மெட்டா-சைமீன்
மெட்டா-சைமீன் (m-Cymene) என்பது C10H14 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரோமாட்டிக் ஐதரோகார்பன் என வகைப்படுத்தப்படும் இச்சேர்மத்தின் கட்டமைப்பில் ஒரு பென்சீன் வளையமும் அதன் மெட்டா நிலையில் ஒரு மெத்தில் குழுவும் ஓர் ஐசோபுரோப்பைல் குழுவும் இணைக்கப்பட்டுள்ளன. எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய நிறமற்ற ஒரு திரவமாக காணப்படுகிறது. தண்ணீரில் கிட்டத்தட்ட கரையாது, ஆனால் கரிம கரைப்பான்களில் கரையும். 1-மெத்தில்-3-(புரோப்பேன்-2-யில்)பென்சீன் என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-மெத்தில்-3-(புரோப்பேன்-2-யில்)பென்சீன் | |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
535-77-3 | |
ChEBI | CHEBI:28768 |
ChemSpider | 10355 |
EC number | 208-617-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10812 |
| |
UNII | 10ZH8R921S |
பண்புகள் | |
C10H14 | |
வாய்ப்பாட்டு எடை | 134.22 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.86 கி/செ.மீ3 |
உருகுநிலை | −63.8 °C (−82.8 °F; 209.3 K) |
கொதிநிலை | 175 °C (347 °F; 448 K) |
42.5 மி.கிராம்/லிட்டர் | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீப்பற்றும் |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H226 | |
P210, P233, P240, P241, P242, P243, P280, P303+361+353, P370+378, P403+235, P501 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 47.8 °C (118.0 °F; 320.9 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மாற்றியங்கள்
தொகுமெட்டா-சைமீனைத் தவிர, ஆர்த்தோ-சைமீன், பாரா-சைமீன் எனப்படும் இரண்டு வடிவியல் மாற்றியங்களும் காணப்படுகின்றன. ஆர்த்தோ-சைமீனில் ஆல்க்கைல் குழுக்கள் பென்சீன் வளையத்தின் ஆர்த்தோ நிலையிலும், பாரா-சைமீனில் ஆல்க்கைல் குழுக்கள் பென்சீன் வளையத்தின் பாரா- நிலையிலும் பதிலீடு செய்யப்படுகின்றன. பாரா- சைமீன் மிகவும் பொதுவான மற்றும் ஒரே இயற்கை மாற்றியம் ஆகும். மூன்று மாற்றியங்களும் சேர்ந்து சைமீன்களின் குழுவை உருவாக்குகின்றன.
தயாரிப்பு
தொகுதொலுயீனுடன் புரோப்பைலீனைச் சேர்த்து ஆல்க்கைலேற்ற வினைக்கு உட்படுத்தினால் மெட்டா-சைமீன் உருவாகிறது.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kirk-Othmer Encyclopedia of Chemical Technology". Kirk‐Othmer Encyclopedia of Chemical Technology. (2003). DOI:10.1002/0471238961.0112112508011313.a01.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471238961.
- ↑ Griesbaum, Karl; Behr, Arno; Biedenkapp, Dieter; Voges, Heinz-Werner; Garbe, Dorothea; Paetz, Christian; Collin, Gerd; Mayer, Dieter; Höke (2005), "Hydrocarbons", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a13_227