மு. ரா. செயகர்

முகுந்த் ராம்ராவ் செயகர் (Mukund Ramrao Jayakar) (13 நவம்பர் 1873 - 10 மார்ச் 1959) ஒரு இந்திய வழக்கறிஞரும், அறிஞரும் மற்றும் அரசியல்வாதியுமாவார். புனே, சாவித்திரிபாய் புலே புனே பல்கலைக்கழகம்|புனே பல்கலைக்கழகத்தின்]] முதல் துணை வேந்தராக இருந்தார். இவர் ஒரு முக்கிய இந்திய விடுதலை இயக்கப் போராட்ட வீரரும் கூட.

முகுந்த் ராம்ராவ் செயகர்
मुकुंद रामराव जयकर
பாம்பாய் சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில்
1952–1957
சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்
பதவியில்
1948 - 1956
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
பின்னவர்ஆர். பி. பராஞ்சபே
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநவம்பர் 13, 1873
இறப்பு10 மார்ச் 1959
மும்பை, இந்தியா
தேசியம்பிரித்தானிய இந்தியர் (1873-1947)
இந்தியர் (1947-1959)
அரசியல் கட்சிசுயாட்சிக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
இந்து மகாசபை
வேலைவழக்கறிஞர், கல்வியாளர், விடுதலை இயக்க ஆர்வலர் , அரசியல்வாதி
மூலம்: [1]

வாழ்க்கை தொகு

செயகர் ஒரு மராத்தி பதரே பிரபு குடும்பத்தில் பிறந்தார். [1]

செயகர், 1902 இல் மும்பையில் சட்டம் படித்த இவர் 1905 இல் இலண்டனில் சட்ட வல்லுநரானார். 1905 இல் இவர் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். முகம்மது அலி ஜின்னாவுடன் இணைந்து ஆங்கிலச் செய்தித் தாளான பாம்பே குரோனிக்கிளின் இயக்குநராக இருந்தார்.

செயகர், 1923-1925இல் பம்பாய் சட்டமன்றக் குழுவின் உறுப்பினராகவும், சுயாட்சிக் கட்சியின் தலைவராகவும், மத்திய சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்தார். 1937ல் டெல்லியில் உள்ள இந்தியக் கூட்டாட்சி நீதிமன்றத்தின் நீதிபதியானார். டிசம்பர் 1946இல், இந்திய அரசியல் நிர்ணய மன்றத்தில் சேர்ந்தார். நெடுஞ்சாலை மேம்பாடு தொடர்பான பரிந்துரைகளை தெரிவிப்பதற்காக 1927 இல் உருவாக்கப்பட்ட இந்திய சாலை மேம்பாட்டுக் குழுவின் தலைவராகவும் இருந்தார். இந்து மகாசபை உறுப்பினராக இருந்தார். 1928இல் அனைத்து கட்சி மாநாட்டில் பங்கேற்றார். மேலும் முகம்மது அலி ஜின்னா முன்வைத்த அகில இந்திய முசுலிம் லீக்க்கின் கோரிக்கைகளை மறுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

 
புனாவில் உள்ள ஏர்வாடா மத்திய சிறையில், 24 செப்டம்பர் 1932 அன்று, பூனா ஒப்பந்தம் கையெழுத்தான அன்று தேஜ் பகதூர் சப்ரு மற்றும் பி. ஆர். அம்பேத்கருடன் செயகர்.

கைவல்யதாம யோகா நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.

இறப்பு தொகு

செயகர், 10 மார்ச் 1959 அன்று மும்பையில் தனது 86வது வயதில் காலமானார் [2]

இதனையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Richard I. Cashman (1975). The Myth of the Lokamanya: Tilak and Mass Politics in Maharashtra. University of California Press. பக். 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780520024076. https://archive.org/details/mythoflokamanya00rich. "Although more at home in the cosmopolitan center of Bombay, and a member of the Council of the Bombay Presidency Association, the Pathare Prabhu lawyer, Mukund Ramrao Jayakar (1873-1959), expressed the typical response" 
  2. "Dr M R Jayakar". தி இந்து (Chennai, India). 11 March 2009 இம் மூலத்தில் இருந்து 7 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107093128/http://www.hindu.com/2009/03/11/stories/2009031151120903.htm. பார்த்த நாள்: 8 February 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._ரா._செயகர்&oldid=3932774" இலிருந்து மீள்விக்கப்பட்டது