மூக்கண்டப்பள்ளி

ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி

மூக்கண்டப்பள்ளி (Mookandapalli) இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட மாநகரப் பகுதியாகும்.[1]

மூக்கண்டப்பள்ளி
ஒசூர் மாநகராட்சி
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாநகராட்சிஒசூர் மாநகராட்சி
அரசு
 • மேயர்எஸ்.ஏ.சத்யா திமுக
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

2011-ஆம் ஆண்டு ஒசூர் நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபோது ஒசூரை ஒட்டியுள்ள பல பகுதிகள் ஒசூர் மாநகராட்சியுடன் இணைக்கபட்டன. அவற்றோடு மூக்கண்டப்பள்ளி ஊராட்சியும் ஒசூர் மாநகராட்சியுடன் இணைக்கபட்டது.[2]

பெயராய்வு

தொகு

ஒசூருக்கு அருகில் உள்ள அச்செந்திரம் என்னும் ஊரின் கிடைத்த கல்வெட்டில் முகுளிப்பள்ளியில் இருக்கும் தச பண்டை பெண்டாட்டி தச பாண்டை என்பவர், நம்பியார் திருவத்தியூர் ஆழ்வார்க்குச் சந்தி விளக்கு வைக்க 12 காசு முதலீடு அளித்துள்ளார், பூசை நடத்த நம்பிமார் உடன்படுகிறார். என்ற செய்தி தெரிவிக்கபட்டுள்ளது. இதில் வரும் முகுளிப்பள்ளியே பிற்காலத்தில் மூக்கண்டப்பள்ளி என மருவியிருக்கலாம் எனப்படுகிறது.[3]

மேற்கோள்

தொகு
  1. "Mookondapalli Village in Hosur (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-17. {{cite web}}: Text "villageinfo.in" ignored (help)
  2. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/hosur-municipality-to-expand-after-merger-with-5-panchayats/article2146259.ece
  3. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 120. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூக்கண்டப்பள்ளி&oldid=3705366" இலிருந்து மீள்விக்கப்பட்டது