மூவலூர் இராமாமிர்தம்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்

மூவலூர் ராமாமிர்தம் (1883 – 1962) தமிழகத்தைச் சேர்ந்த ஓர் பெண் சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், முன்னாள் தேவதாசி ஒழிப்பு இயக்கம் மற்றும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர்.

மூவலூர் இராமாமிர்தம்

இவர் திருவாரூர் மாவட்டம் கீரனூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள "பாலூர்" என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் வளர்ந்தது மூவலூர் கிராமம் இதனால் இவர் மூவலூர் இராமாமிர்தம் என்று அழைக்கப்படுகிறார்.

இவர் சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவர். 1936 இல் வெளியான இவரது சுயசரிதப் புதினமான தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர், தாசிகளின் அவலநிலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. முதலில் இந்திய தேசிய காங்கிரசின் ஆதரவாளராக இருந்த இவர் 1925 இல் பெரியார் (ஈ. வெ. ராமசாமி) காங்கிரசிலிருந்து விலகியபோது பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். 1930 இல் சென்னை மாகாணத்தில் தேவதாசிமுறை ஒழிப்பை சட்டமாகக் கொண்டுவர டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி முயன்றபோது அவருக்குத் துணை நின்றார். ஆனால் அச்சமயம் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. 1937 முதல் 1940 வரை நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டார். நவம்பர் 1938 இல் அதற்காக ஆறு வாரங்கள் சிறையிலடைக்கப்பட்டார். அவரது புதினம் மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வும் தேவதாசி முறையை ஒழிக்க அவர் மேற்கொண்ட தொடர் பிரச்சாரங்களும் சென்னை தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற வழிவகுத்தன. அச்சட்டம் 1947லிருந்து தேவதாசி முறையை ஒழித்தது. 1949 இல் பெரியார் மணியம்மை திருமணம் காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அண்ணாத்துரை திராவிடர் கழகத்தை விட்டு விலகும் போது அவருடன் இராமாமிர்தம் அம்மையாரும் திராவிடர் கழகத்தை விட்டுவிலகினார். அதன்பிறகு சி. என். அண்ணாத்துரை ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளரானார். 27.06.1962 இல் அவர் காலமாகும்வரை தி.மு. க ஆதரவாளராகவே இருந்தார். 1989-ஆம் ஆண்டு கலைஞர் திரு.மு.கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு 8-ஆம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களின் திருமண நிதி தொகை ரூபாய் 5000-த்தை 15000 பெண்களுக்கு வழங்க முடிவு செய்தது அதற்கு அம்மையாரின் நினைவாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம்[1] என்று பெயரிடப்பட்டது.[2][3][4][5][6][7][8][9][10][11][12][13]

மேற்கோள்கள் தொகு

  1. CHAPTER 2 SOCIAL WELFARE MOOVALUR RAMAMIRTHAM ...
  2. Ramaswamy, Sumathy (1997). Passions of the tongue: language devotion in Tamil India, 1891-1970. University of Chicago Press. பக். Chapter 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780520208056. இணையக் கணினி நூலக மையம்:36084635. http://www.escholarship.org/editions/view?docId=ft5199n9v7&chunk.id=ch5&toc.depth=1&toc.id=ch5&brand=eschol. 
  3. Sarkar, Tanika (2008). Women and social reform in modern India: a reader. Indiana University Press. பக். 395–403. ISBN 0253220491, ISBN 9780253220493. http://books.google.com/books?id=JLGBUEs74n4C&pg=PA397. 
  4. Thorner,, Alice; Krishna Raj, Maithreyi (2000). Ideals, images, and real lives: women in literature and history. Orient Blackswan. பக். 241–250. ISBN 8125008438, ISBN 9788125008439. http://books.google.com/books?id=LO-ztHz3XTUC&pg=PA241. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. Anandhi, S. (March, 1991). "Representing Devadasis: 'Dasigal Mosavalai' as a Radical Text". Economic and Political Weekly (Economic and Political Weekly) 26 (11/12): 739–746. http://www.jstor.org/pss/4397430. பார்த்த நாள்: 19 January 2010. 
  6. Desikan, Shubashree (19 திசம்பர் 2008). "Grace under fire". Business Line. The Hindu Group. பார்க்கப்பட்ட நாள் 19 சனவரி 2010.
  7. "Moovalur Ramamirtham Ammayar ninaivu Marriage Assistance Scheme" (PDF). தமிழக அரசு. பார்க்கப்பட்ட நாள் 19 சனவரி 2010.
  8. Menon, Parvati (4 ஆகத்து 2001). "Of studies on women". Frontline. The Hindu Group. Archived from the original on 7 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 19 சனவரி 2010.
  9. Viswanathan, S (24 மே 2008). "The Pioneers: Dr. Muthulakshmi Reddy". Frontline. The Hindu Group. Archived from the original on 7 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 19 சனவரி 2010.
  10. Sithannan, V. (2006). Immoral traffic: prostitution in India. JEYWIN Publications. பக். 53. ISBN 8190597507, ISBN 9788190597500. http://books.google.com/books?id=pHXGypflBLIC&pg=PT53. 
  11. PKR (10 நவம்பர் 2009). "Book Review". தி இந்து. The Hindu Group. Archived from the original on 7 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 19 சனவரி 2010.
  12. Chandhrika, G. (October, 2009). "Of Men, Women and Morals: Gender, Politics and Social Reform in Colonial South India". Intersections: Gender and Sexuality in Asia and the Pacific (Anne Marie Medcalf and Carolyn Brewer) (22). http://intersections.anu.edu.au/issue22/ganapathy.htm. பார்த்த நாள்: 19 January 2010. 
  13. Ramamirthammal, Muvalar; Kalpana Kannabirān, Vasantha Kannabiran (2003). Muvalur Ramamirthammal's Web of deceit: Devadasi reform in colonial India. Zubaan. பக். 53. ISBN 8186706631, ISBN 9788186706633. http://books.google.com/books?id=-kSUx6Xbq1QC&pg=PA2. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவலூர்_இராமாமிர்தம்&oldid=3798822" இலிருந்து மீள்விக்கப்பட்டது