முஹயத்தீன் ஆண்டவர் பள்ளிவாசல்

முஹயத்தீன் ஆண்டவர் பள்ளிவாசல் ( Arabic: مسجد سيد محي الدين , English: Saint Muhyuddin Mosque) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநில தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் நகரில் உள்ளது.

முஹ்யுத்தீன் ஆண்டவர் பள்ளிவாசல்
مسجد سيد محي الدين
Saint Muhyuddin Mosque
முஹ்யுத்தீன் ஆண்டவர் பள்ளிவாசல்e
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இந்தியா திருப்பனந்தாள்
புவியியல் ஆள்கூறுகள்11°05′13″N 79°27′00″E / 11.087033°N 79.449888°E / 11.087033; 79.449888
சமயம்இசுலாம்
மண்டலம்தென் இந்தியா
மாநிலம்தமிழ் நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
வட்டம்திருவிடைமருதூர்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1989 (rebuilt)
இணையத்
தளம்
www.muhyuddin.in

வரலாறு தொகு

1980 ஆம் ஆண்டு முற்பகுதியில், பழைய மசூதி இடித்துத் தள்ளப்பட்டது. தற்போதைய வடிவத்தில் மீண்டும் கட்டப்பட்டது. புதிய மசூதி திறப்பு விழா வெள்ளிக்கிழமை, 1989 பிப்ரவரி, 3 ம் தேதி நடைபெற்றது.

அமைப்பு தொகு

மசூதி இரண்டு வாயிற்களைக் கொண்டு உள்ளது.குவிமாடம் இல்லை.இரண்டு மினார்கள் உள்ளன.பள்ளிவாசலின் உள்ளே உளு செய்ய ஹவுஸ் உள்ளது.

மசூதி இரண்டு மாடிகளில் உள்ளது. தரை தளத்தில் பிரார்த்தனை செய்யப்படுகிறது .

அடக்கத்தலம் தொகு

மசூதி வளாகத்தின் நுழைவாயிலில் மஸ்தான் சாஹிப் வலியுல்லா என்ற ஷேக் அப்துர் ரகுமான் பக்சின் அடக்கத்தலம் உள்ளது. (Arabic: عبد الرحمن بكش - Abdu-r Raḥmān Baksh).

உருஸ் சந்தனக்கூடு விழா தொகு

ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபியுல் அவ்வல் 22 அன்று இங்கு உருஸ் எனப்படும் சந்தனக்கூடு விழா நடைபெறும்

புகைப்படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்பு தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Muhyuddin Andavar Mosque
என்பதில் ஊடகங்கள் உள்ளன.