முளைக் கண்ணிமுடிச்சு
முளைக் கண்ணிமுடிச்சு (pile hitch) என்பது, கயிறு ஒன்றைக் கழி அல்லது வேறு பொருட்களுடன் கட்டுவதற்குப் பயன்படும் ஒருவகைக் கண்ணிமுடிச்சு ஆகும். இது முடிவதற்கு மிகவும் இலகுவானது. இரண்டு முனைகளும் இல்லாவிட்டாலும், கயிற்றின் இடைப்பகுதியில் இதனை முடிய முடியும். இதனால் இது பல வேளைகளில் ஒரு பெறுமதியான முடிச்சாக அமைகிறது.
முளைக் கண்ணிமுடிச்சு | |
---|---|
வகை | கண்ணி |
பொதுப் பயன்பாடு | கயிறொன்றைக் கழியொன்றிலோ அல்லது வேறு பொருளிலோ கட்டுதல் |
ABoK |
|
இதனை முடிவதற்கு, கயிற்றின் இடைப்பகுதியில் ஒரு தடத்தைப் போடவேண்டும். கழியொன்றின் முனைக்கு அருகில் தடத்தின் இரண்டு பகுதிகளையும் சுற்றவேண்டும். அதனைக் கயிற்றைச் சுற்றி அதன் கீழாக எடுக்கவேண்டும். பின்னர் அந்தத் தடத்தின் நுனியை எடுத்துக் கழியின் முனையூடாக மாட்டவேண்டும்.
குறிப்புகள்
தொகு
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளியிணைப்புக்கள்
தொகு- முளைக் கண்ணிமுடிச்சு (ஆங்கில மொழியில்)