இரண்டாம் வாசுதேவன்
குசானப் பேரரசன்
இரண்டாம் வாசுதேவன் (Vasudeva II) இவர் சுமார் பொ.ச. 275–300 வரை ஆட்சிசெய்த குசானப் பேரரசர் ஆவார். இவர் அநேகமாக மூன்றாம் கனிஷ்கரின் வாரிசாக இருக்கலாம். மேலும், சாகா குசானன் என்ற அரசன் இவருக்குப் பின் ஆட்சிக்கு வந்திருக்கலாம்.
இரண்டாம் வாசுதேவன் | |
---|---|
குசானப் பேரரசர் | |
இரண்டாம் வாசுதேவனின் நாணயம், குய்மெட் அருங்காட்சியகம், MA24360. | |
ஆட்சிக்காலம் | அண். 275–300 CE |
இவர் அனேகமாக குப்தப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் மேற்கு பஞ்சாபில் உள்ள தக்சசீலப் பகுதியில் உள்ளூர் ஆட்சியாளராக இருந்திருக்கலாம்.[1]
இவர் குசான-சாசானியர்களின் முதலாம் ஹோர்மிஸ்டு குசான்ஷாவின் சமகாலத்தவர். ஏனெனில் இவர் இந்து குஷ்க்கு தெற்கே வெளியிடப்பட்ட முதலாம் ஹார்மிஸ்ட்டின் ஆரம்பகால செப்பு நாணயங்கள் அதிக அளவில் மற்றியமைத்து வெளியிட்டதாக அறியப்படுகிறது.[2]
-
இரண்டாம் வாசுதேவனின் நாணயம்.
-
இரண்டாம் வாசுதேவரின் வெண்கல நாணயம், அரசன் சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார். சுமார் பொ.ச. 290-310
-
இரண்டாம் வாசுதேவரின் நாணயம். ஆட்சியாளரின் பெயர் குப்த எழுத்துக்களில் அவரது இடது கைக்கு அடுத்ததாக செங்குத்தாக தோன்றுகிறது: வா-சு .
சான்றுகள்
தொகு- ↑ Rezakhani, Khodadad (2017). From the Kushans to the Western Turks (in ஆங்கிலம்). p. 203.
- ↑ Cribb 2018, ப. 21.
ஆதாரங்கள்
தொகு- Cribb, Joe (2018). Problems of Chronology in Gandhāran Art: Proceedings of the First International Workshop of the Gandhāra Connections Project, University of Oxford, 23rd-24th March, 2017. University of Oxford The Classical Art Research Centre Archaeopress.