மு. சி. முத்தையா
முத்தையா சிதம்பரம் முத்தையா (M. Ct. Muthiah; 19 அக்டோபர் 1929- செப்டம்பர் 2006) என்பவர் ஓர் இந்தியத் தொழிலதிபரும், வங்கியாளரும் பரோபகாரரும் ஆவார். இவர் 1954 முதல் 1969 வரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைவராகப் பணியாற்றினார்.[1]
மு. சி. முத்தையா | |
---|---|
பிறப்பு | முத்தையா சிதம்பரம் முத்தையா 19 அக்டோபர் 1929 |
இறப்பு | 18 செப்டம்பர் 2006 | (அகவை 76)
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் |
|
பெற்றோர் |
|
உறவினர்கள் | மு. சி. பெத்தாட்சி (சகோதரர்) |
இளமை
தொகுமுத்தையா 19 அக்டோபர் 1929 அன்று தொழிலதிபர் மு. சி. மு. சிதம்பரம் செட்டியார் மற்றும் சி. வள்ளியம்மை ஆச்சி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தேராடூனில் உள்ள டூன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து, அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். முத்தையா தனது முதுநிலை வணிக நிர்வாகவியல் பட்டத்தினை சிகாகோவில் பெற்றார். முத்தையாவுக்கு மு. சி. பெத்தாச்சி என்ற இளைய சகோதரர் உள்ளார்.
தொழில் வாழ்க்கை
தொகு1954ஆம் ஆண்டில் வானூர்தி விபத்தில் தனது தந்தை இறந்ததைத் தொடர்ந்து முத்தையா குடும்ப வணிகத்தை மேற்கொண்டார் முத்தையா. முத்தையா 1954 முதல் 1969 வரை வங்கிகள் தேசியமயமாக்கப்படும் வரை இந்தியன் ஓவர்சீசு வங்கியின் தலைவராகப் பணியாற்றினார். யுனைடெட் பயர் மற்றும் பொதுக் காப்பீட்டு நிறுவனத் தலைவராகவும், தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சபை தலைவராகவும் பணியாற்றினார். ஆந்திரப் பிரதேச மாநில நிதிக் கழகத்தின் தலைவராகவும், இந்தியன் வங்கி இயக்குநர்களில் ஒருவராகவும் முத்தையா பணியாற்றியுள்ளார்.
அறங்காவலர்
தொகுசர் மு. சி. மு. அறக்கட்டளை நூற்றாண்டு பள்ளியைத் தவிர, மு. சு. மு. ஆண்கள் மற்றும் மு. சி. மு. பெண்கள் பள்ளிகளை நடத்தும் அறக்கட்டளை வாரியங்களின் தலைவராகவும் இவர் இருந்துள்ளார்.[1]
மரணம்.
தொகு2006 செப்டம்பர் 18 அன்று இதய நோயால் முத்தையா தூக்கத்திலேயே இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "M. Ct. Muthiah passes away". தி இந்து. 19 September 2006 இம் மூலத்தில் இருந்து 26 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140426200941/http://www.hindu.com/2006/09/19/stories/2006091918651100.htm.