மு. சிவலிங்கம் (கணினி தொழில்நுட்ப எழுத்தாளர்)
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
மு. சிவலிங்கம் (12 செப்டம்பர் 1951 – 13 பெப்ரவரி 2024) தமிழ்நாட்டைச் சேர்ந்த கணினி சார் தொழில்நுட்ப, மார்சிய நூல் மொழிபெயர்ப்பு எழுத்தாளர் ஆவார்.[1] இந்திய அரசின் தொலைத்தகவல் தொடர்புத் துறையில் 33 ஆண்டு காலம் பொறியாளராகப் பணியாற்றி 2007 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்ற இவர் கணிதம், தமிழ் இலக்கியம், தொழிலாளர் சட்டம், மனிதவள மேம்பாடு மேலாண்மை, கணினிப் பயன்பாட்டு அறிவியல் போன்ற பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். இவர் கணினி தொடர்பான பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டு பல ஆய்வுக் கட்டுரைகளையும் படித்துள்ளார்.[2]
மு. சிவலிங்கம் | |
---|---|
பிறப்பு | கூவக்காபட்டி, பிரிக்கப்படாத மதுரை மாவட்டம், மதராசு மாநிலம் (தற்போது திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு), இந்தியா | செப்டம்பர் 12, 1951
இறப்பு | 13 பெப்ரவரி 2024 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 72)
இனம் | தமிழர் |
குடியுரிமை | இந்தியர் |
கல்வி | கணிதம், தமிழ் இலக்கியம், தொழிலாளர் சட்டம், மனிதவள மேம்பாடு மேலாண்மை, கணினிப் பயன்பாட்டு அறிவியல் பாடங்களில் முதுகலைப் பட்டம் |
பணி | பொறியாளர் (ஓய்வு) இந்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனம் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
பெற்றோர் | முனியப்பன் (தந்தை), சின்னக் கண்ணம்மாள் (தாய்) |
வாழ்க்கைத் துணை | வி. கே. சாரதா |
பிள்ளைகள் | ஜென்னி சினேகலதா (மகள்) லெனின் ரவீந்திரநாத் (மகன்) |
வலைத்தளம் | |
sivalingam |
எழுதியுள்ள நூல்கள்
தொகுகணினி சார் நூல்கள்
தொகு- ஐகியூ தேர்வுகள் எழுதுவது எப்படி?
- டாஸ் கையேடு
- உள்ளங்கைக்குள் உலகம்
- டி’பேஸ் வழியாக சி-மொழி
- கம்ப்யூட்டர் இயக்க முறைகள் டாஸ், யூனிக்ஸ், விண்டோஸ் கையேடு
- மின்-அஞ்சல்
- வருங்கால மொழி சி#
- +1 கணிப்பொறியியல் பாடநூல் – தொகுதி 2
- +2 கணிப்பொறியியல் பாடநூல் – தொகுதி 2
- தகவல் தொழில்நுட்பம் – ஓர் அறிமுகம்
- நெட்வொர்க் தொழில்நுட்பம்
- ரெட்ஹெட் லினக்ஸ், ஓப்பன் ஆஃபிஸ் கையேடு
மார்சிய நூல்கள்
தொகு- லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும் (ஏங்கெல்ஸ் எழுதிய Ludwig Feuerbach and The End of Classical German Philosophy என்ற நூலின் மொழிபெயர்ப்பு)
- கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (ஏங்கெல்ஸ் எழுதிய Principles of Communism என்ற நூலின் மொழிபெயர்ப்பு)
- கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை (மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரும் எழுதிய Communist Manifesto என்ற நூலின் மொழிபெயர்ப்பு)
- கூலியுழைப்பும் மூலதனமும் (மார்க்ஸ் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பு)
- கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் (ஏங்கெல்ஸ் எழுதிய Socialisme utopique et Socialisme scientifique என்ற நூலின் மொழிபெயர்ப்பு)
பங்களிப்புகள்
தொகுஇவர் தமிழ்நாடு அரசு மற்றும் சில அமைப்புகளில் பொறுப்பேற்று முக்கியப் பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
- பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி எம்சிஏ மாணவர்களுக்குக் கவுரவ ஆசிரியர் (1996-2003)
- தமிழக அரசு பொது நூலகப் புத்தகத் தேர்வுக்குழு உறுப்பினர் (1998)
- தமிழக அரசு சுஜாதா தலைமையில் அமைத்த கலைச்சொல்லாக்கக் குழுவில் 200 சொற்கள் உருவாக்கம் (1999)
- தமிழக அரசு முனைவர் மு. ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைத்த தகவல் தொழில்நுட்பக் கலைச்சொல்லாக்கக் குழுவில் 8000 சொற்கள் உருவாக்கம் (2000)
- மணவை முஸ்தபா வெளியிட்ட கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி தொகுதி 1, 2 உருவாக்கத்தில் முக்கிய பங்களிப்பு (1999, 2001)
- மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ், எம்எஸ் ஆஃபீஸ் தொகுப்புத் தமிழ் இடைமுகத்துக்கான கலைச்சொல்லாக்கம் (2003)
- தமிழக அரசின் கணிபொறியியல் பாடத்திட்டக் குழு உறுப்பினர் (2004-2005)