மெகாரா சமர்
மெகாரா சமர் (Battle of Megara) என்பது கிமு 424 இல் ஏதென்சுக்கும் எசுபார்த்தாவின் கூட்டாளியான மெகாராவுக்கும் இடையில் நடந்த ஒரு போராகும். இதில் ஏதெனியர்கள் வெற்றி பெற்றனர்.
மெகாரா சமர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
பெலோபொன்னேசியன் போர் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஏதென்ஸ் | மெகாரா, எசுபார்த்தா |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
Brasidas |
மெகாரா நடு கிரேக்கம் மற்றும் பெலொப்பொனேசியா இடையேயான மெகாரிட் பகுதியில் இருந்தது. எசுபார்த்தாவின் கூட்டாளியான மெகாராவானது சமவெளிகளையும், மலையடிவாரப் பகுதிகளையும் கொண்ட வேளாண் சிற்றூர்களைக் கொண்டிருந்தது. மேலும் இரண்டு துறைமுகங்களைக் கொண்டிருந்தது அவை: பாகீ (நவீன அலெபோச்சோரி- கொரிந்து வளைகுடா ) மற்றும் நிசீயா ( சரோனிக் வளைகுடா ), இது சர்ச்சையின் முக்கிய மையமாக இருந்தது.
ஏதெனியன் அச்சுறுத்தல்
தொகுகிமு 431 ஆம் ஆண்டிலிருந்தே, மெகாரா ஏதென்சால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளானது. முதல் படையெடுப்பின் போது, ஏதென்ஸ் 10,000 ஏதெனியர்களையும் பல கூட்டாளிகளையும் அழைத்து வந்தது.
ஏதென்ஸ் பின்னர் நிசியாவுக்கு அருகிலுள்ள சலாமிஸ் தீவில் ஒரு கோட்டையை அமைத்து, கப்பல்களை தடைபடுத்தியது. கடல் முற்றுகைகளால் மெகாராவிற்கு உணவு உள்ளிட்ட அவசியமான பொருட்களை இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. மெகாரியா மேற்கிலிருந்து உணவு விநியோக சங்கிலியில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டது. அதனால் மெகாராவின் நிலைமை மோசமாக மாறத் தொடங்கியது.
மெகராவில் அமைதியின்மை
தொகு429 இல் மெகாரியன் சிலவர் ஆட்சியினரின் தூண்டுதலால், பெலோபொன்னேசியன் கடற்படை சலாமிசில் உள்ள ஏதெனியன் கோட்டையைத் தாக்கியது. தாக்குதல் ஏதென்சுக்கு குறியொளி விளக்குகள் மூலம் தெரியவந்தது. ஏதென்ஸ் பைரஸ் துறைமுகத்தில் இருந்து ஒரு கடற்படையை அனுப்பியது. மெகாரியன் கப்பல்கள் பழுதடைந்த நிலையில் இருந்ததால் பெலோபொன்னேசியர்களின் தாக்குதல் கைவிடப்பட்டது.
எசுபார்த்தன் சார்பு மற்றும் கொரிந்தியன் சார்பு சிலவர் ஆட்சிக்குழுவினரின் ஆட்சியின் போது, மெகாரா கிமு 427 இல் ஏதென்சிடம் மினோவா துறைமுக நகரத்தை இழந்தது. மேலும் அது உள்நாட்டு அமைதியின்மைக்கு ஒரு காரணியாக ஆனது. சிறிது காலத்திற்குப் பிறகு மெகாரியன் சிலவர் ஆட்சிக்கு எதிரான சனநாயகப் புரட்சிகள் தொடங்கி, பிறகு மெகாரா சனநாயக அரசாக மாறியது.
சிலவர் ஆட்சிக்குழுவினர் நாடு கடத்தப்பட்டனர். நாடுகடத்தப்பட்டவர்களில் பலர் எசுபார்த்தாவால் ஒரு ஆண்டு பிளாட்டீயா என்ற போயோட்டிய நகரத்தில் வசிக்க அனுமதிக்கப்பட்டனர்.[1] போயோட்டியா மெகாரா மற்றும் ஏதென்சை வடக்கில் உயர்ந்த மலைத்தொடர்கள் பிரித்தன. [2] மினோவாவில் மெகாரியன் சனநாயகவாதிகளுக்கும் ஏதெனியர்களுக்கும் இடையிலான தொடர்புகளைத் தடுக்க எசுபார்த்தன்களால் முடிந்தது.
பிளாட்டியாவில் நாடுகடத்தப்பட்ட மெகாரியர்கள், மெகாரிடில் வடக்கிலிருந்து தாக்குதல்களைத் தொடங்கி, பாகேவைக் கைப்பற்றினர். சிலவர் ஆட்சிக்குழுவினரின் அனுதாபிகள் இன்னும் மெகாராவில் இருப்பதால், சிலவர் ஆட்சிக்குழுக்கள் கிமு 427 இல் மெகாராவுக்குத் திரும்பினர். பின்னர் சனநாயக ஆதரவாளர்கள் சரிந்தனர்.
போர் தொடங்குகிறது
தொகுமெகராவில் தனக்கு சாதகமாக உள்ள சிலருடன் இரகசியமாக ஒரு ஏற்பாடு செய்துகொண்டு, கிமு 424 ஆண்டு ஒரு நாள் இரவில், ஏதெனியர்களும் அவர்களது கூட்டாளிகளும் மினோவாவிலிருந்து மெகாராவுக்கு வந்து எலியூசுக்குச் சென்றனர். அடுத்து மெகரா மீது படையெடுத்து வந்தனர். பொழுது விடிந்தது, மெகாரியன் சனநாயகப் பிரிவினர் போருக்கு வந்துள்ள ஏதெனியர்களைக் கண்டு சீற்றம் அடைவது போல் நடித்தனர். (அவர்கள் ஏதெனியர்களுக்கு சாதகமானவர்கள்) மேலும் மெகாரியர்களை நகர வாயில்களைத் திறந்து ஏதெனியர்களைத் தாக்கவேண்டும் என்று சனநாயகப் பிரிவினர் கூறினர். பின்னர் மற்ற மெகாரியர்களிடமிருந்து எளிதாக தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக தங்களை எண்ணெயால் பூசிக்கொண்டிருந்தனர். முக்கியமான தருணத்தில், இதில் உள்ள சதி சிலவர் ஆட்சிக்குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் வாயிலும் மூடப்பட்டது.
இந்த திட்டம் வேலைக்கு ஆகாததை உணர்ந்த ஏதென்சு மெகராவின் கிழக்குப் பக்கத்தில் உள்ள நிசாயா என்னும் துறைமுகப் பட்டணத்தைத் தாக்கி கைப்பற்றிக் கொண்டது. மேற்கொண்டு வெற்றிகாண ஏதெனியர்களால் முடியவில்லை. அதற்குள் எசுபார்த்தன் தளபதி பிரசிடாஸ் ஏதெனியர்களை விட ஒரு பெரிய படையுடன் வந்தார். இரண்டு தரப்பினரின் குதிரைப்படைகளும் மெகராவின் சுவர்களுக்கு வெளியே சண்டையிட்டன.
முடிவு
தொகுசிலவர் ஆட்சிக்குழுவினர் எசுபார்ட்டன் தளபதி பிரசிதாஸ் மற்றும் அவரது படையினருக்கு வாயிலைத் திறந்தனர். அவர்கள் நகரத்தின் உள்ளே வந்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினர். ஏதெனியர்கள் பெலோபொன்னேசியர்களுடன் போரிடவில்லை. காலப்போக்கில், பிரசிடாஸ் மற்றும் ஏதெனியர் என இரு தரப்பினரும் நகரத்தை விட்டு வெளியேறினர். பெலோபொன்னேசியப் படைகள் தங்கியிருந்தன.