ஷஃபான்
ஷஃபான்( அரபி: شَعْبَان) என்பது இஸ்லாமிய ஆண்டின் எட்டாவது மாதமாகும். இஸ்லாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் தற்போது உலகளவில் பயன்படுத்தப்படும் நாட்காட்டியான கிரெகொரியின் நாட்காட்டியுடன்ஒப்பிடும்போது இதுஆண்டிற்காண்டு நகருவது போன்று காட்சியளிக்கும்.
இம்மாதம் மாதம் பிறை 15 ம் இரவு லைலதுல் பராத்(நரக விடுதலை பெறும் இரவு), லைலத்துல் முபாரக்கா (பரக்கத் செய்யப்பட்ட இரவு), லைலத்துர் ரஹ்மா (ரஹ்மத் செய்யப்பட்ட இரவு), என பல பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது.[1] பராத் அன்று முஸ்லிம்கள் ஸுன்னத்தான நோன்பு நோற்பார்கள். பராஅத் இரவு இறையருள் இறங்கும் இரவாகும். பராஅத் எனும் அரபி சொல்லுக்கு விடுதலை என்பது பொருளாகும். புனிதமிக்க அவ்விரவில் நரகவாசிகள் விடுதலை பெறுகிறார்கள் என்பதால் அந்த இரவிற்கு லைலதுல் பராஅத் (விடுதலை பெறும் இரவு) என பெயர் வந்தது.
இது ரஜப் மாதத்தை அடுத்து வரும் மாதமாகும். மேலும், இது புனித ரமலான் மாதத்துக்கு முந்திய மாதமாகும். அனைத்து உலக முஸ்லிம்களும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பதற்காக ஷஃபான் மாத இறுதியில் தயாராகுவார்கள். ஷஃபான் மாதத்தின் இறுதியில் தலைப்பிறை தென்பட்ட பின் ரமலான் மாதத்தின் முதல் நாளில் நோன்பினை கடைபிடிப்பார்கள்.[2]
காலக் கணிப்பு
தொகுஇஸ்லாமிய நாட்காட்டி என்பது ஒரு சந்திர நாட்காட்டி ஆகும். அமாவாசை மற்றும் முதல் பிறை தோன்றும் போது போது சிறிது காலம் வித்தியாசப் பட்டு தொடங்கும். சந்திர ஆண்டு சூரிய ஆண்டை விடக் 11 முதல் 12 நாட்கள் குறைவாக இருப்பதால், ஷஃபான் மாதம் எல்லா காலப் பருவங்களிலும் மாறிவரும்.
ஹிஜ்ரி | தலைப் பிறை | இறுதி நாள் |
---|---|---|
1437 | 8 மே 2016 | 5 சூன் 2016 |
1438 | 28 ஏப்ரல் 2017 | 26 மே 2017 |
1439 | 17 ஏப்ரல் 2018 | 15 மே 2018 |
1440 | 6 ஏப்ரல் 2019 | 5 மே 2019 |
1441 | 25 மார்ச்சு 2020 | 23 ஏப்ரல் 2020 |
1442 | 14 மார்ச்சு 2021 | 12 ஏப்ரல் 2021 |
ஷஃபான் மாதம் 2016 தொடக்கம் 2021 வரை |
நிகழ்வுகள்
தொகு- 01 ஷஃபான், ஸைனப் பின்த் அலி அவர்களின் பிறப்பு
- 03 ஷஃபான், இமாம் ஹுஸைன் அவர்களின் பிறப்பு
- 04 ஷஃபான், அப்பாஸ் இப்னு அலி அவர்களின் பிறப்பு
- 05 ஷஃபான், அலி இப்னு ஹுசைன் அவர்களின் பிறப்பு
- 05 ஷஃபான், death of Fizza, the hand-maiden (Qaneez) of Fatimah
- 07 ஷஃபான், காஸிம் இப்னு ஹஸன் அவர்களின் பிறப்பு
- 11 ஷஃபான், அலி அல் அக்பர் இப்னு ஹுஸைன் அவர்களின் பிறப்பு
- 15 ஷஃபான், லைலதுல் கத்ர் இரவு
- 22 ஷஃபான் ஹி.1314, முஹம்மத் உஸ்மான் தமானி அவர்களின் இறப்பு
- 27 ஷஃபான், ஹி.1313, செய்யது லால் ஷாஹ் ஹம்தானி அவர்களின் பிறப்பு
மேற்கோள்கள்
தொகு- ↑ பராஅத் இரவு என்றால் என்ன?
- ↑ ரமலானின் முதல் பிறை