முளா-முதா ஆறு

முளா-முதா ஆறு (Mula-Mutha River) இந்தியாவின் மகராட்டிரா மாநிலத்தில் பாயும் ஓர் ஆறாகும். இது புனே நகரில் முளா மற்றும் முதா ஆறுகளின் சங்கமத்தால் உருவாகிறது. பின்னர் பீமா ஆற்றினைச் சந்திக்கிறது. இதன் பின்னர் கிருஷ்ணா ஆற்றினைச் சந்தித்து இறுதியாக வங்காள விரிகுடாவில் கலக்கின்றது.[1]

முளா-முதா
முளா-முதா ஆற்றில் பாலம் எரவாடா அருகே
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மண்டலம்தக்காண பீடபூமி
மாவட்டம்புனே
நகரம்புனே
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுபுனே நகரம், முளா முதா ஆறு சங்கமம் & சங்கம்வாதி, புனே
 ⁃ ஆள்கூறுகள்18°34′23″N 73°49′54″E / 18.57306°N 73.83167°E / 18.57306; 73.83167
முகத்துவாரம்பீமா ஆறு
 ⁃ அமைவு
புனே மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா
 ⁃ ஆள்கூறுகள்
18°33′39″N 74°20′40″E / 18.56083°N 74.34444°E / 18.56083; 74.34444
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ இடதுமுளா
 ⁃ வலதுமுதா

சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள காவடி கிராமத்தின் வழியாகப் பாய்ந்து செல்லும் இந்த ஆறு, பல வலசைப்போகும் பறவைகளுக்குப் புகலிடமாக உள்ளது. சமீப காலமாக மாசுபாடு அதிகரிப்பதன் விளைவாகப் பறவைகளின் வலசைப்போகும் பறவைகளின் வரத்துக் குறைந்துள்ளது.[2] புனே நகராட்சிப் பகுதியில் ஆற்றில் கலக்கும் கழிவுகளால் ஏற்படும் மாசுபாடு பீமா ஆறு, உஜானி அணை மற்றும் கிருஷ்ணா ஆறு ஆகியவற்றின் நீர்த்தேக்கங்களில் அதிக அளவு மாசுபாட்டை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக நீர்வழி நோய்கள் பல ஏற்படுகின்றன.[3]

புனே மாநகராட்சி பகுதியிலிருந்து 125 எம். எல். டி. சுத்திகரிக்கப்படாத சாக்கடை நீரைக் கலப்பது உட்பட அதிக அளவு மாசுபாடு காரணமாக, மகாராட்டிர மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த ஆற்று நீரின் தரத்தை வகுப்பு-4 என வகைப்படுத்தியுள்ளது.[4] புனே மாநகராட்சி, மித்தி ஆற்றில் மும்பையில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு முயற்சியினை ஆக்சிஜனை செலுத்தி இந்த ஆற்றினையும் சுத்தப்படுத்தி மீட்டெடுக்கும் திட்டங்களை அறிவித்தது.[5]

2011ஆம் ஆண்டில், புனே மாநகராட்சிஆதரவுடன் மகராட்டா வர்த்தகம், தொழில்கள் மற்றும் விவசாயம் அமைப்பின் முன்னெடுப்பினை அடுத்துப் பல ஜப்பானியத் தொழிலதிபர்கள் முளா-முதா ஆற்றினைச் சுத்தம் செய்து அழகுபடுத்துவதற்கு ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தனர். 2011ஆம் ஆண்டு, புனே மாநகராட்சி முளா- முதாவின் கரையில் ஷிவானே முதல் காரடி வரை 22 கிலோமீட்டர்கள் (14 mi) ) தூரத்திற்கு ஆற்றங்கரை சாலை அமைக்க ஒப்புதல் அளித்தது. நகரின் பல முக்கிய சாலைகளை இணைக்கத் திட்டமிடப்பட்டது.

2014ஆம் ஆண்டு புனே காவல் துறையினர் காரடி அருகே உள்ள ஆற்றங்கரையில் மரிஜுவானா செடிகள் வளர்க்கப்பட்டதைக் கண்டுபிடித்து அழித்தனர்.[6]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "RIVER SYSTEMS". GAZETTEERS OF BOMBAY jSTATE - POONA. Ministry of Culture and Tourism, Government of Maharashtra. https://cultural.maharashtra.gov.in/english/gazetteer/Poona/PART%20I/Chap(1)/River%20Systems.htm. பார்த்த நாள்: 7 July 2014. 
  2. Madaan, Neha (11 December 2010). "How river pollution is robbing Kavadi of birds". Times of India (Pune). http://timesofindia.indiatimes.com/city/pune/How-river-pollution-is-robbing-Kavadi-of-birds/articleshow/7079541.cms. 
  3. Phadnis, Mayuri (12 June 2014). "Ujani dam is full of toxins, finds survey". Pune Mirror (Pune) இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924110717/http://www.punemirror.in/pune/civic/Ujani-dam-is-full-of-toxins-finds-survey/articleshow/36403388.cms. 
  4. "MAJOR SOURCES OF POLLUTION in PUNE" (PDF). Maharashtra Pollution Control Board. Archived from the original (PDF) on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 July 2014.
  5. "Mula, Mutha ecosystem to be cleaned up on the lines of Mithi". http://archive.indianexpress.com/news/mula-mutha-ecosystem-to-be-cleaned-up-on-the-lines-of-mithi/648082/. 
  6. "More cannabis growth found on Mula-Mutha river bed". Indian Express (Pune). 2 March 2014. http://indianexpress.com/article/cities/pune/more-cannabis-growth-found-on-mula-mutha-river-bed/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முளா-முதா_ஆறு&oldid=3591242" இலிருந்து மீள்விக்கப்பட்டது