அல்லைலமீன்
அல்லைலமீன் (Allylamine) என்பது C3H5NH2. என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். நிறைவுறாத அமீன் சேர்மத்திற்கு இந்த நிறமற்ற திரவம் ஒரு மிக எளிமையான எடுத்துக்காட்டாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3-அமீனோ-புரொப்-1-ஈன்
| |
வேறு பெயர்கள்
3-அமீனோஉரோப்பீன்; 3-அமீனோபுரோப்பைலீன்; ஒற்றை அல்லைலமீன்; 2-புரொப்பீனமீன்; 2-புரோப்பீன்-1-அமீன்;அல்லைலாமீன்
| |
இனங்காட்டிகள் | |
107-11-9 | |
ChEMBL | ChEMBL57286 |
ChemSpider | 13835977 |
யேமல் -3D படிமங்கள் | Image |
வே.ந.வி.ப எண் | BA5425000 |
| |
UNII | 48G762T011 |
பண்புகள் | |
C3H7N | |
வாய்ப்பாட்டு எடை | 57.10 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திரவம் |
அடர்த்தி | 0.7630 g/cm3, திரவம் |
உருகுநிலை | −88 °C (−126 °F; 185 K) |
கொதிநிலை | 55 °C (131 °F; 328 K) |
காடித்தன்மை எண் (pKa) | 9.49[1] |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | Lachrymatory |
R-சொற்றொடர்கள் | R11 R23/24/25 R51/53 |
S-சொற்றொடர்கள் | S9 S16 S24/25 S45 S61 |
தீப்பற்றும் வெப்பநிலை | −28 °C (−18 °F; 245 K) |
வெடிபொருள் வரம்புகள் | 2-22% |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
106 mg/kg |
தொடர்புடைய சேர்மங்கள் | |
அமீன் தொடர்புடையவை |
புரோப்பைலமீன் |
தொடர்புடைய சேர்மங்கள் | அல்லைல் ஆல்ககால் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பும் வினைகளும்
தொகுஅல்லைல் குளோரைடை அமோனியாவுடன் சேர்த்து வினைபுரிய வைத்து தொடர்ந்து காய்ச்சி வடிப்பதன் [2] மூலம் அல்லைலமீன், இரட்டை அல்லைலமீன், மூவல்லைலமீன் ஆகிய மூன்றுவகை அல்லலைமீன்களும் தயாரிக்கப்படுகின்றன. அல்லைல் சமதையோ சயனேட்டை நீராற்பகுத்தல் வினையின் மூலம் தூய்மையான அல்லைலமீன் மாதிரிகள் தயாரிக்க முடியும்[3] . இது அமீனின் பண்புகளை குறிப்பிடத்தக்க அளவில் வெளிப்படுத்துகிறது[4]
பலபடியாக்கல் வினைவழிமுறையில் பல்லல்லைமீன் வகை ஒரின பலபடிகள் அல்லது இணை பலபடிகள் தயாரிக்க முடியும். இப்பலபடிகள் தலைகீழ் சவ்வூடு பரவலில் சீரிய சவ்வுகளாக விளங்குகின்றன.
நடைமுறையிலுள்ள அல்லைலமீன்கள் விரிவான மருத்துவப் பயன்கள் கொண்டுள்ளன. புளூனரிசின் மற்றும் நாப்டிஃபைன் ஆகியன சில குறிப்பிடத்தக்க மருந்து வகைகளாகும். ஒற்றைத் தலைவலிக்கான மருந்தாக புளூனரிசின் என்ற அல்லலைமீனும் பூஞ்சைத் தொற்று நோய்களுக்கு,[5] உதாரணமாக படர்தாமரை, கழிப்பறைப் படை நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது.
பாதுகாப்பு
தொகுபிற அல்லைல் வழிப்பொருட்கள் போலவே அல்லைலமீன் கண்ணீர் புகை குண்டாக உள்ளது. தோலில் எரிச்சலை உண்டாக்கும் இச்சேர்மத்தை உட்கொள்ள நேரிட்டால், எலிகளிடம் அதனுடைய உயிர்போக்கும் அளவு 106 மிகி/கிகி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Hall, H.K., J. Am. Chem. Soc., 1957, 79, 5441.
- ↑ Ludger Krähling, Jürgen Krey, Gerald Jakobson, Johann Grolig, Leopold Miksche "Allyl Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a01_425 10.1002/14356007.a01_425
- ↑ M. T. Leffler (1943). "Allylamine". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV2P0024.; Collective Volume, vol. 2, p. 24
- ↑ Henk de Koning, W. Nico Speckamp "Allylamine" in Encyclopedia of Reagents for Organic Synthesis, 2001, John Wiley & Sons, Weinheim. எஆசு:10.1002/047084289X.ra043 Article Online Posting Date: April 15, 2001
- ↑ Beck, John F.; Samblanet, Danielle C.; Schmidt, Joseph A. R. (1 January 2013). "Palladium catalyzed intermolecular hydroamination of 1-substituted allenes: an atom-economical method for the synthesis of N-allylamines". RSC Advances 3 (43): 20708. doi:10.1039/c3ra43870h.
வெளிப்புற இனைப்புகள்
தொகு- பப்கெம் Allylamine at National Center for Biotechnology Information