முஹம்மது ஹம்துல்லா சயீத்

இந்திய அரசியல்வாதி

முஹம்மது ஹம்துல்லா சயீத் (Muhammed Hamdulla Sayeed; பிறப்பு - 11 ஏப்ரல் 1982) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர்களுள் ஒருவர். 2009 மற்றும் 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் லட்சத்தீவு மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1].

முஹம்மது ஹம்துல்லா சயீத்
மக்களவை (இந்தியா)
பதவியில்
2024
முன்னையவர்முகமது பைசல்
தொகுதிஇலட்சத்தீவுகள்
பதவியில்
2009 - 2014
முன்னையவர்பி. பூகுன்கி கோயா
பின்னவர்முகமது பைசல்
தொகுதிஇலட்சத்தீவுகள்
தலைவர், இலட்சத்தீவு காங்கிரசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 ஏப்ரல் 1982 (1982-04-11) (அகவை 42)
ஆந்தரோத், இலட்சத்தீவுகள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்இலட்சத்தீவுகள்

பிறப்பு

தொகு

முஹம்மது ஹம்துல்லா சயீத் மைசூரில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் பி. எம். சையது மற்றும் ரஹ்மத் சயீத் ஆகியோருக்கு மகனாக 11 ஏப்ரல் 1982ல் மைசூரில் பிறந்தார்.[2]

அரசியல் வாழ்க்கை

தொகு

முகமது ஹம்துல்லா சயீத், 2009ஆம் ஆண்டு நடைப்பெற்ற மக்களவை தேர்தலில், பதினைந்தாவது மக்களவைக்கு தனது 26 வயதில், மிகவும் இளவயது உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3],[4]

2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடைப்பெற்ற மக்களவை தேர்தல்களில் போட்டியிட்டு முகமது பைசலிடம் தோல்வியுற்றார்.

2024ஆம் ஆண்டு நடைப்பெற்ற மக்களவை தேர்தலில், 2,647 வாக்குகள் வித்தியாசத்தில் 18 ஆவது மக்களவைக்கு இரண்டாம் முறையாக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Fifteenth Lok Sabha members bioprofile - Shri Hamdullah Sayeed". Lok Sabha website. பார்க்கப்பட்ட நாள் 14 March 2010.
  2. "Youngest MP and raring to perform- Hindustan Times". Archived from the original on 25 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 3 சூன் 2009.
  3. The Economic Times (2 June 2009). "Rules bent to fit in youngest MP in Lok Sabha" இம் மூலத்தில் இருந்து 22 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240522152607/https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/rules-bent-to-fit-in-youngest-mp-in-lok-sabha/articleshow/4606822.cms?from=mdr. 
  4. "Entry into Parliament is a reward: Hamdulla Sayeed". 21 May 2009.
  5. https://news.abplive.com/elections/muslim-mps-lok-sabha-2024-yusuf-pathan-iqra-choudhary-asaduddin-owaisi-1693508