முல்லைத்தீவு தேர்தல் தொகுதி

முல்லைத்தீவு தேர்தல் தொகுதி (Mullaitivu Electorate) என்பது சூலை 1977 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் வட மாகாணத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரை உள்ளடக்கியதாகும்.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் முல்லைத்தீவு தேர்தல் தொகுதி வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்தொகு

தேர்தல் உறுப்பினர் கட்சி காலம்
1977 சே. மா. செல்லத்தம்பு தமிழர் விடுதலைக் கூட்டணி 1977-1989

1977 தேர்தல்கள்தொகு

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[2]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  எக்ஸ். எம். செல்லத்தம்பு தமிழர் விடுதலைக் கூட்டணி சூரியன் 10,261 52.36%
பி. சந்திரசேகர் சுயேட்சை தராசு 7,632 38.95%
ஆர். விக்கினராசா ஏணி 977 4.99%
வி. சந்திரசேனன் மணி 726 3.70%
தகுதியான வாக்குகள் 19,596 100.00%
நிராகரிக்கப்பட்டவை 76
மொத்த வாக்குகள் 19,672
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 24,698
வாக்கு வீதம் 79.65%

இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், எக்ஸ். எம். செல்லத்தம்பு உட்பட அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்கள்[3].

இவற்றையும் பார்க்கதொகு

மேற்கோள்களும் குறிப்புகளும்தொகு