மூக்குத்தி அவரை

ஒரு கொடி தாவரம்
மூக்குத்தி அவரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
Ipomoea muricata
இருசொற் பெயரீடு
Ipomoea muricata
Lag.
வேறு பெயர்கள்

Ipomoea spinulosa Brandegee
Ipomoea petiolaris (Kunth) G. Don
Ipomoea muricata (L.) Jacq.
Ipomoea calderonii Standl.
Ipomoea bona-nox var. purpurascens Ker-Gawl.
Diatrema muricata Rafin.
Convolvulus smilacifolius Salisb.
Convolvulus muricatus L.
Convolvulus colubrinus Blanco
Calonyction speciosum var. muricatum (L.) Choisy
Calonyction muricatum (L.) G. Don
Calonyction longiflorum Hassk.

மூக்குத்தி அவரை அல்லது காம்புக் கத்தரி (Ipomoea muricata[1]) என்பது அலங்காரம் மற்றும் சமையல் நோக்கங்களுக்காக வளர்க்கும் ஒரு கொடி ஆகும். இது முதலில் மரியானோ லகாஸ்கா ஒய் செகுராவால் விவரிக்கப்பட்டது. இபோமோயா முரிகாட்டா கான்வால்வுலேசியே குடும்பத்தில் ஐபோமியா இனத்தைச் சேர்ந்தது.[2][3] இது ஆண்டு முழுவதும் பயிரிடக்கூடிய காய்கறி பயிர், எனவே மலையாளத்தில் நித்யகாரி என்றும் நித்யகாரியன் என்றும் அழைக்கப்படுகிறது. இது அதிக பராமரிப்பு தேவைப்படாத ஒரு வேலி கொடியும் கூட. இதன் மலர்கள் மாலையில் பூக்கும். இக்கொடியின் காய், கிராம்பு வடிவில் இருக்கும். இது சிறிய கொத்துக்களைக் கொண்டதாக பூத்து, காய்க்கும். இதன் பிஞ்சு காய்கள் சமையலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. காய்கள் நீளமான தண்டுகளுடன் குமிழ் போன்ற வீங்கிய நுனிகளுடன் கிராம்பு போன்று இருக்கும். இதன் பூக்கள் வெள்ளை நிறத்திலும், ஊதா நிறத்திலும் இருக்கும். இக்காய்கள் மூக்குத்தியைப் போன்ற தோற்றம் கொண்டதால் மூக்குத்தி அவரை என்ற பெயரைப் பெற்றன. என்றாலும் இவை அவரைக் குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல.

குறிப்புகள் தொகு

  1. Lag., 1816 In: Gen. & Sp. 10
  2. Roskov Y., Kunze T., Orrell T., Abucay L., Paglinawan L., Culham A., Bailly N., Kirk P., Bourgoin T., Baillargeon G., Decock W., De Wever A., Didžiulis V. (ed) (2014). "Species 2000 & ITIS Catalogue of Life: 2014 Annual Checklist". Species 2000: Reading, UK. பார்க்கப்பட்ட நாள் 26 May 2014. {{cite web}}: |author= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
  3. "World Plants: Synonymic Checklists of the Vascular Plants of the World". Archived from the original on 2019-03-18. பார்க்கப்பட்ட நாள் 2014-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூக்குத்தி_அவரை&oldid=3655684" இலிருந்து மீள்விக்கப்பட்டது