மு. இராஜாங்கம்

இந்திய அரசியல்வாதி


மு. இராஜாங்கம் (பி. 1939) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (1985-1988).

பிறப்பு தொகு

இராஜாங்கம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகில் அமைந்த திருவிடைமருதூரில் தெற்கு எடத்தெருவில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் வீரப்படையாட்சி - கண்ணம்பாள் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை முத்துபடையாட்சி வீரப்பபடையாட்சியின் மூத்த மகன். இராஜாங்கம் முத்துபடையாட்சியின் மூன்றாவது மகன் - இவருக்கு இரண்டு சகோதரர்களும் ,இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.

குடும்பம் தொகு

இவர் விஜயலெட்சுமி என்பவரை மணம் முடித்தார்; சீத்தாலெட்சுமி என்ற மகளும் கோபாலகிருஷ்ணன், மற்றும் பாலமுருகன் என்ற மகன்களும் உள்ளனர். கோபாலகிருஷ்ணன் பேரூராட்சிதலைவராகவும், பாலமுருகன் மருத்துவராகவும் உள்ளனர். இவர் தனது 16 வயது முதல் தனது இளையதந்தை ராமசந்திர படையாட்சி, ஜி. கே. மூப்பனார், ஜி. ரெங்கசாமி மூப்பனார் ஆகியோரின் வழிகாட்டலுடன் அரசியலில் இறங்கினார். பின் ஆன்மீகத்திலும் ஈடுபட்டார்

ஆன்மீகம் தொகு

திருவிடைமருதூர் உள்ள திரெளபதியம்மன் கோயில் மற்றும் மகாலிங்க சுவாமி கோயில் இவற்றுக்கு இவரது தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

அரசியல் தொகு

  • 1972-கள்ளுக்கடை மறியல் போராட்டம், வட்டாரகாங்கிரஸ் கமிட்டி தலைவர்
  • 1973-அறப்போராட்டத்தில் கலந்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்
  • 1977-இந்திரா காந்தி கைது செய்ததைக் கண்டித்த போராட்டத்தில் சிறை சென்றார்
  • மறைமலைநகர் ரயில்நிலையப் பெயர் போராட்டத்தில் சிறைவாசம்
  • 1985-1988 வரை திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர்.
  • 1995-1996-வரை தஞ்சை ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்.
  • 1996-1998-தஞ்சைமாவட்ட த.மா.க தலைவர்.
  • 1999- தமாக அறிவித்த விலைவாசி உயர்வு போராட்டத்தில் திருச்சியில் சிறைவாசம்.
  • 2000- தமாக போராட்டத்தில் திருச்சியில் சிறைவாசம்.
  • 2000-2002 தமாக. மாவட்டத்தலைவர் தஞ்சை (வடக்கு).
  • 2002-2013 வரை காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தஞ்சை (வடக்கு).

மேற்கோள்கள் தொகு

”நினைவுகளும் பகிர்வுகளும்” என்ற மு.இராஜங்கம் எழுதிய நூலில் இருந்து.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._இராஜாங்கம்&oldid=3712687" இலிருந்து மீள்விக்கப்பட்டது