முஃகர்ரம்

இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாகும்
(முஹர்ரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இசுலாமிய நாட்காட்டி

  1. முஃகர்ரம்
  2. சஃபர்
  3. ரபி உல் அவ்வல்
  4. ரபி உல் ஆகிர்
  5. ஜமா அத்துல் அவ்வல்
  6. ஜமா அத்துல் ஆகிர்
  7. ரஜப்
  8. ஷஃபான்
  9. ரமலான்
  10. ஷவ்வால்
  11. துல் கஃதா
  12. துல் ஹஜ்

முஃகர்ரம் (முகரம், அரபி: محرم) என்பது இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாகும். இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்று. இசுலாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் கிரெகொரியின் நாட்காட்டியுடன் ஒப்பிடும்போது இது ஆண்டிற்காண்டு நகருவது போன்று காட்சியளிக்கும். இந்த மாதத்தில் சண்டைகள், புனிதப் போர் புரிவதாயினும் தடை செய்யப்பட்டுள்ளது. சில இசுலாமியர் இம்மாதத்தின் ஒன்பதாம் நாளிலும் பத்தாம் நாளிலும் உண்ணா நோன்பு இருத்தல் வழமையாகும்.முஃகர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் (அரபு மொழியில் ஆசூரா) அன்று தியாகத் திருநாளாகக் கொண்டாடப்பட்டு அன்று சீஆ இசுலாமியர் உண்ணாதிருப்பர்.

முஃகர்ரம் மாதமும் ஆசூரா நோன்பும்

தொகு

முஃகர்ரம் பண்டிகை (Remembrance of Muharram) கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை சீஆக்களால் நினைவுகூறப்படுகிறது.

ஷியா முஸ்லிம்கள் தவிர்ந்த ஏனைய இசுலாமியர் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளில் வைக்கப்படும் நோன்பானது, தான் கடவுள் என்று கூறிய அரசன் ஃபிர்அவ்ன் மற்றும் படைகளை கடலில் மூழ்கடித்து மூஸா (அலை) அவர்களை காப்பாற்றியதற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதற்காகவைக்கப்படுவதாகும்[1]

நிகழ்வுகள்

தொகு

சந்திர கணக்கீட்டின் படி பின்வருமாறு முஃகர்ரம் மதிப்பிடப்பட்டுள்ளது [2]

  • முஃகர்ரம் 01: இந்தியாவில் ஹஜரத் அம்மா சாகேப் பீவி ஹபிப கதறி இறந்த ஆண்டு
  • முஃகர்ரம் 10: ஆசூரா நோன்பு

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-13. பார்க்கப்பட்ட நாள் 2014-06-01.
  2. http://www.staff.science.uu.nl/~gent0113/islam/ummalqura.htm

வெளியிணைப்புகள்

தொகு
இ நா முதல் நாள்(பொ ஊ / அ டொ) கடைசி நாள்(பொ ஊ / அ டொ)
1431 18 டிசம்பர் 2009 15 சனவரி 2010
1432   7 டிசம்பர் 2010   4 சனவரி2011
1433 26 நவம்பர் 2011 25 டிசம்பர் 2011
1434 15 நவம்பர்2012 13 டிசம்பர் 2012
1435   4 நவம்பர் 2013   3 டிசம்பர் 2013
1436 25 அக்டோபர் 2014 22 நவம்பர் 2014
1437 14 அக்டோபர் 2015 12 நவம்பர் 2015
2010 முதல் 2015 வரை முஃகர்ரம் தேதிகள் உள்ளன
1442 ஆகஸ்ட் 21,2020 ____
"https://ta.wikipedia.org/w/index.php?title=முஃகர்ரம்&oldid=3567834" இலிருந்து மீள்விக்கப்பட்டது