மூன்றாம் ஆங்கிலேய-பர்மியப் போர்

மூன்றாம் ஆங்கிலேய-பர்மியப் போர் (Third Anglo-Burmese War, also known as the Third Burma War), ஆங்கிலேய-பர்மியப் போர்களில் இது மூன்றாவதும், இறுதியும் ஆகும். இப்போர் 7 - 29 நவம்பர் 1885 வரை நடைபெற்றது.

மூன்றாம் ஆங்கிலேய-பர்மியப் போர்

ஆங்கிலேயப் படைகளிடம் பர்மியப் படைகள் அவா எனுமிடத்தில் 27 நவம்பர் 1885-இல் சரண் அடைதல்
நாள் 7 நவம்பர் 1885 – 29 நவம்பர் 1885
இடம் பர்மா
ஆங்கிலேயர்களுக்கு வெற்றி
  • மேல் பர்மாவில் கொன்பவுங் வம்சத்தின் ஆட்சி முடிவுற்றது.
  • பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் பர்மா இணைக்கப்பட்டது.
  • பிரித்தானியர்களுக்கு எதிரான பர்மியர்களின் இயக்கம் 1885 முதல் 1895 தொடர்ந்தது.
பிரிவினர்
பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் பிரித்தானியப் பேரரசு பர்மியப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஹாரி பிரெண்டர்கஸ்ட் திபாவ் மின்

ஏற்கனவே இரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போரில் கீழ் பர்மாவை ஆங்கிலேயர்களிடம் இழந்திருந்த, பர்மியப் பேரரசு, இப்போரின் முடிவில் மேல் பர்மாவையும் பிரித்தானிய இந்தியாவிடம் வீழ்ந்ததால், முழு பர்மாவும் பிரித்தானிய இந்தியாவின் கீழ் வந்தது. [1] [2] இதனால் பர்மா, பிரித்தானிய இந்தியாவின் ஒரு மாகாணமாக விளங்கியது. 1937-இல் பர்மா பிரித்தானியாவின் தனி காலனி நாடானது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1948-இல் பர்மாவிற்கு விடுதலை வழங்கப்பட்டது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Third Anglo-Burmese War and Annexation of Burma
  2. Annexation of Burma with Britania India

வெளி இணைப்புகள்

தொகு