மெட்ராஸ் கூரியர்

மெட்ராஸ் கூரியர் (Madras Courier) என்பது பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தின், மதராசில் வெளியிடப்பட்ட முதல் செய்தித்தாள் மற்றும் இந்தியாவில் முதல் பத்திரிகை ஆகும். இது அந்தக் காலத்தின் முன்னணி செய்தித்தாளாகவும், அரசாங்க அறிவிப்புகளை அச்சிடுவதற்கான அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட செய்தித்தாளாகவும் இருந்தது. இது ஆங்கில மொழி இதழாக 1785 அக்டோபர் 12 அன்று துவக்கபட்டது. இதை துவக்கியவர் ரிச்சர்ட் ஜான்ஸ்டன் என்பவராவார். ஹக் பாய்ட் என்பவர் இதன் முதல் ஆசிரியராக இருந்தார். [1] [2] [3] [4] 1819 சனவரி 19 அன்று இந்த இதழ் நிறுத்தபட்டது. [5]

மெட்ராஸ் கூரியர்
உரிமையாளர்(கள்)ரிச்சர்ட் ஜான்ஸ்டன்
வெளியீட்டாளர்ரிச்சர்ட் ஜான்ஸ்டன்
நிறுவியது12 அக்டோபர் 1785
மொழிஆங்கிலம்
வெளியீட்டு முடிவு19 சனவரி 1819
தலைமையகம்பிரித்தானிய இந்தியா, சென்னை மாகாணம், மதராசு

12 அக்டோபர் 2016 அன்று, மெட்ராஸ் கூரியர் எண்மயப்படுத்தபட்டு புதுப்பிக்கப்பட்டு வெளியீடப்பட்டது. இது தெற்காசிய டிஜிட்டல் மீடியா விருதுகள் 2018 இல் சிறந்த டிஜிட்டல் நியூஸ் ஸ்டார்ட்-அப் விருதை வென்றது. [6] [7]

குறிப்புகள்

தொகு
  1. "Memories of The Mail". The Hindu. 11 June 2003. Archived from the original on 24 அக்டோபர் 2003. பார்க்கப்பட்ட நாள் 27 August 2012.
  2. "Media". Encyclopedia of India. 1 January 2006. பார்க்கப்பட்ட நாள் 27 April 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "A look at the changing scene". Press Trust of India. Archived from the original on 12 April 2015. பார்க்கப்பட்ட நாள் 12 April 2015.
  4. "The English Press in Colonel India". S.M.A. Feroze. The Dawn. 22 April 2017. பார்க்கப்பட்ட நாள் 12 May 2020.
  5. Gillies, Stewart. "Early Indian Newspapers". www.bl.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-21.
  6. "Awards". Madras Courier (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-10-05. பார்க்கப்பட்ட நாள் 2019-06-12.
  7. "South Asian Digital Media Awards 2018 | WAN-IFRA Events". events.wan-ifra.org. Archived from the original on 2020-06-30. பார்க்கப்பட்ட நாள் 2019-06-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்ராஸ்_கூரியர்&oldid=3568438" இலிருந்து மீள்விக்கப்பட்டது