மெசிட்டைல் புரோமைடு
வேதிச் சேர்மம்
மெசிட்டைல் புரோமைடு (Mesityl bromide) (CH3)3C6H2Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். மெசிட்டிலின் எனப்படும் 1,3,5-மும்மெத்தில்பென்சீனின் வழிப்பெறுதியாக இச்சேர்மம் கருதப்படுகிறது. மெசிட்டீலினின் ஒரு வளையத்திலுள்ள ஐதரசனுக்குப் பதிலாக இங்கு புரோமின் இடம்பெற்றிருக்கும். இச்சேர்மம் நிறமற்ற ஒரு எண்ணெயாகும். குறுக்கு இணைப்பு வினைகளுக்கான நிலையான எலக்ட்ரான் நிறைந்த அரைல் ஆலைடு அடி மூலக்கூறு சேர்மமுமாகும்.[2] மக்னீசியத்துடன் இது கிரிக்னார்டு வினைப்பொருளைக் கொடுக்க வினைபுரிகிறது. கிரிக்கனார்டு வினைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் டெட்ராமெசிட்டிலிரும்பு தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது.[3]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
2-புரோமோமெசிட்டைலீன்
| |
இனங்காட்டிகள் | |
576-83-0 | |
ChemSpider | 21112244 |
EC number | 209-405-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 68473 |
| |
UNII | X99GJ54YDY |
பண்புகள் | |
C9H11Br | |
வாய்ப்பாட்டு எடை | 199.09 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.3220 கி/செ.மீ3 |
உருகுநிலை | −1 °C (30 °F; 272 K) |
கொதிநிலை | 225 °C (437 °F; 498 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P332+313, P337+313, P362, P403+233, P405, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுமெசிட்டிலீனும் புரோமினும் நேரடியாக வினைபுரிந்து மெசிட்டைல் புரோமைடு உருவாகிறது.:[4]
- (CH3)3C6H3 + Br2 → (CH3)3C6H2Br + HBr
மேற்கோள்கள்
தொகு- ↑ "2-Bromomesitylene". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ Farina, Vittorio; Krishnamurthy, Venkat; Scott, William J. (1997). "The Stille Reaction". Organic Reactions. pp. 1–652. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/0471264180.or050.01. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471264180.
- ↑ Lee Irvin Smith (1931). "Isoodurene". Org. Synth. 11: 66. doi:10.15227/orgsyn.011.0066.
- ↑ Lee Irvin Smith (1931). "Bromomesitylene". Org. Synth. 11: 24. doi:10.15227/orgsyn.011.0024.