மூலச்சல்
மூலச்சல் (Moolachel) என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இவ்வூரின் நடுவில் உறாக்கர் நினைவு தேவாலயம் ஒன்று உள்ளது. சுயஉதவிக்குழுக்கள் மூலமாக மக்கள் ஒன்றிணைந்து உழைத்து வாழ்கின்றனர். எல்லா மதத்தைச் சார்ந்த மக்களும் இங்கு வசிக்கிறார்கள். மரங்களும் செடி கொடிகளும் நிறைந்து இவ்வூர் அழகாக காட்சியளிப்பதற்கு காரணம் இங்கு செல்லும் கால்வாய் தான். மூலச்சல் என்பது பத்மநாபபுரம் அரண்மனைக்கு அருகில் அமைந்துள்ளது. தக்கலை, நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகியவை அருகாமை நகரங்களாகும். பழங்காலத்தில் இவ்வூர் சிலம்பாட்டத்திற்கு புகழ்பெற்ற ஊராக திகழ்ந்துள்ளது.
மூலச்சல்
மூலச்சல் மூலச்சே | |
---|---|
கிராமம் | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
பின்கோடு | 629175,629166 |
Telephone code | 04651 |
வாகனப் பதிவு | TN-75 |
இணையதளம் | www.csimoolachal.com |
வெளிப்புற இணைப்பு
தொகு- Google Earth Location பரணிடப்பட்டது 2007-03-10 at the வந்தவழி இயந்திரம்