முஷ்டாக் அலி கான்
முஷ்டாக் அலி கான் (Mushtaq Ali Khan) (20 சூன் 1911 வாரணாசி - 21 சூலை 1989) ஒரு இந்தியப் பாரம்பரிய சித்தார், சுர்பகார், பக்கவாத்தியக் கலைஞராவார்.
பயிற்சி
தொகுகான் தனது தந்தை ஆசிக் அலிகானிடமிருந்து இசையைக் கற்றுக்கொண்டார். இவர் 19 ஆம் நூற்றாண்டின் கலைஞர் பர்கத்துல்லா கானிடமிருந்து தில்லியின் மாசித் செனின் வம்சாவளியைச் சேர்ந்தவர். [1] [2]
முதலில் ஜான்பூரில் ஒரு அரசவை இசைக்கலைஞராக இருந்த இவர் ஒரு சுயாதீனமான வாழ்க்கையைத் தொடர அர்சவையை விட்டு வெளியேறினார். 1929 ஆம் ஆண்டில் அனைத்திந்திய வானொலியில் வாசிக்கத் தொடங்கிய இவர், அலகாபாத்தில் 1931 ஆம் ஆண்டு நடந்த இசை மாநாட்டில் நிகழ்ச்சியை வழங்கினார். 1940கள், 1950களின் பெரும்பகுதிகளில், எட்டாவா கரானாவின் (பள்ளி) எனயத் கான் மறைந்ததைத் தொடர்ந்து, நிகில் பானர்ஜி, ரவிசங்கர் மற்றும் விலாயத் கான் ஆகியோரின் எழுச்சிக்கு முன்னர் 1950 களின் நடுப்பகுதியில்இந்தியாவின் மிக முக்கியமான சித்தார் கலைஞராக இவர் கருதப்பட்டார். [3] இந்தியாவின் தேசிய இசை, நடனம் மற்றும் நாடக அகாடமியான சங்கீத நாடக அகாதமியால் பயிற்சி பெற்ற கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த இந்திய அங்கீகாரமான சங்கீத நாடக அகாதமி விருதை 1968 ஆம் ஆண்டில் இவர் வென்றார். [4]
இறப்பு
தொகுமுஷ்டாக் அலி 21 சூலை 1989 அன்று இறந்தார்.
குறிப்புகள்
தொகு- ↑ Allyn Miner, Sitar and Sarod in the 18th and 19th Century, 1993
- ↑ Gerry Farrell The Senia Style of Sitar Playing in Contemporary India, British Journal of Ethnomusicology, Vol. 11, No. 2. (2002)
- ↑ Gerry Farrell The Senia Style of Sitar Playing in Contemporary India, British Journal of Ethnomusicology, Vol. 11, No. 2. (2002)
- ↑ "SNA: List of Akademi Awardees". Sangeet Natak Akademi Official website. Archived from the original on 30 May 2015.