மெடினைன் சண்டை
மெடினைன் சண்டை (Battle of Medenine) என்பது இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. துனிசியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நாசி ஜெர்மனியின் படைகள் துனிசியாவிலிருந்து பிரித்தானியப் படைகளை விரட்ட முயன்று தோற்றன. இது காப்ரி நடவடிக்கை (Operation Capri) என்றும் அழைக்கப்படுகிறது.
மெடினைன் சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
துனிசியப் போர்த்தொடரின் பகுதி | |||||||
துனிசியப் போர்க்கள வரைபடம் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய இராச்சியம் நியூசிலாந்து சுதந்திர பிரான்ஸ் | ஜெர்மனி இத்தாலி |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
பெர்னார்ட் மோண்ட்கோமரி | எர்வின் ரோம்மல் |
1943 மார்ச்சில் வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்த அச்சுப் படைகள் துனிசியாவில் சிக்கிக் கொண்டிருந்தன. மேற்கில் ஜார்ஜ் பேட்டன் தலைமையிலான அமெரிக்கப் படைகளும் கிழக்கில் பெர்னார்ட் மோண்ட்கோமரி தலைமையிலான பிரித்தானிய 8வது ஆர்மியும் துனிசியாவை சுற்றி வளைத்திருந்தன. மேல்நிலை உத்தியளவில் அச்சு நாடுகளுக்குத் தோல்வி உறுதி என்று ஆனபின்னரும் அச்சுத் தலைவர்கள் வடக்கு ஆப்பிரிக்க முனையில் தொடர்ந்து போரிட்டு வந்தனர். பிரித்தானியப் படைகள் கிழக்கில் இறுதிகட்ட அரண்நிலையான மாரெத் அரண்கோட்டினைத் தாக்கத் தயாராகி வந்தன. இத்தாக்குதலைத் தாமதப்படுத்த ஜெர்மானியத் தளபதி எர்வின் ரோம்மல் மெடினைன் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகளைத் தாக்கினார்.
மார்ச் 6ம் தேதி மூன்று ஜெர்மானிய கவசப் படைகள் மெடினைனில் இருந்த பிரித்தானியப் படைகளைத் தாக்கின. ரோம்மலின் தாக்குதல் நிகழப் போகிறது என்பதை அல்ட்ரா திட்டத்தின் (ஜெர்மானிய வானொலி செய்திகளை இடைமறித்து, எனிக்மா ரகசியக் குறியீடுகளை உடைத்து அவற்றைப் படிக்கும் திட்டம்) மூலம் பிரித்தானியர்கள் முன்னரே அறிந்து கொண்டனர். இதனால் பலமான அரண் நிலைகளைத் தயார் செய்து இத்தாக்குதலை எதிர்கொண்டனர். நேச நாட்டு பீரங்கிக் குழுமங்கள் தாக்கும் ஜெர்மானிய டாங்குகள் மீது குண்டு மழை பொழிந்தன. பல டாங்குகள் அழிக்கப்பட்டதால் ஜெர்மானியப் படைகள் தங்கள் தாக்குதலைக் கைவிட்டுப் பின்வாங்கன. துனிசியப் போர்த்தொடரில் அச்சுப் படைகள் நடத்திய கடைசித் தாக்குதல் நடவடிக்கை இதுவே. தோல்வி உறுதி என்று தெரிந்த பின்னால் ஜெர்மானிய போர்த்தலைமையகம் ரோம்மலை ஐரோப்பாவுக்குத் திரும்பும்படி உத்தரவிட்டது. அவருக்கு பதிலாக ஹான்ஸ்-யூர்கன் வோன் ஆர்ணிம் அச்சுப் படைகளுக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.