மூங்கிலரிசி

மூங்கிலரிசி என்பது பழங்குடி மக்களின் முக்கிய உணவு.

மூங்கிலரிசி என்பது மூங்கிலில் விளையும் ஒரு வகை விதையிலிருந்து கிடைக்கும் சிறு தானியம் ஆகும்.

மூங்கிலரியை ஒத்த ஒரு வகை மூங்கில் விதைகள்.

மூங்கில்களில் விளையும் அரிசிதொகு

மூங்கில் பூப்பதும், அதில் அரிசி விளைவதும் எப்போதோ ஒரு முறை நிகழும் அரிய நிகழ்வு. மூங்கில்கள் அதன் ஆயுள் முடியும் காலகட்டத்தில்தான் பூக்கின்றன. ஒரு முறை பூத்த பிறகு, விதைகளை உற்பத்தி செய்துவிட்டு அவை இறந்துவிடுகின்றன. விதைகளை உற்பத்தி செய்யும்போது அதிக ஆற்றல் தேவைப்படுவதால், அதற்குப் பிறகு மூங்கில் இறந்துவிடுகிறது என்பது சில ஆய்வாளர்கள் கருத்து. மூங்கில் பூக்கும் காலத்தில் கொறிவிலங்குகளில் எலிகளுக்க நல்ல உணவு கிடைப்பதால் இவற்றின் எண்ணிக்கை மிக அதிகமாகிவிடுகிறது. மிசோரம் மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளாக, எப்போழுதெல்லாம் மூங்கில்கள் பூக்கின்றனவோ, அப்போழுதெல்லாம் தவறாமல் பஞ்சம் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். மூங்கில் அரிசியை மருத்துவக் குணம் மிக்கதாகக் கருதுவதால், மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். விலையும் அதிகமாக இருக்கிறது.[1]

மூங்கில் நெல் என்று ஒன்று இருக்கிறது. அது 60 வருடங்கள் முன் வரை தமிழகத்தில் விளைந்ததாகவும் பின்னர் விடுபட்டு அண்மையில் மீண்டும் விளைவிக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி உண்டு.

உடலுக்கு வன்மை தரும் மூங்கிலரிசிதொகு

உடம்பை இரும்பாக்கும் உன்னதத்தைத் தன்னகத்தே கொண்டு நோய் தீர்க்கும் மூங்கிலரிசியை முறையாய் சாப்பிட்டு வளமுற வாழ வேண்டும் என்பதே சித்தர்களின் ஆசையாகும்.

மூங்கிலிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசியைச் சமைத்து உண்டு வர,

  • உடல் திடம் உண்டாகும்.
  • உடல் இறுகும்.
  • கொடிய நோய்களெல்லாம் நெடுந்தூரம் ஓடிவிடும்[2].

மூங்கிலரிசியும் சர்க்கரை நோயும்தொகு

சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகிப் போனவர்களை மறுபடியும் சீரான உடலமைப்பை பெறச் செய்யும் உன்னதமே மூங்கிலரிசியாகும்.

மூங்கிலரிசியை வெண்பொங்கல் போலவும் அல்லது பாயசம் போலவும் செய்து சாப்பிடலாம்.

மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிசிரி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்து சேர்த்து அரைத்து தூள் செய்து கொள்ளவும். இதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர தேகமெல்லாம் வலுவடையும். வஜ்ரம்போல் இறுகும். சர்க்கரை நோய் கட்டுப்படும்.

குறிப்புகள்தொகு

  1. "எலிகளை ஈர்க்கும் மூங்கில் பூக்கள்". தி இந்து (தமிழ்). 2016 -சூன் 1. 2 சூன் 2016 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  2. முறியாத வியாதிகளையும் முறித்துப்போடும் நெல்லையப்பர் உறையும் மூங்கில் பரணிடப்பட்டது 2010-01-08 at the வந்தவழி இயந்திரம், சித்த மருத்துவ நிபுணர் அருண்சின்னையா, நக்கீரன் இதழில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூங்கிலரிசி&oldid=3225504" இருந்து மீள்விக்கப்பட்டது