மூவல்லைலமீன்

வேதிச் சேர்மம்

மூவல்லைலமீன் (Triallylamine) N(CH2CH=CH2)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இது அமோனியாவின் நெடியைக் கொண்டுள்ளது. ஒரு மூவிணைய அமீனும்மூன்று ஆல்க்கீன் குழுக்களும் இச்சேர்மத்தில் இடம்பெற்றுள்ளன. அல்லைல் குளோரைடுடன் அமோனியாவைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் மூவல்லைலமீன் உருவாகிறது. மோனோ அல்லைலமீன், ஈரல்லைலமீன் போன்றவையும் இதே தயாரிப்பு முறையிலேயே தயாரிக்கப்படுகின்றன.[1]

மூவல்லைலமீன்
இனங்காட்டிகள்
102-70-5
பண்புகள்
C9H15N
வாய்ப்பாட்டு எடை 137.23 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.809 கி/செ.மீ3
கொதிநிலை 155.5 °C (311.9 °F; 428.6 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அல்லைலமீன்கள் குறிப்பாக பலவீனமான α-CH பிணைப்புகளைக் கொண்டுள்ளன. இவற்றின் பிணைப்பாற்றல் 80 கிலோகலோரி/மோல் என்ற அளவில் உள்ளன.[2]

தொடர்புடைய சேர்மம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Eller, Karsten; Henkes, Erhard; Rossbacher, Roland; Höke, Hartmut (2005), "Amines, Aliphatic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a02_001
  2. Dombrowski, G. W.; Dinnocenzo, J. P.; Farid, S.; Goodman, J. L.; Gould, I. R. (1999). "Α-C−H Bond Dissociation Energies of Some Tertiary Amines". The Journal of Organic Chemistry 64 (2): 427–431. doi:10.1021/JO9813843. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவல்லைலமீன்&oldid=3629679" இலிருந்து மீள்விக்கப்பட்டது