மூன்றாம் வாசுதேவன்
குசான அரசன்
மூன்றாம் வாசுதேவன் (Vasudeva III) இவர் ஒருவேளை குசானப் பேரரசின் இரண்டாம் வாசுதேவனின் மகனாக இருக்கலாம். இவர் பொ.ச.360-365 வரை செய்துள்ளார்.
ஆட்சி
தொகுமூன்றாம் வாசுதேவனின் ஆட்சியில் குசானப் பேரரசு முக்கியத்துவமற்ற நிலைக்குச் சென்றது. மேற்கில் சாசானியப் பேரரசு அச்சுறுத்தலாக இருந்தது, கிழக்கில் உள்ளூர் பூர்வீக மக்கள் தங்கள் சுதந்திரத்தை மீண்டும் பெற்றனர். [1]
சர்ச்சைக்குரிய இருப்பு
தொகுஇவரது இருப்பு சர்ச்சைக்குரியது, [2] இவரது தந்தையாகக் கூறப்படும் இரண்டாம் வாசுதேவனின் இருப்புக்கான ஆதரம் கிடைத்துள்ளது. [3] ஆனால் எந்த கல்வெட்டு ஆதாரமும் இவரது இருப்பை ஆதரிக்கவில்லை. [4]
மூன்றாம் வாசுதேவனின் அதே பெயர் மற்றும் ஆட்சி எண் கொண்ட மற்றொரு குசான ஆட்சியாளர் இருந்திருக்கலாம் என்று நாணயவியல் சான்றுகளிலிருந்து முன்மொழியப்பட்டது. [5]
சான்றுகள்
தொகு- ↑ Buddha Prakash (1971). Evolution of heroic tradition in ancient Panjab. Punjabi University. p. 53.
- ↑ Bratindra Nath Mukherjee (1978). Kushāṇa coins of the Land of the Five Rivers. Indian Museum. p. 53.
- ↑ Gritli von Mitterwallner (1986). Kuṣāṇa Coins and Kuṣāṇa Sculptures from Mathurā. Department of Cultural Affairs, Government of U.P., Lucknow. p. 38.
- ↑ John M. Rosenfield (1967). The Dynastic Arts of the Kushans. University of California Press. p. 112.
- ↑ Satya Shrava (1985). The Kushāṇa Numismatics. Praṇava Prakāshan. p. 223.