மேடான்

இந்தோனேசியாவின் வடக்கு சுமாத்திரா மாகாணத்தின் தலைநகரம்
(மெடான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மேடான் (ஆங்கிலம்: Medan; இந்தோனேசியம்: Kota Medan) என்பது இந்தோனேசியா, வடக்கு சுமாத்திரா மாநிலத்தின் தலைநகரம் ஆகும்.[4] இந்தோனேசியாவில் நான்காவது பெரிய நகரமாக விளங்கும் இந்த மாநகரம், ஜாவா தீவிற்கு வெளியில் உள்ள மிகப் பெரிய நகரமாகவும் அறியப்படுகிறது.

மேடான்
Medan
Kota Medan
ميدن - ᯔᯩᯑᯉ᯳
மேடான்-இன் சின்னம்
சின்னம்
மேடான் அமைவிடம்
Map
மேடான் is located in Sumatra
மேடான்
மேடான்
      மேடான் மாநகரம்
ஆள்கூறுகள்: 03°35′22″N 98°40′26″E / 3.58944°N 98.67389°E / 3.58944; 98.67389
நாடு இந்தோனேசியா
பகுதிசுமாத்திரா
மாநிலம் வடக்குச் சுமாத்திரா
நிறுவல்1 சூலை1590
பரப்பளவு
 • மாநகரம்265.1 km2 (102.4 sq mi)
 • நகர்ப்புறம்
478 km2 (185 sq mi)
 • மாநகரம்
2,831.97 km2 (1,093.43 sq mi)
ஏற்றம்
2.5–37.5 m (8–123 ft)
மக்கள்தொகை
 (2023 [1])
 • மாநகரம்24,94,512
 • அடர்த்தி9,400/km2 (24,000/sq mi)
 • நகர்ப்புறம்36,32,000
 • நகர்ப்புற அடர்த்தி7,598/km2 (19,680/sq mi)
 • பெருநகர்47,44,323
 • பெருநகர் அடர்த்தி1,675/km2 (4,340/sq mi)
மக்கள்தொகை
 • இனக்குழுக்கள்
 • சமயம் (2025)
நேர வலயம்இந்தோனேசிய நேரம் +7
தொலைபேசி(+62) 61
போக்குவரத்துBK
இணையதளம்pemkomedan.go.id

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியின் நுழைவாயிலாக மேடான் நகரம் உள்ளது. இந்த நகரம், பெலவான் துறைமுகத்தின் (Port of Belawan) துறைமுக நகரமாகவும் செயல் படுகிறது. வடக்கு சுமாத்திராவின் பொருளாதாரத்தில் சுமார் 60%; வணிகம், வேளாண்மை மற்றும் பதப்படுத்தும் தொழில்களால் நிறைவு செய்யப்படுகிறது. இதில் செம்பனைத் தோட்டங்களின் ஏற்றுமதியும் அடங்கும்.[5]

இந்தோனேசியாவின் தேசிய மேம்பாட்டுத் திட்டமிடல் அமைப்பு; ஜகார்த்தா, சுராபாயா மற்றும் மக்காசார் ஆகியவற்றுடன், இந்தோனேசியாவின் நான்கு முக்கிய மத்திய நகரங்களில் ஒன்றாக மேடான் நகரைப் பட்டியலிட்டுள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் இந்த நகரம், ஜாவா தீவுக்கு வெளியே இந்தோனேசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக அறியப்படுகிறது.[6][7]

இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய வானூர்தி நிலையமான குவாளா நாமு பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்குதான் உள்ளது.

மேடான் நகர மையத்தில் இருந்து துறைமுகம் மற்றும் விமான நிலையத்திற்கான அணுகல்கள்; தொடருந்துச் சேவைகளால் நிவர்த்தி செய்யப்படுகின்றன. இந்தோனேசியாவில், வானூர்தி நிலையங்களைத் தொடருந்துகளுடன் ஒருங்கிணைத்த முதல் நகரம் எனும் பெருமையை மேடான் நகரம் பெறுகிறது. அத்துடன் மலாக்கா நீரிணையை எல்லையாகக் கொண்டு இருப்பதால், மேடான் நகரம், மிக முக்கியமான வணிக நகரமாக மாறுகிறது.

பொது

தொகு

2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மேடானின் நகர எல்லைக்குள் மக்கள் தொகை 2,435,252-ஆக இருந்தது;[8][9] 2023-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வ மக்கள் தொகை மதிப்பீடு 2,474,166 - இதில் 1,231,673 ஆண்களும் 1,242,493 பெண்களும் அடங்குவர்.[1]

சுற்றியுள்ள நகர்ப்புறப் பகுதிகளையும் சேர்த்தால், மேடான் மக்கள் தொகை 3.4 மில்லியனுக்கும் அதிகமாகும்; அந்த வகையில் இந்தோனேசியாவின் நான்காவது பெரிய நகர்ப்புறப் பகுதியாகவும் மாறுகிறது.[10]

சொற்பிறப்பியல்

தொகு

மேடான் என்ற சொல் பாத்தாக் கரோ சொல்லான மதன் (madan) என்பதிலிருந்து பெறப்பட்டிருக்கலாம். இதன் பொருள் 'குணப்படுத்தப்பட்ட', 'ஆசீர்வதிக்கப்பட்ட' அல்லது 'மீட்கப்பட்ட' என்பதாகும்.[11] இந்தச் சொல், வரலாற்று நபரும் மேடான் நகரத்தின் நிறுவனருமான குரு பாடிம்பாஸ் (Guru Patimpus) என்பவருடன் தொடர்புடையது.

இந்த நகரத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் இந்தச் சொல்லின் பழைமையான சான்று, கி.பி. 13-15 ஆம் நூற்றாண்டுகளில் அரு இராச்சியத்தின் (Aru Kingdom) ஆட்சிக் காலத்தில் இருந்து கிடைக்கிறது.[12]

மற்றொரு பிரபலமான கோட்பாடு, மேடான் என்பது மலாய் மொழியைச் சேர்ந்தது என்றும்; அதாவது 'வயல்' என பொருள்படும் என்றும் கூறுகிறது. மலாய் மொழியில் மேடான் (Medan) என்ற சொல் மலையாளச் சொல்லான மைதானம் (മൈതാനം, 'வயல்') என்பதிலிருந்து பெறப்பட்டு இருக்கலாம். இது தமிழ்ச் சொல்லான மைதான்-ஆம் (மைதானம், 'தரை') எனும் சொல்லுடன் தொடர்புடையது.[13]

வரலாறு

தொகு
 
மேடானின் நிறுவனர் குரு பத்திம்பஸ்
 
1886 ஆம் ஆண்டு மேடானின் சின்னம்; புகையிலை செடியை குறித்துக் காட்டுகிறது

ஒரு காலத்தில் அரு இராச்சியம் இருந்த இடத்தில், மேடான் நகரம் தற்போது அமைந்துள்ளது. இந்த நகரம் காரோ மக்களால் நிறுவப்பட்டு, 13 மற்றும் 16-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் செழித்து வளர்ந்தது.[14] மேடானுக்கு அருகில் பல தொல்பொருள் இடங்கள் எஞ்சியுள்ளன.

அவற்றில் அம்பரான் பேராக் (Hamparan Perak) பகுதியில் உள்ள துறைமுகக் குடியேற்றமான கோத்தா ரெண்டாங் (Kota Rentang);[15] மேடான் மரேலானில் (Medan Marelan) உள்ள ஒரு பழங்கால வணிகத் தளமான கோத்தா சீனா;[16] மற்றும் டெலி துவாவில் (en:Deli Tua) உள்ள கோட்டை இடிபாடுகளான பெந்தெங் புத்திரி இஜாவ் (Benteng Putri Hijau) ஆகியவை அடங்கும்.

அச்சே சுல்தானகம்

தொகு

16-ஆம் நூற்றாண்டில், கரோ பிராந்தியத்தின், கரோ இனத்தைச் சேர்ந்த குரு பத்திம்பஸ் செம்பிரிங் பெலாவி (Guru Patimpus Sembiring Pelawi) என்பவர்; பெமெனா (Pemena) எனும் தன்னுடைய இனம் சார்ந்த மதத்தில் இருந்து இசுலாமியத்திற்கு மதம் மாறி, பூலோ பிரயான் சிற்றரசின் இளவரசியை மணந்தார்.

பின்னர் அவர்களின் இரண்டு மகன்களான கோலோக் மற்றும் கெசிக் ஆகியோருடன் சேர்ந்து, அந்தத் தம்பதியினர் டெலி ஆறு மற்றும் பாபுரா ஆறுகளுக்கு இடையில் மேடான் கிராமத்தை நிறுவினார்கள்.

1632-ஆம் ஆண்டில், கோகா பகலவான் (Gocah Pahlawan) என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்த அச்சே சுல்தானகம் மேடானை உள்ளடக்கியதாக விரிவடைந்தது. 1669-இல் பெருங்கிட் (Perunggit) என்பவர் ஆட்சிக்கு வந்தார். அச்சே சுல்தானகத்தில் இருந்து டெலி சுல்தானகத்தை விடுவித்து தன்னாட்ட்சி பெற்ற சுல்தானகமாக அறிவித்தார். அந்தக் கட்டத்தில் மேடான் நகரம், டெலி சுல்தானகத்தில் இணைக்கப்பட்டது.

புகையிலை வணிகம்

தொகு
 
1900-ஆம் ஆண்டு மேடானில் உள்ள ஒரு புகையிலைத் தோட்டத்தில் விதைப் படுகைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள்

1860-ஆம் ஆண்டுகளில் மேடான், புகையிலை வணிகத்தின் மையமாக இருந்தது. 1869-ஆம் ஆண்டு சுயஸ் கால்வாய் திறக்கப்பட்டதன் மூலம் புகையிலை வணிகம் மேலும் தொடர்ந்து வளர்ந்தது. 1860-ஆம் ஆண்டுகளில் மேடான் நகரம், இந்தோனேசியாவின் புகையிலை வணிகத்தின் மையமாகவே புகழ்பெற்று விளங்கியது. 1869-ஆம் ஆண்டு சுயஸ் கால்வாய் திறக்கப்பட்டதன் மூலம் புகையிலை வணிகம் மேலும் தொடர்ந்து வளர்ச்சி பெறறது.

1873 முதல் 1924 வரை டெலி சுல்தானகத்தை ஆட்சி செய்த சுல்தான் மாமுன் அல் ரஷீத் பெர்காசா அலமியா (Sultan Ma'mun Al Rashid Perkasa Alamyah) என்பவர் தன் இராச்சியத்தின் தலைநகரை மேடான் நகருக்கு மாற்றினார். இவர் தொடக்கக்கால மேடானை உருவாக்கியவர் என்று அறியப்படுகிறார்.

நிலவியல்

தொகு
 
மேடானில் பத்தாக் இனத்தவர் நடனம்

மேடான், சுமாத்திரா தீவின் வடகிழக்கு பகுதியில், வடக்கு சுமாத்திரா மாநிலத்தில் உள்ளது. மற்றும் இந்த நகரம் டெலி செர்டாங் பிராந்தியத்தின் (Deli Serdang Regency) நிலப்பகுதியில் உள்ளது. இந்த நகரத்தின் மூன்று புறங்களிலும் டெலி செர்டாங் பிராந்தியம் எல்லையாக உள்ளது. வடக்கே மலாக்கா நீரிணையாலும் சூழப்பட்டுள்ளது.

டெலி ஆறு மற்றும் பாபுரா ஆறு ஆகிய இரு ஆறுகளும் மலாக்கா நீரிணையில் பாயும் இடத்தில் உருவான இயற்கைத் துறைமுகமான மேடானுக்கு வணிகத் துறைமுக வளர்ச்சிக்கு அவை பெரிதும் பங்களித்துள்ளன.[17]

மேடானின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 2.5 முதல் 37.5 மீ (8 அடி 2 அங்குலம்; மற்றும் 123 அடி 0 அங்குலம்) வரை வேறுபடுகிறது. தெற்கே பாரிசான் மலைகள் உள்ளன. மேடான் நகரத்திலிருந்து 50 முதல் 70 கிமீ (31 முதல் 43 மைல்) தொலைவில் சிபயாக் மலை; சினாபுங் மலை போன்ற எரிமலைகளும் உள்ளன.

காலநிலை

தொகு

மேடான் வெப்பமண்டல மழைக்காடு காலநிலையைக் கொண்டுள்ளது (கோப்பென் காலநிலை வகைப்பாடு: Af) உண்மையான வறட்சி காலம் இல்லை.[18] சனவரி அதன் வறட்சி மாதம்; சராசரியாக அக்டோபர் மழைப்பொழிவில் மூன்றில் ஒரு பங்கு மழைப்பொழிவைக் கொண்டுள்ளது,

மொத்த ஆண்டு மழைப்பொழிவு சுமார் 2,200 மிமீ (87 அங்குலம்) ஆகும். இலையுதிர்காலம் (செப்டம்பர் - நவம்பர்) மழைக்காலமாகும். மேலும் குளிர்காலத்தில் (திசம்பர் மற்றும் சனவரி) வெப்பநிலை கூடுதல் குளிராக இருக்கும். மேடான் நகரத்தில் ஆண்டு முழுவதும் சராசரியாக 27 °C (81 °F) வெப்பநிலை இருக்கும்.


காட்சியகம்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Kota Medan Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.1271)
  2. "Demographia World Urban Areas, 16th Annual Edition" (PDF). February 2020. Archived (PDF) from the original on 3 May 2018. Retrieved 24 June 2020.
  3. "PU-net". perkotaan.bpiw.pu.go.id. Archived from the original on 3 August 2020. Retrieved 31 August 2020.
  4. Kumar, Pankaj; Mishra, Binaya Kumar; Avtar, Ram; Chakraborty, Shamik (2021). "Quantifying future water environment using numerical simulations: a scenario-based approach for sustainable groundwater management plan in Medan, Indonesia". Global Groundwater. Elsevier. pp. 585–596. ISBN 9780128181720. Medan is the capital city of North Sumatra province.
  5. "Medan Business: Top Sectors, Economies, Business Setup". 23 July 2021. Retrieved 12 July 2022.
  6. "26. Z. Irian Jaya". bappenas.go.id (Word DOC) (in இந்தோனேஷியன்). Archived from the original on 5 July 2019. Retrieved 16 May 2019.
  7. Geografi. Grasindo. ISBN 9789797596194. Archived from the original on 5 August 2020. Retrieved 19 August 2019.
  8. "Jumlah Penduduk menurut Jenis Kelamin dan Kabupaten/Kota Sumatra Utara 2011–2016". Badan Pusat Statistik Provinsi Sumatra Utara (in இந்தோனேஷியன்). 3 October 2017. Archived from the original on 18 May 2019. Retrieved 8 April 2018.
  9. Badan Pusat Statistik, Jakarta, 2021.
  10. "Demographia World Urban Areas, 14th Annual Edition" (PDF). April 2019. Archived (PDF) from the original on 7 February 2020. Retrieved 9 February 2020.
  11. Joustra, M. (1907). Karo-Bataksch Woordenboek [Karo Batak dictionary].
  12. Pelly, Usman; R., Ratna; Kardarmadja, M. Sunjata (1984). Sejarah sosial daerah Sumatra Utara, Kotamadya Medan. Indonesia: Ministry of Education, Culture, Research, and Technology.
  13. Meuraxa, Dada (1973). Sejarah kebudayaan suku-suku di Sumatera Utara. Indonesia: Sasterawan.
  14. Dominik Bonatz; John Miksic; J. David Neidel, eds. (2009). From Distant Tales: Archaeology and Ethnohistory in the Highlands of Sumatra. Cambridge Scholars Publishing. ISBN 978-1-4438-0784-5. Archived from the original on 28 December 2020. Retrieved 5 October 2020.
  15. Juraidi (23 August 2008). "Menelusuri Jejak Kerajaan Aru" (in id). Kompas.com இம் மூலத்தில் இருந்து 17 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170917215211/http://entertainment.kompas.com/read/2008/08/23/14084531/menelusuri.jejak.kerajaan.aru. 
  16. "Museum Kota Cina, Situs Awal Perdagangan Penting di Pantai Timur Sumatera Abad XI". SeMedan.com (in இந்தோனேஷியன்). 3 January 2016. Archived from the original on 14 July 2017. Retrieved 12 May 2017.
  17. Usman Pelly, Sejarah Kota Madya Medan, 1950–1979; Departemen Pendidikan dan Kebudayaan R.I., Proyek Inventarisasi dan Dokumentasi Sejarah Nasional, Direktorat Sejarah dan Nilai Tradisional, 1985
  18. "Medan, Indonesia Köppen Climate Classification (Weatherbase)". Weatherbase. Archived from the original on 26 September 2015. Retrieved 4 July 2015.
  19. "KUALANAMU MEDAN Climate: 1991–2020". Starlings Roost Weather. Retrieved 25 December 2024.
  20. Worldwide Bioclimatic Classification System. "INDONESIA – POLONIA". www.globalbioclimatics.org. Retrieved 20 February 2019.

சான்றுகள்

தொகு
  • Ricklefs, M. C., A History of Modern Indonesia since c. 1300 (2de édition), 1993

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேடான்&oldid=4230987" இலிருந்து மீள்விக்கப்பட்டது