முலைப்பத்து

தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும்,

முலைப்பத்து என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும் வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். பெண்களின் முலைகளைப் பத்து ஆசிரிய விருத்தங்களினால் அல்லது பத்துக் கலித்துறைப் பாக்களினால் வருணித்துப் பாடுவதே முலைப்பத்து எனப் பாட்டியல் இலக்கண நூல்கள் கூறுகின்றன.[1] இதைப் பயோதரப்பத்து எனவும் சில நூல்கள் குறிப்பிடும்[2]. பயோதரம் என்பது வடமொழியில் முலையைக் குறிக்கும் ஒரு சொல்லாகும்.

குறிப்புகள்

தொகு
  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 852
  2. நவநீதப் பாட்டியல், முத்துவீரியம்

உசாத்துணைகள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முலைப்பத்து&oldid=3225426" இலிருந்து மீள்விக்கப்பட்டது