மூரிஷ் பள்ளிவாசல்

மூரிசு பள்ளிவாசல் (ஆங்கிலம்: Moorish Mosque) எனப்படும் இந்த இசுலாமிய தொழுகை சாலை, வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள கபுர்த்தலா நகரின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. அக்காலத்திய ஆட்சியாளர்களின் மத நல்லிணத்திற்கு சான்றாக விளங்குகிற இப்பள்ளிவாசலை, இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.[1]

மூரிசு பள்ளிவாசல் கபுர்த்தலா
Moorish Mosque, Kapurthala
பஞ்சாப் கபுர்த்தலாவில் உள்ள மூரிசு பள்ளிவாசல்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கபுர்த்தலா, பஞ்சாப்,  இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்31°22′08″N 75°22′52″E / 31.369°N 75.381°E / 31.369; 75.381
சமயம்இசுலாம்
மாகாணம்பஞ்சாப்
மாவட்டம்கபுர்த்தலா
நிலைபள்ளிவாசல்
தலைமைமகாராசா சகற்சித்து சிங்

மொரோக்கோவின் மரகேசு நகரின் கிராண்ட் மசூதியின் அடிப்படை தோற்றமளிப்பதாக உள்ள இப்பள்ளிவாயல், பிரஞ்சு கட்டிடக்கலைஞர் 'எம். மாண்டிக்ஸ்' என்பவரால் கட்டப்பட்டுள்ளது. இதன் வரலாறு மற்றும் கலாச்சாரப் பெருமை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இது, பஞ்சாபின் 'மினி பாரிஸ்' என அழைக்கப்படும் கபுர்த்தலாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மசூதி தென்கிழக்கு ஆசியாவின் சிறந்த ஒன்றாகவும் கூறப்படுகிறது.[2]

https://ml.wikipedia.org/wiki/%E0%B4%AE%E0%B5%82%E0%B4%B1%E0%B4%BF%E0%B4%B7%E0%B5%8D_%E0%B4%AA%E0%B4%B3%E0%B5%8D%E0%B4%B3%E0%B4%BF,_%E0%B4%95%E0%B4%BE%E0%B4%AA%E0%B5%82%E0%B5%BC%E0%B4%A4%E0%B5%8D%E0%B4%A4%E0%B4%B2

சான்றாதாரங்கள்

தொகு
  1. "Aam Khas Bagh, Sirhind". www.discoveredindia.com (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 13 யூலை 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Moorish Mosque in Kapurthala - India". www.beautifulmosque.com (ஆங்கிலம்). © 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-07-14. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூரிஷ்_பள்ளிவாசல்&oldid=3589930" இலிருந்து மீள்விக்கப்பட்டது