக்குதலை சிப்பாய் நிகழ்த்தி ஆட்டத்தை முடிக்கிறார். விவிலியத்தில் உள்ள பாத்திரங்களான டேவிவிட் மற்றும் கோலியாத பெயரால் இம்முற்றுகை அழைக்கப்படுகிறது.

இரட்டை அமைச்சர்கள்

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
இரட்டை அமைச்சர்கள் முற்றுகை

இரட்டை அமைச்சர்கள் முற்றுகை ( Double bishop mate ) என்பது தரமான ஒரு முற்றுகையாகும் இது போடெனின் முற்றுகை போன்றது என்றாலும் அதைவிட சற்று எளிமையானது ஆகும். இரண்டு அமைச்சர்கள் இராசாவின் மீது தாக்குதல் நிகழ்த்தி நகர வாய்ப்பில்லாமல் நின்று கொண்டிருக்கும் சிப்பாயின் பின்னால் இராசாவை சிறைவைத்து ஆட்டத்தை முடிக்கும் முறையாகும்.

புறாவின்வால்

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
புறாவால் முற்றுகை

புறாவால் முற்றுகை ( Dovetail mate ) என்பதும் ஒரு பொதுவான முற்றுகை முறையாகும். கருப்பு இராசா வலது பக்கமுள்ள படத்தில் உள்ளவாறு முற்றுகை வைத்து ஆட்டத்தை முடிக்கும் முறையாகும்.சிப்பாயின் ஆதரவுடன் வெள்ளை இராணி நிற்பது காட்சி தோற்றத்தில் புறாவின் வால் போலத் தெரிவதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. இம்முற்றுகையில் கருப்பு இராசாவுடன் குதிரையைத் தவிர வேறு எந்தக் காய்கள் இருந்தாலும் அதைப் பற்றிய கவலையில்லாமல் சிப்பாயின் ஆதரவுடன் இராணி இறுதி முற்றுகை நிகழ்த்த முடியும்.

தோள்பட்டையணி

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
தோள்பட்டையணி முற்றுகை

தோள்பட்டையணி முற்றுகை அல்லது படை வீரன் தோளிலுள்ல சின்னம் (Epaulette or epaulet mate ) என்பது பின்வரிசையில் இராசா மற்றும் அவருக்கு இரண்டு பக்கங்களிலும் அவருடைய யானைகள் எதிரில் வெள்ளை இராணியின் முற்றுகை, என்ற அமைப்பில் உள்ள முற்றுகையாகும்[9] . இக்காட்சி ஒற்றுமை பார்ப்பதற்கு சீருடை அணிந்த வீரனின் தோள்பட்டையை அலங்கரிக்கும் அணிகலன் போல இருப்பதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறது[9]. கருப்பு அரசர் நிற்கும் வரிசைக்கு இணையான வரிசைகளில் அவருடைய காய்களே இடையூறாக நின்று தப்பிக்க வழியில்லாமல் செய்யும் முற்றுகை இதுவாகும்[10].

உதாரண ஆட்டங்கள்

தொகு

கிரெக்கோ

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
கிரெக்கோ முற்றுகை

கிரெக்கோவின் முற்றுகை (Greco's mate ) பொதுவான இம்முற்றுகை இத்தாலியின் சதுரங்க விரர் சியோசினோ கிரெக்கோ கண்டறிந்த காரணத்தால் இப்பெயர் பெற்றது. கிரெக்கோ முற்றுகையில் கருப்பு இராசா h8 சதுரத்தில் நிற்கும் போது சக சிப்பாய் g7 சதுரத்தில் நிற்கிறது. வெள்ளை அமைச்சர் g8 சதுரத்திற்கு கருப்பு இராசாவை வரவிடாமல் தடுக்கிறது. வெள்ளை இராணி அல்லது யானை இறுதி முற்றுகையை நிகழ்த்துகிறது[13].

h-வரிசை முற்றுகை

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
h - வரிசை முற்றுகை

h-வரிசை முற்றுகை ( h-file mate) என்பது g- வரிசையில் இறுதியில் நிற்கும் கருப்பு இராசாவை, அமைச்சரின் ஆதரவுடன் உள்ள வெள்ளை யானை h-வரிசையில் நின்று முற்றுகை வைத்துப் பிடிக்கும் முறையாகும். கருப்பு இராசா கோட்டை கட்டிக் கொண்ட அவருடைய பிரதேசத்தின் விலாமடிப்பில் இம்முற்றுகை நிகழ்கிறது. h- வரிசையில் இந்நிலையை எட்ட வெள்ளை அவ்வரிசையில் பல தியாகங்களைச் செய்திருக்கும்.

இது h- வரிசை முற்றுகை என அழைக்கப்பட்டாலும் மற்ற வரிசைகளிலும் நிகழ வாய்ப்புண்டு. உதாரணமாக, கருப்பு இராசா e8 சதுரத்திலும் d8 சதுரத்தில் நிற்கும் வெள்ளை யானைக்கு வெள்ளை அமைச்சர் g5 சதுரத்தில் நின்று ஆதரவளிக்கும் போதும் இம்முற்றுகை நிகழ்கிறது.

தூண்டில் முற்றுகை

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
தூண்டில் முற்றுகை

தூண்டில் முற்றுகை (Hook mate) என்பது வெள்ளை யானைக்கு ஆதரவளிக்கும் குதிரை மற்றும் குதிரைக்கு ஆதரவளிக்கும் ஒரு சிப்பாய் ஆகியன ஒரு தூண்டில் போல செயல்பட்டு கருப்பு இராசாவை சிறை பிடிப்பது ஆகும். ராசாவைத் தப்பிக்க விடாமல் அவருடைய சிப்பாயே தூண்டில் முள்ளாகி அவரை இறுக்கிப் பிடித்திருக்கிறது.

அரசருடன் இரண்டு அமைச்சர்கள்

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
அரசருடன் இரண்டு அமைச்சர்கள் முற்றுகை

அரசர் மற்றும் இரண்டு அமைச்சர்கள் முற்றுகை ( King and two bishops checkmate ) இறுதி முற்றுகை நிகழ்த்தி ஆட்டத்தை முடிக்க உதவும் நான்கு அடிப்படை முற்றுகைகளில் இதுவும் ஒன்றாகும். இராணி முற்றுகை, யானை முற்றுகை, இராசாவுடன் அமைச்சர் மற்றும் குதிரை சேர்ந்து வைக்கும் முற்றுகை முதலியன மற்ற அடிப்படை முற்றுகைகளாகும். இம்முற்றுகையில் இராசா மற்றும் இரண்டு அமைச்சர்கள் கூட்டணி கருப்பு இராசாவை மூலைக்குத் தள்ளிச்சென்று இறுதி முற்றுகை நிகழ்த்துகின்றன.

அரசருடன் இரண்டு குதிரைகள்

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
அரசர் மற்றும் இரண்டு குதிரைகள் முற்றுகை

அரசர் மற்றும் இரண்டு குதிரைகள் முற்றுகை ( King and two knights checkmate ) இராசாவுக்கு இறுதி முற்றுகை நிகழ்த்தி ஆட்டத்தை முடிப்பது இந்தக் கூட்டணிக்கு மிகவும் சிரமமான செயலாகும். சமவலிமையுடன் விளையாடும் இரண்டு ஆட்டக்காரர்களின் இவ்வகை ஆட்டம் பெரும்பாலும் சமநிலையில் முடியும். ஆனால் கருப்பு இராசா தவறாக விளையாடினால் அல்லது அவர் ஏற்கனவே மூலையில் சிறை பட்டிருந்தால் இம்முற்றுகை நிகழ வாய்ப்பு ஏற்படும்.

லொல்லி

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
லொல்லியின் முற்றுகை

லொல்லியின் முற்றுகை ( Lolli's mate ) கியாம்பாடிசுடா லொல்லி இம்முற்றுகையை கண்டறிந்த காரணத்தால் அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. வெள்ளை இராணி சிப்பாயின் ஆதரவுடன் கருப்பின் விலாமடிப்பு அமைப்பிற்குள் ஊடுருவி இறுதி முற்றுகை நிகழ்த்தி ஆட்டத்தை முடிப்பது இம்முறையாகும்.

மேக்சு லாஞ்சே

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
மேக்சு லாஞ்சே முற்றுகை

மேக்சு லாஞ்சே முற்றுகை ( Max Lange's mate ) மேக்சு லாஞ்சே இம்முற்றுகையை கண்டறிந்த காரணத்தால் அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. வெள்ளை இராணி அமைச்சரின் கடைசி வரிசையில் ஊடுருவி இறுதி முற்றுகை நிகழ்த்தி ஆட்டத்தை முடிப்பது இம்முறையாகும்.

மார்ப்பி

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
மார்ப்பியின் முற்றுகை

மார்ப்பியின் முற்றுகை ( Morphy's mate ) பால் மார்ப்பி இம்முற்றுகையை கண்டறிந்த காரணத்தால் அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. வெள்ளை யானையுடன் கூட்டணி அமைத்து அமைச்சர் முற்றுகை நிகழ்த்தி ஆட்டத்தை முடிப்பது இம்முறையாகும். இம்முற்றுகையிலும் கருப்பு இராசாவை சக சிப்பாயே தப்பிக்க விடாமல் தடுக்கிறது[14][15]. பலவகைகளில் இம்முற்றுகை மூலை முற்றுகை போலவே உள்ளது.

ஓபெரா

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
ஓபெரா முற்றுகை

ஓபெரா முற்றுகை ( Opera mate ) பால் மார்ப்பி இம்முற்றுகையை கண்டறிந்து இதை ஓபெராவில் நடைபெற்ற போட்டியில் நடைமுறைப் படுத்தியதால் ஓபெரா முற்றுகை என அழைக்கப்படுகிறது. கடைசி கிடைவரிசையில் நிற்கும் கருப்பு இராசாவை வெள்ளை யானை அமைச்சரின் ஆதரவுடன் தாக்கி இறுதி முற்றுகை நிகழ்த்துவது இம்முறையாகும். இங்கு கருப்பு இராசாவை அவருடைய குதிரையைத் தவிர பிற காய்கள் தப்பிக்க விடாமல் தடுக்கின்றன.

பில்சுபரி

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
பில்சுபெரி முற்றுகை. உதாரனமாக 1.Rxg7+ Kh8 2.Rg1+ Rf6 3.Bxf6#

பில்சுபெரி முற்றுகை ( Pillsbury's mate )[16] ஆரி நெல்சன் பில்சுபெரி இம்முற்றுகையை கண்டறிந்து விளையாடியதால் அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. கடைசி கிடைவரிசையில் நிற்கும் கருப்பு இராசாவை வெள்ளை யானை அமைச்சரின் ஆதரவுடன் தாக்கி இறுதி முற்றுகை நிகழ்த்துவது இம்முறையாகும்[17]. கருப்பு இராசா இறுதி முற்றுகையின் போது g8 அல்லது h8 சதுரங்களில் நிற்கும்.

இராணியின் முற்றுகை

தொகு
abcdefgh
8
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
இராணியின் முற்றுகை

இராணியின் முற்றுகை ( Queen mate ) இறுதி முற்றுகை நிகழ்த்தி ஆட்டத்தை முடிக்க உதவும் நான்கு அடிப்படை முற்றுகைகளில் இதுவும் ஒன்றாகும். இராசாவுடன் இரண்டு அமைச்சர்கள் முற்றுகை, யானை முற்றுகை, இராசாவுடன் அமைச்சர் மற்றும் குதிரை சேர்ந்து வைக்கும் முற்றுகை முதலியன மற்ற அடிப்படை முற்றுகைகளாகும். இம்முற்றுகையில் இராணி இராசாவுடன் கூட்டணி அமைத்து கருப்பு இராசாவை கடைசி வரிசைக்குத் தள்ளிச்சென்று இறுதி முற்றுகை நிகழ்த்துகிறது. இறுதி முற்றுகையிலும் இராணிக்கு இராசாவே ஆதரவு அளிக்கிறது.

ரெட்டி

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
ரெட்டி முற்றுகை

ரெட்டி முற்றுகை ( Réti's mate ) ரிச்செர்டு ரெட்டி இம்முற்றுகையை கண்டறிந்து விளையாடியதால் அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. 1910 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற போட்டியில் இவர் சவையெலி டார்டாகோவருக்கு எதிரான ஆட்டத்தில் 11 நகர்த்தல் ஆட்டத்தில் இம்முற்றுகையினால் வெற்றி பெற்றார். வெள்ளை யானையின் ஆதரவுடன் அமைச்சர் முற்றுகை நிகழ்த்தி ஆட்டம் முடிகிறது. கருப்பு இராசாவுக்கு அவருடைய சக காய்கள் நான்கு அவரைத் தப்பிக்கவிடாமல் செய்கின்றன. இது ஒரு பிரபலமான இறுதிமுற்றுகையாகும்.

நகர்வில்லாத முற்றுகை

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
நகர்வில்லாத முற்றுகை

நகர்வில்லாத முற்றுகை ( Smothered mate ) என்பது குதிரையால் இறுதி முற்றுகை நிகழ்த்தப்பட்டு கருப்பு இராசா நகர்வதற்கு இடமில்லாமல் முடியும் ஆட்டமாகும். இங்கு கருப்பு இராசாவை சூழ்ந்து அவருடைய காய்களே நிற்கும். இராசாவால் எங்கும் நகரவும் முடியாது, முற்றுகை வைத்த குதிரையை கைப்பற்றவும் முடியாது[18]. இம்முற்றுகைக்கு பிளிடர் மரபு என்ற பெயரும் உண்டு[19].

மூச்சுத்திணறல் முற்றுகை

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
மூச்சுத்திணறல் முற்றுகை

மூச்சுத்திணறல் முற்றுகை (Suffocation mate) என்பது குதிரையால் இறுதி முற்றுகை நிகழ்த்தப்பட்டு கருப்பு இராசா நகர்வதற்கு இடமிருந்தும் நகரமுடியாமல் தினறும் முற்றுகையாகும். ஏனெனில் நகர்வதற்கு வாய்ப்புள்ள இடங்கள் அமைச்சரின் கட்டுபாட்டில் இருக்கின்றன.

வண்ணத்துப்பூச்சியின் வால்

தொகு
abcdefgh
8
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
வண்ணத்துப்பூச்சியின் வால் முற்றுகை

வண்னத்துப்பூச்சியின் வால் முற்றுகை (Swallow's tail mate ) என்பது கருப்பு இராசாவை வெள்ளை இராணி யானை அல்லது மற்ற காய்களின் ஆதரவுடன் தாக்கி இறுதி முற்றுகை நிகழ்த்துவது ஆகும். இறுதி முற்றுகை அமைப்பு நிலை காட்சிக்கு வண்ணத்துப் பூச்சியின் வாலைப் போலவே இருப்பதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. பொதுவான முற்றுகை முறைகளில் ஒன்றான இதில் கருப்பு இராசாவுக்கு அவருடைய சக காயான கருப்பு யானையே அவரைத் தப்பிக்கவிடாமல் செய்கின்றது[20] . மேலும் தோற்றத்தில் இம்முறை தோள்பட்டையணி முற்றுகை போலவே காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. The original "Anastasia's mate" appeared in: Wilhelm Heinse, Anastasia und das Schachspiel: Briefe aus Italien vom Verfasser des Ardinghello [Anastasia and Chess: Letters from Italy by the author of Ardinghello] (Frankfurt am Main, (Germany): Tarrentrapp und Wenner, 1803), volume 2, pages 211-213.
    The original "Anastasia's mate" is reproduced in modern notion with illustrations, in: Wilhelm Heinse, Anastasia und das Schachspiel … (Hamburg, Germany: Jens-Erik Rudolph Verlag, 2010), page 162, example 2.
    Note: Nowadays, "Anastasia's mate" refers to a mate in which the checkmated king is on an edge of the board or in a corner of the board, whereas in the original mate, the king was near the center of the board.
  2. Renaud and Kahn (1962), p. 83.
  3. "Famous Checkmates". Chess Lessons For Beginners. chesslessons4beginners.com. Archived from the original on 30 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 29 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Renaud and Kahn (1962), p. 182.
  5. Renaud and Kahn (1962), p. 94.
  6. Renaud and Kahn (1962), p. 89.
  7. R. Schulder vs. Samuel Boden (London, 1853).
  8. Renaud and Kahn (1962), p. 136.
  9. 9.0 9.1 " Checkmates with Names", Mark Weeks, About.com: Chess
  10. Renaud and Kahn (1962), p. 46.
  11. "Kasparov makes same mistake twice and lives", Tim Krabbé, Open chess diary 88, January 16, 2001
  12. "The Mozart of Chess", Mathias Berntsen, Chessbase.com, January 27, 2004
  13. Renaud and Kahn (1962), p. 75.
  14. Renaud and Kahn (1962), p. 142.
  15. This mate derives from the game Louis Paulsen vs. Paul Morphy (November 8, 1857 in New York City, New York (First American Chess Congress)). Morphy didn't use this mating pattern to defeat Paulsen; instead, Morphy sacrificed his queen to remove the pawn in front of White's castled king, exposing the king to series of checks by Black's rook and bishop. (Morphy then added more pieces to the attack against White's king, rendering White's position hopeless; so White resigned.)
  16. [1] Teach Yourself Visually Chess By Jon Edwards
  17. Renaud and Kahn (1962), p. 128.
  18. Renaud and Kahn (1962), p. 35.
  19. Sonja Musser Golladay (2007). Los Libros de Acedrex Dados E Tablas: Historical, Artistic and Metaphysical Dimensions of Alfonso X's "Book of Games". ProQuest. pp. 278–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-549-27434-6.[தொடர்பிழந்த இணைப்பு]
  20. Renaud and Kahn (1962), p. 44.

இவற்றையும் காண்க

தொகு

உசாத்துணை

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=இறுதி_முற்றுகை_மாதிரி&oldid=3725985" இலிருந்து மீள்விக்கப்பட்டது