மு. அப்துல் சமது
மு. அப்துல் சமது (பிறப்பு: சனவரி 15 1962, இந்திய முஸ்லிம் எழுத்தாளர். தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெற்கு சூரன்குடி எனும் கிராமத்தில் பிறந்த இவர்,சூரன்குடியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியையும், நாகர்கோயில், தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரியில் உயர்கல்வியையும் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்தவர்.
மு. அப்துல்சமது | |
---|---|
பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் | |
பிறப்பு | மு. அப்துல்சமது ஜனவரி 15, 1962 தெற்கு சூரன்குடி, கன்னியாகுமரி மாவட்டம் |
இருப்பிடம் | தெற்கு சூரன்குடி, கன்னியாகுமரி மாவட்டம் |
தேசியம் | இந்தியன் |
கல்வி |
|
பணி | இணைப்பேராசிரியர் (பணி நிறைவு) |
பணியகம் | ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி உத்தமபாளையம் |
அறியப்படுவது | எழுத்தாளர், பேச்சாளர் |
சமயம் | முஸ்லீம் |
பெற்றோர் | முகமது அசன்கான் (தந்தை) ஆயிஷா பேகம் (தாய்) |
வாழ்க்கைத் துணை | ஹசீனா பேகம் |
பிள்ளைகள் | அப்துல் அகது (மகன்) ஹீமைரா (மகள்) |
விருதுகள் | சிறந்த நாட்டுநலப் பணித்திட்ட அதிகாரி விருது |
தேனி மாவட்டம் உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் இணைப்பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றி, பணி நிறைவு பெற்றவர். [1] எழுத்தாளரும், பேச்சாளருமான [2] இவர், நாட்டுப்புறவியல், இதழியல், நாடகம் ஆகிய துறைகளிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.
தமிழகத்தின் முன்னணி இஸ்லாமிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. 2011 ஆம் ஆண்டில் மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்ற பன்னாட்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில், ’இசுலாமிய இலக்கியங்களில் தமிழ் மரபுகள்’ எனும் கட்டுரையையும், 2019 ஆம் ஆண்டில், காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில், ’திருக்கோயில் பண்பாட்டில் முஸ்லீம்கள்’ எனும் கட்டுரையையும் வழங்கிய இவர், பல்வேறு கருத்தரங்குகளில் கலந்து கொண்டு 21 கட்டுரைகள் வழங்கியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
தொகுஇவர் விண் தொலைக்காட்சியில் "அலசல் அரங்கம்" நிகழ்ச்சியின் நெறியாளராவார். மேலும் தமிழன் தொலைக்காட்சியில் "மானுட வசந்தம்" நிகழ்ச்சியில் தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.
எழுதிய நூல்கள்
தொகு- சக்கராப்பள்ளி தந்த செம்மல்
- தியாகத்தின் நிறம் பச்சை
- தமிழ் முஸ்லீம்களின் வீரச்சுவடுகள்
- இஸ்லாத்தின் மனித மதிப்பு
- இஸலாமியத் தமிழ்ப் புதினங்கள் சித்தரிக்கும் அறியப்படாத வாழ்வும் பண்பாடும் [3], [4]
- ஹாஜி கருத்த ராவுத்தர் - 125
- ஒரு குச்சி ஒரு வானம் [5]
- திருப்பி அனுப்பும் வானம் - நவீன வாசிப்பில் இஸ்லாம் [6]
எனும் 8 நூல்களை எழுதியிருக்கிறார்.
தமிழக இசைமரபில் முஸ்லீம்கள் (ஆய்வுக்கோவை), கவிக்கோ கருவூலம் உள்ளிட்ட 8 நூல்களில் தொகுப்பாசிரியராகவும் செயல்பட்டிருக்கிறார்.
பெற்ற விருதுகள்
தொகுகோவை திருக்குர் ஆன் அறக்க்கட்டளையின் சிறந்த மார்க்க இலக்கியப் பணிக்கான, ’அல்லாமா அ. க. அப்துல்ஹமீது பாகவி விருது’, சீதக்காதி அறக்கட்டளையின் 'சதக்கதுல்லா அப்பா இலக்கிய விருது',நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் இலக்கிய விருது, இந்திய சமூக கலாச்சார நட்புறவுக் கழகத்தின் ‘சமூக நல்லிணக்க விருது’ இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் ‘தமிழ்மாமணி விருது’, தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பேரவையின் ‘மனித நேயத் தமிழறிஞர் விருது’, சென்னை, கம்பன் கழகம் வழங்கிய ‘பேராசிரியர் கே. சுவாமிநாதன் விருது’ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் விருதுகளைப் பெற்றுள்ளார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழத்தின் ‘சிறந்த நாட்டுநலப் பணித்திட்ட அதிகாரி விருது’, தமிழ்நாடு அரசின் ‘சிறந்த நாட்டுநலப் பணித்திட்ட அதிகாரி விருது’ ஆகியவற்றையும் பெற்றிருக்கிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ தேனித் தமிழ்ச் சங்கம் - உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
- ↑ மண்ணடி காகா தளத்தில் இடம் பெற்ற செய்தி
- ↑ தமிழிணையம் - மின்ன்னூலகம் - புத்தகங்கள் பகுதி
- ↑ விருபா தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு வலைத்தளம்
- ↑ நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வலைத்தளப் பக்கம்
- ↑ யுனிவர்சல் பப்ளிஸர்ஸ் வலைப்பக்கம்
உசாத்துணை
தொகு- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011