மூணாறு சுப்ரமணியன் சுவாமி கோவில்
அருள்மிகு சுப்ரமணியன் சுவாமி கோவில் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறில் அமைந்துள்ள முருகப்பெருமானை முதன்மைக் கடவுளாகக் கொண்ட ஓர் இந்துக் கோயிலாகும்.
மூணாறு சுப்ரமணிய சுவாமி கோவில் | |
---|---|
மூணாறு சுப்ரமணிய சுவாமி கோவில் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளா |
மாவட்டம்: | இடுக்கி |
அமைவு: | மூணாறு |
ஆள்கூறுகள்: | 10°05′21″N 77°03′35″E / 10.08917°N 77.05972°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | Mixture of Kerala and Tamil architecture |
பூஜைகள்
தொகுஒவ்வொரு நாளும் காலைப் பிரிவில் உஷா பூஜை, நண்பகல் பிரிவில் 'உச்ச பூஜை', மலை பிரிவில் 'அட்டாழ பூஜை' உள்ளிட்ட மூன்று பூஜைகள் நடைபெறுகின்றன.
திருவிழாக்கள்
தொகுமலையாள மாதமான விருச்சிகத்தில் (அதாவது நவம்பர் முதல் டிசம்பர் வரை). மீனத்தில் உத்திரம் நட்சத்திர நாள் (அதாவது மார்ச் முதல் ஏப்ரல் வரை) ஒரு முக்கியமான பண்டிகை நடத்தப்படுகிறது. [1]
கோவில்
தொகுசிறிய குன்றின் மீது அமைந்துள்ள இக்கோயில் முதுவன் பழங்குடியினரால் கடந்த காலங்களில் வழிபட்டு வந்தது. பின்னர் நீண்ட காலம் மூடப்பட்டது. கோயிலின் பரிதாபகரமான நிலையைக் கண்டு, திருவிதாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோடைக்காலத்தில் மூணாறுக்கு வருகை தந்தபோது கோயில் புதுப்பிக்கப்பட்டது. முன்பு நம்பூதிரிகள் கோயிலின் தாந்த்ரீக உரிமையை வைத்திருந்தனர். தற்போது அந்த உரிமைகள் உள்ளூர் தமிழ் பிராமணர்களிடம் உள்ளது . இக்கோயில் இப்போது உள்ளூர் இந்துக்களின் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
குறிப்புகள்
தொகு- ↑ "Temples In Munnar". blessingsonthenet.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-12.
- ↑ "Temples of Idukki". keralawindow.net. பார்க்கப்பட்ட நாள் 2016-12-12.