மு. க. முத்து

தமிழ்த் திரைப்பட நடிகர்

மு.க.முத்து தி. மு. க பிறப்பு: சனவரி 14 1948 முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன். மு.கருணாநிதியின் மூத்த மனைவியும் சிதம்பரம் ஜெயராமன் சகோதரியுமான[1] பத்மாவதி இவரின் தாயார் ஆவார். தந்தையின் கலையுலக வாரிசாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்த முடிவு தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை உண்டாக்கியது. தனது திரை வாழ்விற்கு வந்த எதிர்ப்பு பணியாக இதைக் கருதிய எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகமெனத் தனிக்கட்சி துவங்க வித்திட்டது இந்நிகழ்வு[2]

பூக்காரி படத்தில் தொடங்கி பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், அணையா விளக்கு என்று தொடர்ந்து பல படங்களில் நடித்தார் மு.க.முத்து. நடிப்பு மட்டும் இல்லாமல் படங்களில் பாடியும் உள்ளார். இவரின் நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா, சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க.. பாடல்கள் மக்களால் மிக விரும்பப்பட்டவை.

தனிப்பட்ட வாழ்க்கையில் இவருக்கு ஏற்பட்ட பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு - சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு - மீண்டும் திரைப்பட உலகுக்கு வந்தார். பவித்ரன் இயக்கத்தில் வெளியான மாட்டு தாவணி என்ற திரைப்படத்துக்காக தேவா இசையமைப்பில் நாட்டுப்புறப் பாடல் ஒன்றைப் பாடினார்.

இதனையும் காண்க

தொகு

குறிப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._க._முத்து&oldid=3902094" இலிருந்து மீள்விக்கப்பட்டது